மறைக்கப்பட்ட வேண்டிய உண்மைகள்
மறைக்கப்பட்ட வேண்டிய உண்மைகள்


இரவு உணவை எடுத்து வைத்துவிட்டு, தலைவலி என்று படுத்திருந்த தன் மகள் மேகலையை சாப்பிட எழுப்பினாள் சரளா.
அவள் எழுந்து திடீரென முடியை பிய்த்துக்கொண்டு கத்த ஆரம்பித்தாள். மேலே பார்த்து ஏய் உன்ன சும்மா விடமாட்டேன் , நா இனி அழமாட்டேன், என்ட வந்துரு-னு சம்பந்தம் இல்லாமல் கத்தினாள். சரள படபடப்புடன் "என்னாச்சு மேகலை வாம்மா அம்மாட்ட வா ,என்னாச்சுடா ? கெட்டகனவு எதும் கண்டியா?" என கேட்டாள்.
மேகலை எங்கோ பார்த்துக்கெண்டு பிதற்றிக்கொண்டிருந்தாள். சரளா எதுவும் புரியாமல் தன் கணவனை கூப்பிட்டாள். இருவரும் மேகலையிடம் பேசி பார்த்தனர் அவள் எதையும் கேட்காமல் சுவற்றைப்பார்த்து பேசிக்கொண்டிருந்தாள்.
புள்ளைக்கு காத்து கருப்பு எதும் புடிச்சுருக்குமோ- ன்னு பயந்து போய் பூசாரிகிட்ட கூட்டிட்டுப்போனாங்க. அங்கு சென்றதும் திடீரென அலர ஆரம்பித்தாள். அவர் மந்திரிச்சுவிட்டு வாய்ல விபூதிய போட்டு புள்ள பயந்துருக்கு இந்த கயித்த கைல கட்டுங்க சரியா போய்ரும்-னு அனுப்பி வைத்தார்.
இரண்டு நாள் நன்றாக இருந்தாள் , மூன்றாம் நாள் திரும்பவும் அது போன்றே கத்த ஆரம்பித்தாள். சரியாக சாப்பிட்டு,உறங்கி பல நாள் ஆனது, ஏதோ உள்ளிருந்து ஆட்டி வைப்பதுபோல் அவள் இருந்தாள்.
டவுனிலிருந்து அவள் அத்தை கலா அவளை பார்க்க வந்திருந்தாள் , கலா மேகலையை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்வதாக சொல்லி உடன் அழைத்துச் சென்றாள்.
மனநல மருத்துவர் மேகலையிடம் சில கேள்விகள் கேட்டார், அவள் எந்த பதிலும் கூறவில்லை. அவர் கலாவை வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு ,மேகலையிடம் பேசினார்.
"உனக்கு என்ன பிரச்சனை என்கிட்ட சொல்லு, நா யார்கிட்டையும் சொல்லமாட்டேன், நீ பேசுனாதான் பிரச்சனை என்னனு தெரியும்" என கூறினார்.
மேகலை அழ ஆரம்பித்தாள்," நா சூர்யாவ லவ் பன்னேன் அவன்னா எனக்கு உயிரு, ஆனா அவன் என்ன விட்டுட்டு வேற பொண்ண கல்யாணம் பன்னிக்கிட்டான்".
"அத என்னால ஏத்துக்க முடியல, அம்மா அப்பாகிட்டையும் இதபத்தி பேச முடியல". "மனசுக்குள்ளே போட்டு அடக்கி வச்சு எனக்கு பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு டாக்டர்" ."கண்டிப்பா அவன் இல்லாம என்னால வாழவே முடியாது, அடிக்கடி சாகலாம்னு தோனுது, இதையெல்லாம் அத்தைகிட்ட சொன்னா ,அம்மா அப்பாகிட்ட சொல்லிருவாங்க அவங்களுக்கு இது எதுவும் தெரிய வேணாம்" என சொல்லி அழுதாள்.
நா சூர்யாகிட்ட இதபத்தி பேசுறேன்னு அவன் நம்பர் வாங்கிக் கொண்டார்.கவலைபடாத ,எல்லாம் சரியாகிடும், உன் அத்தைகிட்ட உனக்கு மாத்திரை கொடுத்து அனுப்புறேன் ,சரி நீ போய் வெளில உட்காரு என்றார்.
டாக்டர் கலாவிடம் அவள் சொன்னவற்றைக் கூறி இது அவள் பெற்றோருக்குத் தெரிய வேண்டாம், "ஆனா அந்த சூர்யாகிட்ட நா பேசுனேன் அவருக்கு 35 வயது ,திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்காங்க, மேகலை தினமும் காலேஜ் போய்ட்டு வர பஸ்ல தான் அவரும் போவாராம். உட்கார இடம் இல்லாததால தினமும் அவர் பேக்க வச்சிருக்க சொல்லி மேகலைகிட்ட கொடுத்துட்டு படி பக்கத்துல நிப்பாராம்.
ஒருநாள் அவர் மனைவியோட அந்த பஸ்ல ஏறினப்ப, மேகலை "என்ன ஏமாத்திட்ட நீ, யாரு அவ புதுசா"ன்னு கூச்சலிட ,அவர் நடப்பதறியாது திகைத்துப்போனாராம். அதுக்கப்பறம் அவள பாக்கலன்னு சொன்னார்" என சொல்லி முடித்தார்.
மேகலை தானாகவே கற்பனை செய்துகொண்டு அனைத்தையும் பேசுகிறாள் என்பது தெளிவாகியது. இதற்கு என்ன டாக்டர் ட்ரீட்மென்ட் -னு கலா கேட்க, சூர்யாவை தவறாக சித்தரிப்பதே இதற்கு வழி, அப்பொழுதுதான் அவள் அவனை வெறுத்து மறந்து நார்மலா ஆவா, இதபத்தி சூர்யாகிட்ட சொன்னேன் நல்ல மனிதர் ஒப்புக்கொண்டார் என கூறினார். ஒரு வாரம் கழித்து ரிவ்யூ வரசொல்லி அனுப்பினார்.
ஒருவாரம் கழிச்சு போனப்ப, டாக்டர் மேகலையிடம் சூர்யா ஒரு ஏமாற்றுகாரன் , நிறைய பெண்கள் அவனை நம்பி ஏமாந்துட்டாங்க ,நீ நல்ல வேலயா தப்பிச்சுக்கிட்டனு , அவன் தம் மனைவி, தோழிகளுடன் நின்ற போட்டோவை காண்பித்து சொன்னார். முதலில் நம்ப மறுத்தாள் ,பின் நாட்கள் செல்ல செல்ல அவனை மறக்க ஆரம்பித்தாள்.
அவள் குணமாவதை உணர்ந்த கலா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை நல்லா தூங்குனா சரியா போய்ரும்னு டாக்டர் சென்னதா சரளாகிட்ட கலா சொன்னாள்.
தன் மகளுக்கு இருந்த மன நோய் பற்றிய உண்மையும், சூர்யா பற்றிய உண்மையையும், தனக்கு நடந்தவற்றை அவள் அறியாததும் மறைக்கப்பட்ட உண்மையே...