Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Delphiya Nancy

Drama Romance

4.2  

Delphiya Nancy

Drama Romance

கவிதைக் கொலை

கவிதைக் கொலை

2 mins
1.8K


கவிதையால் கொல்லும் காதலனை பார்த்துருப்பிங்க , கவிதையையே கொல்லும் காதலனை பார்திருக்கிறீங்களா? இதோ நமது கதையின் ஹீரோ தான் அவர்.


    அவனுக்கு திருமணமான நாள்முதல் தன் மனைவியை பற்றியோ அல்லது அவளின் சமையல் பற்றியோ கவிதை சொல்வது வழக்கம். தன் மனைவி உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென எழுப்பி ,

        "அன்பே நீ கண்மூடி தூங்குவதால்

        இந்த உலகமே இருட்டாகிவிட்டது,

         கொஞ்சம் கண்களை திற,

           உலகம் ஒளி பெறட்டும்" என்றான்.



மனதில் மகிழ்ச்சி இருந்தாலும், தூக்கத்த கெடுக்காத போ என்று உறங்கிவிட்டாள்.

      அன்று விருந்திற்காக அனைவரும் சமையல் செய்ய உதவினர், உணவும் சுவையாக இருந்தது, நம்ம ஆள் உடனே, என் பொண்டாட்டி பூண்டு உரிச்சா அதான் பிரியாணி இவ்வளோ சுவைனு

சொல்ல , அனைவரும் சிரிக்க, அந்த இடமே கலகலவென மாறிற்று.

 

      இப்போ நம்ம ஆள் அடுத்த லெவலுக்கு போய்,

தன் தாய்,சகோதரிகள் என அனைவரிடமும் தன் மனைவியை பற்றி கவிதை சொல்ல ஆரம்பித்தான். அவை;

 " என் மனைவி ஊற்றியதனால் தான் தோசை வட்டமா இருக்கு"


 " உன் விழி அசைவு போதும் நான் அனைத்தையும் செய்து முடிக்க"


     "உன் சித்தம் ,என் செயல்"


  "நீ வந்த பிறகுதான் தெரியும் என் வீடு இவ்வளவு அழகு என்று"


"உன் மூச்சுக்காற்றை சுவாசிக்கும் போதெல்லாம்

புத்துயிர்ப்படைகிறேன்".

   

     இப்படியே ஒவ்வொரு நாளும் சொல்ல ,அவன் போன் பன்னினாலே அண்ணா கொல்லாத , தாங்க முடியல , ஐயோ பாவம் ! அண்ணி என கிண்டல் செய்தனர் அவன் சகோதரிகள்.


    ஒருநாள் சாப்பிங் சென்றுவிட்டு வர நேரமாகிற்று. ஏன்டா இந்த இருட்டுல வர-னு

அவன் அம்மா கேட்க,

  

 "என் மனைவியின் முகத்திலிருந்துதான் நிலா ஒளி எடுத்துக்கொள்ளும்" அதான் ஒளி கொடுத்துட்டு வர கொஞ்சம் நேரமாகிருச்சுன்னு சொன்னான். போடா எருமை, ராத்திரில வெளில போகாதீங்கன்னு சொன்னா எப்புடி சமாளிக்கிறான் பாரு என சிரித்துக்கொண்டே சென்றார்.


    வெளிநாட்டில் வேலைக்கு சென்றவன் திரும்பும் நாள் வந்தது, ஆனால் அவன் வரவில்லை. ஏன் இன்னும் வரவில்லை என அவள் கேட்டதற்கு,

  "உன்னையே நினைத்து           உருகிக்கொண்டிருப்பதால் கடல் மட்டம் உயர்ந்துவிட்டது" அதனால் கப்பல் வர முடியவில்லை, கடல் மட்டம் குறைந்ததும் விரைந்து வந்துவிடுவேன் என்றான்.

    

      ஒருநாள் ,பூ வாங்கி வந்தான்,அது மொட்டாக இருந்தது. அவள் கூந்தலில் அந்த பூவை வைத்ததும் என்னவோ சொல்ல வாயெடுத்தான்

"என்னடா உன் பொண்டாட்டி வச்சதுனால தான் பூவே மலர்ந்துச்சு அதானே சொல்ல வர? ",என அனைவரும் கலாய்க்க ஆரம்பித்தனர்.


    அவள் வெட்கம் தாளாமல், "இனி எல்லாரும் இருக்கும்போது அப்படி பேசாதீங்க"

என்றாள். அதற்கு அவன்

யார் என்ன சொன்னால் எனக்கென்ன ? என் பொண்டாட்டிய நா அப்படிதான் கொஞ்சுவேன் என்பான்.


அவளோ ஒவ்வொரு முறையும் அவன் அன்பின் வெளிப்பாட்டை எண்ணி பூரித்துப்போவாள்.

   அச்சமயம் சிரிப்பு வந்தாலும், அவன் வார்த்தைகள் அவளை தேவதைப்போல் உணரவைத்தது.


அப்பொழுதுதான் புரிந்தது

கவிதை என்பது வார்த்தைகளை கோர்ப்பது மட்டுமல்ல, உள்ளார்ந்த உணர்வுகளை சேர்ப்பது என்று.

    எப்படியோ நம்ம ஹீரோ ரியல் ஹீரோ தான்,

அந்த பொண்ணு நம்ம ஹீரோவோட அன்பையும் காதலையும் பெற கொடுத்து வைத்தவள் தான்...


இவையே என் நினைவால் நான் பறக்க விட்ட பறவைகள், பறவைகளை சுட்டு சாப்பிட்டு விடாதீர்கள், ப(பி)டித்து ரசித்துவிட்டு விட்டுவிடுங்கள்..நன்றி

   

  



Rate this content
Log in

More tamil story from Delphiya Nancy

Similar tamil story from Drama