Ponnambapalam Kulendiren

Tragedy

4  

Ponnambapalam Kulendiren

Tragedy

குமண குளக் கழுகுகள்

குமண குளக் கழுகுகள்

4 mins
272



தமிழ் நாட்டில் கொங்கு மண்டலத்தில் இருந்த ஒரு சிற்றரசர்களில் கொடுப்பதில் சிறந்த கொடை வள்ளல், கடையெழு வள்ளல் காலத்திற்குப் பிற்பட்ட சிற்றரசன், முதிர மலையைச் சார்ந்த நாட்டை ஆண்டு வந்த குறுநில மன்னன் குமணன் என்பவனே அந்த கொடை வள்ளல்.. முதிர மலை பழனி மலைத்தொடரில் உள்ளது. மலையின் அடியில் குமண மங்கலம் எனும் ஒரு சிற்றூர் உண்டு.

குமண மன்னன் கல்வியில் சிறந்தவர்களை ஆதரித்தான். தமிழ்ப் புலவர்களைத் தெய்வமாக எண்ணி மதித்துப் போற்றினான். தன்னை சந்திக்க வரும் புலவர்களுக்கு அவர்கள் வேண்டும் பொருள்களைக் கொடுத்து அவர்களின் வறுமை நிலையைப் போக்கும் பண்பு படைத்தவர்.

தமிழ் நாட்டில் குமண மங்கலம் எனும் ஒரு சிற்றூர் இருப்பது போல் இலங்கையில் தென் கிழக்குப் பகுதியில் பொத்துவில்லுக்கு தெற்கே 35 கி மீ தூரத்தில் குமண குளம் இலங்கையின் தேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள யால விலங்குகள் சரணாலயத்தில் உள்ளது. பல தேசங்களிலிருந்து பல ஆயிரம் மைல்கள் பறந்து சுற்றுலாப் பயணிகள் போல் வரும் கழுகு, பல இன கொக்குகள், ஆந்தைகள், வாத்துக்கள் போன்ற 260 இனப் பறவைகள் வருவதுண்டு


யால விலங்குகள் சரணாலயத்தின் ஒரு எல்லையாகக் குமண காணப்படுகிறது . இங்கு ஓடிக்கொண்டிருக்கும் 116 கி மீ நீளமுள்ள கும்புகன் ஓயா எனும் ஆற்றின் ஒரு கரையானது குமண வனப் பகுதியில் அமைந்துள்ள

 

காலங்களில் விலங்குகள்அல்லது பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வு செய்வது “வலசை” போதல் எனப்படும். அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன. வலசை போகும் பறவைகள், பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தை கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில் தான் தனது இருப்பிடத்தை அறிகின்றன.

பறவைகளின் சுவர்க்க பூமியெனக் கருதப் படும் குமண சிற்றூருக்கு ஒரு வரலாறு உண்டு ஆசியாவிலேயே பறவைகளின் சிறந்த சரணாலயங்களில் ஒன்று இது பொத்துவில்லில் இருந்து தெற்கே 35 கி மீ தூரத்தில் உள்ளது . சுமார்

600 ஏக்கர் பரப்பளவு உள்ள குமண குளத்துக்குக் கும்புக்கன் ஓயாவில் இருந்து அரை மைல் தூரத்துக்கு வாய்க்கால் வழியே நீர் போகிறது இக்குளம் பறவைகளுக்கும் மட்டுமல்ல வன விலங்குகளுக்கும் நீர் தடாகமாக இயங்குகிறது

குமணப் பகுதி கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழங்கால நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.அங்கு கல்வெட்டுகள் உண்டு.

 கி.மு. இரண்டாம் மற்றும் 1 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. கதிர்காமமும், உகந்த மலை முருகன் கோவில்கள் இந்த பகுதியில் காணப்படுவதால் இந்த பகுதி காட்டில் வரத வேட்டையாடுவதில் சிறந்தவர்களான வேடவர்கள் வாழும் பகுதியாக உள்ளது இந்த பகுதியில் நீட்டவோ என்ற குள்ள வேடவ இனம் வாழ்ந்ததுக்கு ஆதாரமுண்டு.

இங்கு வரும் 290 இன பறவைகளில் முக்கியமானது கழுகு இனம். வன விலங்குகளுக்கு ராஜா சிங்கம் போல் பறவைகளுக்கு ராஜா கழுகு. கழுகு (Eagle) ஓர் அற்புதமான பறவை. அதற்குச் சிறப்பான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் உண்டு கழுகுகள் தனியாக, உயரத்தில் பறக்கும். அவை ஏனைய பறவைகளுடன் சேர்ந்து பறக்காது. ஏனைய பறவைகளும் கழுகுகள் பறக்கும் உயரத்தில் பறக்க முடியாது.

கழுகுகள் கூர்மையான பார்வை உடையது. ஐந்து கிலோ மீட்டாருக்கு அப்பாலுள்ள ஒன்றை அவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும். கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அது தன் பார்வை ஒடுக்கி அதைப் பிடிக்க முயலும். தடைகள் வந்தாலும், அது தன் தன் கவனத்தைத் திசை திருப்பாது, தன் பார்வையை இரையின்மேல் வைத்திருக்கும்.


பிணந்தின்னிக் கழுகு போல் கழுகு அழுகியவை மற்றும் இறந்தவற்றை உண்ணாது. அது புதிதான இரையினையே உண்ணும்.

****


பொத்துவில்லுக்கு அருகே உள்ள அருகம் குடா(Arugam Bay) வுக்கு பல வெளி நாட்டவர்கள் கடல் அலைகளில் உலாவி (Surfing )விளையாட வருவார்கள் அங்குள்ள ஐந்து நட்சத்திர “நீல அலை” (Blue Wave Hotel) ஹோட்டலை விரும்பி வருவதற்குக் காரணம் அங்கு, வாத்து . காட்டுப் புறா, கொக்கு, மயில் . காட்டுக் கோழி போன்ற பறவைகளின் மாமிசம் பகல் போசனத்தில் கிடைக்கும் அங்கு வரும் வெளி நாட்டவர்கள் கடலில் நீந்துவது மட்டுமல்ல அவர்கள் குமண வனப் பகுதிக்குச் சென்று அங்கு குமண குளத்துக்கு வரும் வன விலங்குகளையும், பறவைகளையும் பார்த்து ரசிப்பார்கள்.அந்த காட்டில் யானைகளுக்கும் சிறுத்தைகளுக்கும் குறைவில்லை

குமண வனத்தில் வெளி நாட்டவர்களுக்கு அறிமுகமானவன் வேடர் இனத்தைச் சேர்ந்த சுனில் அத்தோ என்பவன். இவன் வேட்டை ஆடுவதில் திறமை உள்ளவன் குமண குளத்துக்கு வரும் பறவைகளைச் சுட்டு அருகம் குடாவில் உள்ள நீல அலை ஹோடலுக்கு வெளி நாட்டவர்களுக்குச் சமைத்துக் கொடுக்க அவன் விற்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தான். அதனால் அவனுக்கு அத்துமீறி வேட்டையாடி நல்ல வருமானம் கிடைத்தது,

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பறவைகளின் இறைச்சி என்றால் விருப்பம். வாத்து காட்டுச் சேவல். கொக்கு. மயில் . காட்டுப் புறா ஆகிய பறவைகளின் இறைச்சி அந்த குளத்துக்கு வரும் பறவைகளிலிருந்து சுனிக்கு ஏராளமாகக் கிடைக்கும் பறவைகளையம் வன விலங்குகளையும் சுடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இதை சுனில் அறிவான் . ஒரு தடவை இரு மான்களை அவன் சுட்டதைக் கண்ட வனப் பகுதி காவலாளி அவனைக் கைது செய்து போலிஸ் இடம் கொடுக்க முன் காவலாளிக்குப் பணம் கொடுத்து எச்சரிகையோடு தப்பினான் . ஆனால் அவன் தொடர்ந்து பறவைகளை வேட்டையாடுவதை தன் தொழிலாகக் கொண்டிருந்தான் அதன் மூலம் அவனுக்கு நல்ல வருமானம் வந்தது


அன்று அருகம் குடாவில் உள்ள நீல அலை ஹோட்டலுக்கு அறுபது சுற்றுலாப்பயணிகள் ஐரோப்பாவிலிருந்து வருவதால் பல பறவைகளைச் சுட்டுக் கொண்டு வரும் படி ஹோட்டலின் பிரதான சமையல்காரன் (Chief Chef) சுனிக்குச் சொன்னான் .

எனக்கு வெளி நாட்டவர்கள் விரும்பி உண்ணும் காடு சேவல். .கொக்கு, பிலேமிங்கோ . காட்டுப் புறா, வாத்து .மைல் ஆகியவை ஏராளமாக உண்டு. அதோடு மான் காட்டுப் பன்றியும் உண்டு நான் அவர்களுக்கு விரும்பிய இறைச்சியை நிட்சயம் கொண்டு வருகிறேன் ஆனால் ஒன்று ‘’’

“என்ன ஆனால். சொல்லு எதாவது ஹோட்டல் செய்ய வேண்டுமா “?

“உங்களுக்குத் தெரியும் பறவைகளையும் காட்டு விலக்குக்களைக் குமண வனத்தில் சுடுவது தடை செய்யப் பட்டுள்ளது நான் பிடிபட்டால் சிறை போக வேண்டி வரும். அனால் அதுக்கு எதாவது பணம் சந்தோசமாக காவலாளிக்கு கொடுத்தால் பிரச்சனை தீர்ந்து விசடும். அதுக்கு உதவியாக எனக்கு ஒரு கிலோ இறச்சிக்கு தரும் பணத்தை சற்றுகூட்டித் தரவும்:”

"அது பிரச்சினை இல்லை. தரலாம் நல்ல இறச்சியை கொண்டு வா என்ன"

“சரி சேர் , நாளை பகல் பத்து மணிக்கு முன்பு இறைச்சி கொண்டு வருகிறேன்.நான் இறைச்சி தருவதாக ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்” .

“நீ பயப்படாதே படாதே நீ சட்டத்துக்கு எதிர்க்கச் செய்கிறாய் என்று எனக்குத் தெரியும் பணமும் கூட்டித் தரலாம்

****

அடுத்த நாள் பகல் போசனத்துக்குக் காலை பத்து மணிக்கு முதல் இறைச்சிகள் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்ற சுனில், பதினோரு மணியாகியும் வரவில்லை.

சுனில் துவக்கோடு குமண காட்டுப் பகுதிக்குக் காலை அறு மணிக்கே சென்றான். போகமுன் குமண வனப் பகுதி காவலாளியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் முப்பது விகதம் அவனுக்குத் தருவதாகச் சொல்லிச் சென்றான்

வெகு நேரமாகியும் சுனில் ஹோட்டேலுக்கு வரவில்லை ஹோட்டல் சமையல்காரர்கள் இருவர் குமண குளத்துக்கு சுனிலை தேடிச் சென்று பார்த்த போது இரு வன காவலாளிகள் துவக்கோடு நின்றனர். பல பறவைகள் சத்தம் போட்ட படியே வானத்தில் வட்டம் இட்டன.. குமணக் குளக் கரை ஒரத்தில் அவர்கள் கண்டகாட்சி அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

சுனிலின் உடலை சில கழுகுகளும் கொக்குலும் கொத்தி சுவைத்துக் கொண்டு இருபதைக் கண்டனர். சுனிலின் கண்களை ஏற்கனவே கழுகுகள் பதம் பார்த்து விட்டன அவனின் உடல் முழுவதும் கழுகுகள் கொத்தி இரத்தம் வழிந்தது அரை உயிரோடு அவன் கால்களை அடித்து துடித்த படியே கிடந்தான். காவலாளிகள் வானத்தை நோக்கிச் சுட்டு கழுகுகளையும் கொக்குகளையும் சுனிலின் உடலைச் சுவைப்பதில் இருந்து துறத்தினார்கள் ஹோட்டலில் இருந்து வந்த சமையல்காரர்கள் இருவருக்கும் சுனிலுக்கு என்ன நடந்தது என்று புரிந்து விட்டது


கழுகுகளும், கொக்குகளும் மற்றைய பறவைகளும் கூட்டமாக  சுனிலைத் தாக்கி பறவைகளைக் கொண்டதுக்குப் பழி வாங்கிவிட்டன. இவன் உயிர் பிழைத்தாலும் இனி இவன் குருடன் தான்” என்று சொல்லி இரத்தம் ஒழுகும் சுனிலின் உடலை ஜீப்பில் காவலாளிகள் ஏற்றினார்கள்.

காவலாளிகள் பொத்துவில் வைத்தியசாலையில் சுனிலை சேர்த்த பின் போலீசுக்கு நடந்த சம்பவத்தை அறிவித்தனர்

****


(யாவும் புனைவு)


Rate this content
Log in

Similar tamil story from Tragedy