Ponnambapalam Kulendiren

Others

5  

Ponnambapalam Kulendiren

Others

குறளும் கதையும் 2 -இரத்ததானம்

குறளும் கதையும் 2 -இரத்ததானம்

5 mins
482



இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல். (குறள் 314)

                         

மாவிட்டபுரத்திலிருந்து தெற்கே 4 மைல் தூரத்தில் உள்ள கிராமம் உடுவில்;. இராமலிங்கமும், சிவலிங்கமும் நண்பர்களும், உறவினர்களும் ஆனால் ஒருவருக்கு ஒருவர் எதிர்மாறான போக்குள்ளவர்கள். இருவரும் உடுவில் கிராமத்தில்; உயர் வேளாள சாதியைச் சேர்ந்தவர்கள். இருவரும்; வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்து, ஒன்றாக பேராதனைக் பல்கலைக்கழகத்துக்கு மேற்படிப்புக்காகச் சென்றவர்கள். இராமலிங்கத்தின் தந்தை தியாகர் என்ற தியாகலிங்கத்துக்கு சுண்ணாகத்திலும், யாழ்ப்பாணத்திலும் பல கடைகள் இருந்தன.


தியாகர் வசதி படைத்த பணக்காரர். அரசியல்வாதி. அவர் சுண்ணாகம் நகரசபைத் தலைவராக செயலாற்றுபவர்;. தனது மகன் இராமலிங்கமும் தன்னைப் போல் அரசியல்வாதியாக வேண்டும் என்பது அவர் விருப்பம். இராமலிங்கமும் பொலிட்டிக்கல் சயன்சில் பட்டம் பெற்றவன். எவ்வளவு படித்திருந்தாலும் அவன் தந்தையைப் போல ஒரு பழமைவாதி. தீண்டாமையை ஆதரிப்பவன். தான் உயர்சாதியை சேர்ந்தவன் என்ற கர்வம் வேறு. இதற்கு எதிர்மாறான குணம் படைத்தவன் சிவலிங்கம். தமிழைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றவன் . முற்போக்குவாதி. மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைள் , சாதி வேற்றுமை, ஆணாதிக்கம், மனித உரிமை மீறல் , சீதனம் வாங்குவது போன்றவறறை எதிர்ப்பவன். கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டிவந்தான். பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது லங்கா சமசமாஜி கட்சிக்கு ஆதரவாளனாக இருந்தான். அதனால் பல சிங்கள மாணவர்கள் அவன் நண்பர்களாக இருந்தார்கள்.


"ஏன் சிவா நீ அந்த சமசமாஜி அரசியல் கட்சியை ஆதரிக்கிறாயே, அக்கட்சி "சிங்களம் மட்டும்" என்ற அரசின் கொள்கைக்கு ஆதரவளிக்கும் கடசி" என்று உனக்குத் தெரியாதா"? என்று இராமலிங்கம் சிவாவைக்கேட்டபோது அதற்கு அவன் " இராம் அது ஒரு சொசலிஷ கொள்கையுள்ள கட்சி. தொழிலாளர்ளுக்கு தேவையான கட்சி. என் கொள்கைக்கு ஒத்துப்போகும் கட்சி. அதனால் ஆதரிக்கிறேன்" என்றான்.


சிவாவின் தந்தை புண்ணியலிங்கம் பிரசுரம் ஒன்றையும், "சமதர்மம்" என்ற முற்போக்கு வாரப்பத்திரிகையையும் நடத்திவந்தார். பல்கலைக் கழகப் படிப்பு முடிந்ததும், சிவா தன் தகப்பனின் பிஸ்னஸ்சை பொறுப்பெடுத்து நடத்தத் திட்டமிட்டிருந்தான். தந்தையின் வேண்டுகோளின் படி சமதர்மம்; பத்திரிகைக்கு ஆசிரியராக கடமையாற்றத் தொடங்கினான். தன் முற்போக்கு என்னங்களை அப்பத்திரிகை மூலம் வெளிக்காட்டினான். சீன சார்பான பொதுவுடமைக்கட்சியில் சேர்ந்து சிவா அதில் பொறுப்பான பதவி வகித்தான்.;


1960ல் யாழ்ப்பாணத்தில், கோவில்களிலும் பொதுவிடங்களிளும் தீண்டாமை தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் பல கோயில்களுக்குள் பிரவேசிக்க முடியாது. கோயிலின் பரிசுத்தம் கெட்டு விடும் என்பது கோயில் உரிமையாளரகளின் வாதம். குறிப்பிட்ட பாடசாலைகளில் படிக்க முடியாது. பொது உணவகங்களில் உயர் சாதியினரோடு சரி சமனாக இருந்து உணவு உண்ணமுடியாது. பொதுக் கிணற்றையோ, குளத்தையோ பாவிக்க முடியாது. படித்தவர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணத்தில் அத்தகைய வேறுபாடு இருப்பதை சிவாவால் நம்பமுடியவில்லை. சிங்களவர்கள தம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று குறை கூறும் தமிழர்கள் தம் இனத்தைச் சேர்ந்த ஒரு சாதியினரைப் பாகுபாடு காட்டி நடத்துவது சிவாவுக்கு புரியாத புதிராக இருந்தது. தீண்டாமையை ஒழிக்கப் பல கட்டுரைகளை சமதர்மத்தில் சிவா பிரசுரித்தான். தீண்டாமைக்கு எதிராக நடத்தப்பட்ட ஊ;hவலங்களை முன்னின்று நடத்தினான்.


சிவாவுக்குத் துணையாக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பொன்னுத்துரை என்ற இளைஞன் இருந்தான். மூன்று மொழிகளும் சரளமாகப் பேசக்கூடிவன். சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை மீறி தெற்கே போய் கல்வி கற்றவன். பிறருக்கு உதவவேண்டும் என்ற குணம் பொன்னுத்துரைக்கு இருந்தது. உணர்ச்சியைத் தூண்டக்கூடிய கட்டுரைகளை எழுதும் திறமை படைத்தவன். கவிஞன். துரையின் தந்தை பனை மரம் ஏறி கள் இறக்கும் பரம்பரைத் தொழிலை "செய்யும் தொழிலே தெய்வம்" என்பது போல தொடர்ந்து செய்துவந்தார். துரையும் பொதுவடமைக்கட்சியில் அங்கத்தினராக இருந்து, ஊர்வலங்களில் பங்கேற்றான்.


பொன்னுத்துரை பல எதிர்ப்புகளை மீறி படித்து சமதர்மம் பத்திரிகைக்கு உதவி ஆசரியராக கடமையாற்றினான். இராமலிங்கத்துக்கு சிவாவின் போக்குப் பிடிக்கவில்லை. சிறுவயது முதற்கொண்டே ஒன்றாக வளர்ந்து, நண்பர்களாக இருந்ததினால் இராமலிங்கத்தால் சிவாவோடு கதைக்காமல் இருக்கவும் முடியவில்லை

****

அன்று தீண்டாமையை எதிர்த்து வரலாறு உள்ள மாவிட்டபுரம் கோவிலுக்கு முன்னால் நடக்கவிருக்கும் கிளர்ச்சி கூட்டத்துக்கு எதிர்பாராதவாறு அதிக கூட்டம் கூடியிருந்து. பக்கத்து ஊர்களிலும் இருந்து சனங்கள் பஸ்சில் வந்திருந்திருந்தாரகள். வந்திருந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். சிலர் சிவப்பு நிறச்சட்டை அணிந்து தாங்கள் பொதுவுடமைக் கட்சி ஆதரவாளர்கள் எனக் காட்டிக் கொண்டனர் வன்முறையைத் தவிர்க்க வேண்டும், பொறுமையை மீறாதீர்கள் என்று எச்சரிக்கை விட்டபடியே சிவாவும், துரையும இருந்தனர். வந்திருந்தவர்களில் பலர் பொதுவுடமைக் கட்சியின் சிவப்பு நிறக்கோடியினை தூக்கியவாறு, "தீண்டாமை ஒழிக! கோயிலை எல்லோருக்கும் திறந்துவிடு." என உரத்து பல கோஷங்கள் போட்டபடி இருந்தனர்.


வன்முறை வெடிக்கக் கூடாது என்பதற்காக இரு பொலீஸ் இன்ஸ்பெக்டர்களும,; பல பொலீஸ்காரர்களும் பிரச்சனை எச்சமயமும் எல்லையை மீறலாம் என எதிர்பார்த்து, பேட்டன் என்ற கைத்தடிகளோடு நின்றனர். மக்களின் கோஷங்கள் குறிப்பிட்ட பிரபல உயர்சாதி மக்களை குறிவைத்ததாக இருந்தது. அதில் இராமலிங்கத்தின் தந்தை பெயரும் அடிபட்டது.


"கோயில் கதவுகள் மாலை ஆறு மணிக்கு முதல் எல்லோருக்கும் திறக்கப்படாவிடில் நாம்; அனைவரும்; வலுக்கட்டாயமாக கோவிலுக்குள் பிரவேசிக்க வேண்டி வரும்" என எச்சரிக்கை விட்டான் சிவா. அவன் பேச்சைக் கேட்டு, வந்திருந்தகூட்டத்தில் ஒரே கைதட்டல்கள். சிவா பேசும் போது பட்டாசுகள் வெடிச் சத்தமும் ஒரு சிலரின் கூப்பாடுகளும் விசில் சத்தங்களும் சிவாவை பெசவிடாது தொந்தரவு செய்தன. தூரத்தில் இராமலிங்கம் மூவரோடு சிரித்தபடி தன் கார் அருகில் நிற்பதை சிவாவால் அவதானிக் முடிந்தது. இராமலிங்கம், கூட்டத்தைக் கலைக்கும் நோக்கத்தோடே வந்திருக்கிறான் என்பதை சிவா புரிந்து கோண்டான்.


இராமலிங்கம் மாவிட்டபுரக் கோயிலின பரிபாலன சபையின் செயலாளர். அச்சபையில் உயர்சாதி மக்களே அங்கம் வகித்தனர். கோயில் உரிமையாளா தலைவராக இருந்தார். " பாதுகாப்போம் இந்து மதத்தை" என்ற கொள்கையோடு அப்பரிபாலனசபை இயங்கி வந்தது. பிற்போக்கு கொள்கைகளையுடைய அச்சபைக்கு சில அரசியல்வாதிகளினதும், பணக்கார உயர் சாதியினரதும் ஆதரவு இருந்தது.


சிவா தன் பேச்சு முடிவில் "நீங்கள் எல்லோரும் தீண்டாமையை ஒழிக்க ஆதரவா? என்ற கேள்வியைக் கேட்டபோது.


" ஆம் நாங்கள் எலலோரும் தீண்டாமையை ஒழிப்போம். தடைகளை மீறுவோம்" என்ற பதில கூட்டத்தில் இருந்து வந்தபோது கற்களும், உடைந்த போத்தல்களும் கூட்டத்தை நோக்கி வீசப்பட்டன. ஒரு கல் சிவாவின் மேல் வந்து விழுந்தது.


" என்ன கல்மழை பொழிந்தாலும் எமது உறுதியை மாற்றமுடியாது" என்று உரக்கக் கூவினான் சிவா. கூட்டத்தில் இருந்தவரகள் பார்வை கற்களும் போத்தல்களும் வந்த திசை நோக்கிச் சென்றது. இராமலிங்கம் தன் கார் அருகில ஒரு கூட்டதோடு சிரித்தபடி நிற்பதைக் கண்டார்கள். பலர் கோவில் பரிபாலன சபை அங்கத்தினர்களை இராமலிங்கத்தோடு நின்ற கூடடத்தில் அடையாளம் கண்டு கொண்டார்கள். கற்கள் வீசப்படுவதற்கு கோயில் பரிபலான சபையே காரணம் என்பதைப் புரிந்து கொள்ள எழுச்சிக் கூட்டத்துக்கு வந்திருந்தோருக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. சிலர் இராமலிங்கத்தின் காரை நோக்கி ஓடினார்கள். பயத்தில் இராம் தன் காருக்குள் தனது ஆதரவாளர்கள் சிலரோடு ஏறி காரை புறப்பட ஸடார்ட் செய்ய முயற்சித்தான். கார் ஸ்டார்ட் செய்யாமல் தகராறு செய்தது.

" டேய் ராம் வெளியே வாடா " என்று கோபத்தில கூட்டம் காரைத் தாக்கியது. பொலீசால் கூட்டத்தின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. பொங்கி எழுந்த தாக்குதலால் இராமலிங்கம் தலையில முகத்திலும் காயம் ஏற்பட்டு இரத்தம் வழியத் தொடங்கியது. இதைக கண்ட சிவாவும் துரையும் இராமலிங்கததை காப்பாற்ற அவனின் காரை நோக்கி ஓடினார்கள்.

" போதும் நிறுத்துங்கள் வன்முறை வேண்டாம். இதுவல்ல எமது நோக்கம்", சிவாவின் குரல் கேட்டு இராமலிங்கத்தின் கார் அருகே நின்ற சனங்கள் தாக்குதலை நிறுத்தியது. இராமலிங்கம் மயங்கிய நிலையில காருக்குள் கிடந்ததைக் கண்ட சிவா தன் நண்பன் ஒருவனின் காரில் பொன்னுத்துரையின் உதவியோடு சுன்னாகம் ஆஸ்பத்திரிக்கு இராமலிங்கத்தை விரைவாக கூட்டிச் சென்றான்.


                        *****


இராமலிங்கத்தை பரிசோதித்து பல டெஸ்டுகளைச் செய்து இரத்தம் அதிகம் விரையமாகி இருப்பதைக் கண்ட டாக்டர்;. "உடனடியாக தேவையான இரத்தம் கொடுக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஆனால் ஒரு பிரச்சனை" என்றார்.

" என்ன பிரச்சனை டாக்டர்? என் நண்பனின் உயிரைக்காப்பாற்ற நான் என் இரத்தத்தைக் தரத் தயார்" சிவா உணர்ச்சியோடு சொன்னான்.

"பிது சரி உமது பிளட் குரூப் என்ன?".

" எ பொசிட்டிவ்."

"அங்கைதான் பிரச்சனையே இருக்கு. இரத்தப் பரிசோதனை செய்த போது உமது நண்பனின் இரத்தம் இலகுவில் கிடைக்க முடியாத பி நெகட்டிவ்வைச் சேர்ந்த குரூப் என்று தெரியவருகிறது. இந்த இரத்தம் தற்பொது இரத்த வங்கியில் இல்லை. யாழ்ப்பாண பெரிய ஆஸபத்திரியில் இருந்து வர வேண்டும். அதற்கு அதிக நேரம் எடுக்கலாம். இந்த குருப் இரத்தம்; கிடைப்பதும் அருமை. அந்த இரத்த குருப் உள்ளவர்கள் உங்களில் யாராவது இரத்தம் கொடுக்க முன்வந்தால் சரி அல்லது உயருக்கு ஆபத்து " என்றார் டாக்டர்.


" டாக்டர் நான் இருக்கிறன் இரத்தம் கொடுக்க" என்றது ஒரு குரல்.


குரல் வந்த திசையை நோக்கி திரும்பிப் பார்த்தான் சிவா. அக்குரல் பொன்னுத்தரையினுடையது என்று தெரியவந்தது.


" என்ன துரை உனது இரத்தக் குரூப் பி நெகட்டிவ்வா?"


" ஓம். நான் இரத்த வங்கிக்கு இரத்தம் கொடுப்பவன். அதனால் எனக்கு நிட்சயம் தெரியும் எனது பிளட் குரூப் பி நெகட்டிவ் என்று." துரை உறுதியாகச் சொன்னான்.


சிவாவால் நமபமுடியவில்லை. விதி எப்படி மனிதனைச் சோதிக்கிறது என்று. ஒரு தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த ஒருவனின் இரத்தம் உயர்சாதியைச் சேரந்;த இராமலிங்கத்துக்கு கொடுப்பதா? சிவா சற்று நேரம் சிந்தித்தான். இராமலிங்கத்தின் தந்தை அறிந்தால் என்ன சொல்லுவார்?. தன் நண்பனின உயிர் பெரிதா, சாதி பெரிதா? செயவதறியாது திகைத்து நின்றான் சிவா.


டாக்டருக்கு பிரச்சனை விளங்கவில்லை. " ஏன் தாமதிக்கிறீர்கள். பக்கத்திலை பி நெகட்டிவ் பிளட் குரூப்பில் ஒருவரை வைத்துக் கொண்டு யோசிக்கவும் வேண்டுமா? நேர்ஸ் உடனே பிளட் டிரான்ஸ்பியூசனுக்கு ஆயித்தப் படுத்துங்கள் " என்றார் நேர்சைப் பார்த்து டாகடர். நடப்பது நடக்கட்டும் மென்று சிவா தன் சம்மதத்தை தெரிவித்தான்.


                         ****


இராமலிங்கம் கண்விழித்த போது பக்கத்தில் சிவாவும் பொன்னுத்துரையும் நிற்பதைக் கண்டான். ஓரத்தில் இராமலிங்கத்தின தந்தை தியாகலிஙகம் நடப்பதை பார்த்தபடி அமைதியாக நின்றார்.


" தாங்கியூ டாக்டர்; என்னுயிiரைக் காப்பாற்றியதுக்கு" இரமலிங்கம் கண்கலங்கச் சொன்னான்.


" எனக்கு நன்றி சொல்லதையும். அதோ உமக்கு பக்கத்தில் நிற்கிராரே அவருக்கு நன்றி சொல்லும். அவர் தன் இரத்தத்தைத' தக்க நேரத்தில் கொடுததிருக்காவிட்டால் நீர் உயிர் தப்பி இருப்பீரோ என்பது சந்தேகம்", என்றார் டாக்டர்.


தன் உடலில் ஓடுவது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பொன்னுத்துரையின் இரத்தம் என்பதை அறிந்து கொள்ள இராமலிங்கத்துக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. துரையைத் தன்னருகே அழைத்து அவன் கைகளைப் பிடித்து "தாங்கியூ துரை நான் உன்னை கீழ் சா தி என்று அவமதித்து  நடத்தினேன் . நீ அதை மறந்து என் உயிரை உன் இரத்தம் கொடுத்து காபபாற்றி விட்டாய் " என்றான் இராமலிங்கம். அவனது கண்ணீhத் துளிகள் துரையின் கைகளில் விழுந்தன. தூரத்தில் சுன்னாகம் பிள்ளையார் கோவிலின் மணியோசை கேட்டது.


*****

 


Rate this content
Log in