STORYMIRROR

Ponnambapalam Kulendiren

Inspirational

4  

Ponnambapalam Kulendiren

Inspirational

ஒரு மாமரத்தின் கதை

ஒரு மாமரத்தின் கதை

4 mins
250

இது ஓரு உருவகக் கதை 

                    

மீசாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் சரசாலை, மந்துவில் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் அல்லாரையும், தெற்கில் சங்கத்தானையும், மேற்கில் மட்டுவில், சரசாலை, கல்வயல் ஆகிய ஊர்களும் உண்டு.

 மீசாலைக்கு அருகில் மேற்கே கடலோரத்தில் அமைந்துள்ள கிராமம் கச்சாய் அனகிரிந்து கடலிலிருந்து மீன் பிடித்துக் கொண்டுவந்து அங்கு மீன் விற்ற மீன் சந்தை .மீசாலையாக காலப் போகில் மருவி இருக்கலாம் யாழ்ப்பாணம் - கண்டி A9 வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இவ்வீதியின் வழி சாவகச்சேரியில் இருந்து இவ்வூர் சுமார் 3 கிலோமீட்டர்கள் தொலைவிலும், கொடிகாமத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ளது. இவ்வீதிக்கு இணையாக ஒரு தொடருந்துப் பாதையும் தொடருந்து நிலையமும் அமைந்துள்ளன.

ஈழத்திரு நாட்டின் வடபால் யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் சகல வளங்களும் நிறைந்து சைவமும்இனிய தமிழும், பழங்களும் கமழும் ஊராக மீசாலை ஊர் அமைந்துள்ளது. அந்த வகையில் மீசாலை ஊரானது தரமான மாம்பழம், பலாப்பழம், என்பவற்றிற்குபெயரும் புகழும் பெற்றுள்ளது. இக்கிராமத்தில் மா, பலா, வாழை, பனை, தென்னை, வேம்பு, தேக்கு, நாவல், மஞ்சலுண்ணா, போன்றவை பயன்தரு மரங்களாக உள்ளது. இதில் மாமரத்தின் இனங்களாக கறுத்தைக்கொழும்பான்,வெள்ளைக்கொழும்பான், அம்பலவி, செம்பாட்டான், விலாட்டு, பாண்டி, சேலம், கழைகட்டி, பச்சைத்தின்னி, வாழைக்காய்ச்சி, நாட்டான் என பல வகைப்பட்ட இனங்கள் காணப்படுகின்றன. இந்த வகையில் இக்கிராமம் மாசாலை எனவும் அது மருவி பின் மீசாலை என வந்ததாகவும் கூறுகின்றார்கள். மீசாலை மாம்பழமானது தரத்தாலும்இ சுவையாலும் பெயர் பெற்று விளங்குகிறது.அதில் கறுத்தைக்கொழும்பான் மாம்பழமானது மிகச் சுவையானதும் பெறுமதி வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. அதே சமயம் மாம்பழங்களானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சுவையைப் பெற்றதாக அமைந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் மாம்பழமானது நன்றாக முற்றியதாகவும் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதாகவும் கனிந்து பழுத்த மாம்பழமானது ஒன்றை ஒன்று விட்டு கொடுக்காததாகவும் அமைந்துள்ளது. இந்த மாம்பழங்களை நாம் பறிக்கும் போது நிலத்தில் வீழ்ந்து காயம் ஏற்பட்டு பழுதுகள் ஏற்படாது இருக்க அத்தாங்கு என்று அழைக்கப்படும் உபகரணத்தைப் பாவிக்கப்படுகின்றது.இது ஒரு நீளமான தடியின் ஒரு பக்கத்தில் ஓர் கூடை அல்லது பை இணைக்கப்பட்டு மாம்பழத்தை மரத்தில் இருந்து பறிக்கும் போது கூடைக்குள் அல்லது பைக்குள் விழக்கூடியதாகவும் நிலத்தில் விழாததாகவும் அமைந்திருக்கும்.

“மீ “என்பது இலுப்பை மரத்தைக் குறிக்கும் இலுப்பை மரங்கள் இருந்த மரச் சோலை ஒரு காலதியால் இருந்து அங்கு இலுப்பென்னை தயாரிக்கும்   தோழிற் சாலை இருந்த படியால் அந்த ஊருக்கு மீசாலை என்ற பெயர் வந்ததாக ஊர் வாசிகள் சொல்வார்கள் 

 எது எப்படி இருந்தாலும் அந்த ஊர் மாம்பழம் ,பலாப்பழம் போன்ற பழங்களுக்கு பிரசித்தமானது.


அந்தக் கிராமத்தில் A9 வீதி அருகே உள்ள சந்தை குத்தகைகாரர் குடும்பி வைதது காதில் கடுக்கன் பூட்டிய ன்பொனையா வீட்டில்இரண்டு சுவையான கறுத்தக் கொழும்பான் மாமரங்கள் இருந்தன. அதில் பாதை ஓரத்தில் இருந்த மாமரம் மடுமே மரம் தெரியாமல் வருடா வருடம் காய்த்து சொரிந்தது. இரன்டாவது மரம் காய்பதில்லை . காயுக்கும்  மரத்தில் காய்க்கும் பழங்களை பார்த்து வீதியில் போவோர்நின்று ரசித்து செல்வார்கள் ஒருசிலர் ரசிப்பது மட்டுமல்ல வீதியில் இருக்கும் கல் குவியலில் இருந்து ஒரு கல்லை எடுத்து மாம்பழத்துக்கு குறி வைத்து எறிந்து. கீழே விழுந்த மாம்பழத் எடுத்து உண்பார்கள் சிறுவர்களும் அந்த மரத்தை விட்டு வைக்கவில்லை. . ஒரு சிலர் மரத்தில் தொங்கும் அழகிய மாம்பழங்களைபார்த்து ரசித்து தங்கள் கமராவில் படம் பிடித்து செல்வார்கள் . அதை பர்ர்த்து அந்த மரம் பெருமை பட்டது . மற்ற மரம் சொலிற்று,

“நண்பா உன்னைப் பார்க்க எனக்கு பொறாமையும் பெருமையாகவும் இருக்கிறது உன்னை நீன்று பார்த்து ரசித்து படம் பிடித்து செல்கிர்றாக்கள் எனக்கு அவர்கள் அந்த மரியதை தருவதில்லை எங்களுக்கு கலர் இல்லை ஆனால் அரசியல் மேடைகளில் சில அரசியல்வாதிகள் பேசுவது பேசுபவரை பிடிக்காமலோ அல்லது அவர் பேசுவது விளங்காமலோ கூட்டத்துக்கு வந்திருப்பவர்கள் கற்களால் எறிவது அதுபோல் உன் மதிப்பு தெரியாது கல் எறிகிறார்கள்”.

கல் ஏறி படும் கருத்த கொழும்பான் மாமரம் சொல்லிற்று

 “ நண்பா நீ சொல்வது உண்மைதான் என்னுடைய உடல் கல் ஏறி பட்டு எவ்வளவுக்கு காயப்பட்டு இருக்கிறது என்று எனக்குத்தான் தெரியும் நான் சுவையான மாம்பழத்தைப் உருவாக்கிக் கொடுத்து நான் ஏன் காயப் படுவான் ? நான் உன்னை போல் இருந்தால் இந்த நிலை எனக்கு வந்திருக்காது

அந்த மாமரத்துக அருகே இருந்த ஒரு வேப்பமரம் சொல்லி

 “காய்க்கிற மரம் தான் கல்லேறி படும் என்றற பழமொழி உண்டு

 அதுதான்உனக்கு நடக்கிறது.”


“என்ன நீ சொல்லுகிறாய் விளககமாய் சொல் “ .என்றது கறுத்தக் கொழும்பான் மரம்


“நான் சொல்வது என்ன வென்றல் நல்ல பயனுள்ள செயல்கள் செய்பவர்கள் எப்போதும் பலரின் விமர்சனத்துக்கும் கேள்விகளுக்கும் ,தாக்குதலுக்கு உட்படுவார்கள் அவர்களின் திறமைஅறிவு தெரியாதவர்கள் தங்களால் செய்ய முடியாததை வேற ஒருத்தன் செய்து விட்டானே என்ற ஒரு எரிச்சல் பொறாமையை தங்கள் செயல் மூலம் வெளிப்படுத்துவார்கள். அது ஒரு வித தாழ்வு மனப் பாண்மையினால் உருவாகும் செயல்.”

 

 “அப்படி என்னில் என்ன திறமை இருகிறது விளங்கவில்லையே”.

“ நான் சொல்ல வருகிறது என்னவெறால் உனக்கு பக்கத்தில் இருக்கும் உன் நண்பன் காய்ப்பது இல்லை அவனால் பயனும் இல்லை இந்தக் காரணத்தினால் ஒருவரும் அவனுக்கு கல் எரிவது கிடையாது, நின்று ரசித்து படம் எடுப்பதில்லை இதுபோன்றுதான் ஒன்றுமே சமூகத்துடன் ஈடுபடாமல் இருப்பவர்கள் விமர்சனத்துக்கும் உள்ளாக மாட்டார்கள் அவர்களை நான் சுயநலவாதி என்று தான் சொல்வேன். அது மட்டும் இல்லை சாதனை படைக்க முடியாதவர்கள் . ஆனால் நீ அப்படி அல்ல. நீ உன் நண்பனை விட ஒரு படி மேல்..”


“ அப்படி என்னில் என்ன பலர் ரசிக்கும் அழகும் தோற்றமும உள்ள து?” 

“சுவையான மாம்பழத்தை உருவாக்கும் திறமை உன்னிடம் இருக்கிறது

 அந்த மூ மாம்பழத்திற்கு ஒரு விலை மதிப்பும் இருக்கிறது

 அதனால் இந்த வீட்டுச் சொந்தக்காரன் உன் மாம்பழங்களை பறித்துச் சென்று கொடிகாமம் சந்தையில் நல்ல விலைக்கு விற்று பணம் சம்பாதிக்கிறான் அது தெரியுமா உனக்கு?”


“ எனக்குத் தெரியும் மாம்பழங்கள்பலருக்கு கீழே விழ முன்பு அவன் ஒருவனைக் கொண்டு எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு போவ. ஏன் அப்படி செய்கிறார் என்று எனக்கு தெரியாது. இப்போ அவன் செய லுக்கு காரணம் தெரிகிறது .”


“அப்படி உன்னிடமிருந்து மாம்பழங்களை பறித்துக் கொண்டு போன அவன் எப்போதாவது ஒரு நாள் நன்றி கடனாக உனக்கு தண்ணீர் ஊற்றி உரம் போட்டு இருக்கிறானா உன்னை மற்றவர்களின் கல்லேறியில் இருந்து பாதுகாத்து இருக்கிறானா அதுதான் இல்லை.”


“ஆமாம் ஒரு நாளும் எனக்கு அவன் தண்ணி ஊத்த வில்லை மழைகாலத்தில் பெய்யும் மழை யை நம்பி தான் நான்  வாழ்ந்து வருகிறேன்

 அது மட்டுமல்ல அவனின் மனுசி   என் என்னில இருந்து மாவிலைகள் எடுத்துக் கொண்டு போவான், சில சமயம் என் கொப்புகள் பாதைக்க தடையாக இருகிறது என்று அவளின் கனவான் வெட்டுவான் “ மாமரம் சொல்லிற்று

“ இன்னொன்று உனக்கு சொல்லுறன் கேள் நாமெல்லாம் பலகாலம் இந்த தோட்டத்தில் இருந்து வருகிறோம் இந்த தோட்டத்து இப்போதைய உரிமையாளன் பொன்னையரின் தகப்பன், பாட்டன் காலத்தில் கூட நீ சுவையான மாம்பழத்தை அவர்களுக்கு கொடுத்து இருக்கிறாய் எனக்கு தெரியும் உனது தோட்டத்து உரிமையாளரின் தந்தை ஒரு போலீஸ்காரன் அவருக்குப் பயந்து ஒருவரும் உனக்கு கல் ஏறிய வில்லை அவர் அவர்களைப் பிடித்துக் கொண்டு போய் போலீசிடம் கொடுத்துவிடுவார் என்று பயம் சிறுவர்களுககும் ஊர்வாசிகளக்கும் இருந்தது .”


 ஆமாம் எனக்கு தெரியும் அவர் இருந்த காலத்தில் எனக்கு கல் எறிவு குறைவு , பொன்னையர் ஒரு வியாபாரி என்னை தன் வியாபாரத்துக்கு பாவிக்கிறார் என்னில் சம்பாதிக்கிற காசில் ஒரு நாய் கூட வளர்க்கலாமே அந்த நாய் கூட எங்களை பாதகாக்குமே

“ உன் யோசனை ஒரு நல்ல யோசனைதான் அதை அவனுக்கு யார் அதை செல்வது


 “ஆனால உன் யோசனை ஒரு நாள் நடக்கலாம் யார் கண்டது ?”


 வெவேப்ப மரம் சொன்னதுபோல் வீட்டு உரிமையாளர் மகள் மலர் .ஒரு நாய் வளர்க்கத் தொடங்கினாள் அந்த நாய் வளர்ந்த பின் அதற்குப் பயந்து ஒருவரும் மரத்துக்கு கல்லேறிவது கிடையாது அதோடு மட்டுமல்ல மீசாலயைல் உள்ள பாடசாலையில் படிக்கும் மாணவர்களை தலைமை ஆசிரியர் அழைத்து எச்சரித்து சொன்னார் நீங்கள் செய்வது தவறு நீங்கள் மாற்றான் தோட்டத்து மாமரத்தை கல்லெறிந்து பழம் பறிப்பது ஒரு வகை திருட்டு. இதை செய்ய வேண்டாம் இதை தோட்டத்தின் உரிமையாளர் அறிந்தால் அவர் உங்களை பிடித்து போலீசுக்கு கொடுத்துவிடலாம்.”

 அதன் பின் மாணவர்கள் மாமரத்துக்கு கல் எறிவதில்லை

 ஆனால் அணில்களையும் குருவிகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை அதை சுவைத்து உண்ட பழங்கள் எல்லாம் கீழே விழுந்தது அரைகுறையாக கிடந்தான


தோட்ட உரிமையாளரின் மகள் மலர் ஒரு நாள் அந்த மாமரத்தில் மாம்பழத்தை பிடுங்கி தந்தைக்குச் சொன்னாள் “ அப்பா இந்த பழத்தைசுட்டிபுரம் அம்மனுக்கு பூஜையின்போது பிரசாதங்கள் உடன் நான் கொடுக்கப் போறன் “


 அதைக்கேட்ட மாமர சொல்லிற்று .” நம் எஜமானின் மகள் மலர் என் பழத்தை அம்மனுக்கு கொடுக்கப் போறளாம் . அது எவ்வளவு ஈனகு பெருமையாக இருக்கிறது அந்த அம்மனை நிச்சயம் எங்களை காப்பாற்றுவாள்


 பதில் சொல்ல முடியாமல் மற்ற மரங்கள் இருந்தன,

 *****

பொன்னையாரின் மகள் மலர் வளர்ந்து. படித்து. பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பட்டம் பெற்றாள். அவளுக்கு பல வித மாமரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம்

 சுவையான மாம்பழங்களை தரும் மா மரததிள் இருந்து கிடைத்த ஒரு பழத்தின் விதையை நட்டு மகனை வளர்த்து வந்தாள்’ மூன்று அடி உயரத்துக்கு வளர்ந்த பின் அவளுக்கு ஒரு யோசனை வந்தது

 இந்த பழம் கிடைத்த மரத்துக்கு பக்கத்தில் இருக்கும் மாமரத்தில் இருந்து எங்களுக்கு பயனில்லை அது காய்ப்பதில்லை அதை அப்பாவை கொண்டு அதை வெட்டிப் போட்டு அந்த இடத்தில் இந்த மாங்கன்றினை தாய்க்கு பக்கத்தில் நடச் சொல்லுவோம் இப்போ இருக்கும் மாமரம் முதுமை அடைந்தவுடன் அதிக பழங்கள் தர மாட்டாது

 அது போல் சில நாட்களில் நடந்தது

 வேப்பமரம் சொல்லியது மாமரத்துக்கு “பார்த்தாயா உன் நண்பன் போய் உனக்கு அருகே உன் மகள் வந்து விட்டாள். இப்போ உனாகு திருப்தியா உனக்கு முதுமையானவுடன் நீ இப்போது போல் காய்க்க மாட்டாய் உன் மகள் தான் இனி உன்இடத்தைப் பிடித்துக் கொள்வாள்.”


“அதுக்கென்ன அவள் என் மகள் தானே அவள் வாழட்டும்”” என்றது மாமரம்


*****

யாவும் புனைவு


Rate this content
Log in

Similar tamil story from Inspirational