Ponnambapalam Kulendiren

Others Children

5  

Ponnambapalam Kulendiren

Others Children

என் தங்கை சாந்தி

என் தங்கை சாந்தி

6 mins
502



என் தங்கச்சி சாந்தி எங்கள் குடும்பத்தில் கடைக்குட்டி. நான் சாந்தன், என் பெற்றோருக்கு மூத்தவன். அடுத்தது எனக்கு இரு வயசு குறைந்த தம்பி காந்தன் அண்ணன்மார் நாங்கள் இருவரும் அவள் மேல் உயிர் . எனக்கும் அவளுக்கும் பதின்ரண்டு வருட வித்தியாசம். அவள் பிறந்த போது அப்பாவுக்கு வயசு ஐம்பத்தி மூன்று..வங்கி ஒன்றில் மனேஜராக வேலை செய்பவர் . அம்மாவுக்கு நாற்பத்தி எட்டு. தேக நலம் சரி இல்லாததால் தமிழ் ஆசிரியையாக இருந்து ரிட்டயரானவள்

“இந்த வயசிலையும் உங்களுக்கு குழந்தை ஆசை விட்டுப் போகவில்லை” என்று எங்கள் அம்மம்மா அடிக்கடி சொல்லுவாள். என் அம்மாவின் அப்பா என் பெற்றோரை எப்பவும் ஆதரித்துப் பேசுவார்

“ அதுகளிண்டை இளமை இன்னும் குறையவில்லை. ஆசைக்கு ஒரு பெண் குழந்த , ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை குடும்பத்தில் வேண்டும். அவர்களைக் கடைசி காலத்தில் கவனிக்கப்போவது எங்கடை கடைக்குட்டி சாந்தி தான் அவர்களுக்கு ஆதரவாக அவர் பேசுவார். முற்போக்குச் சிந்தனை உள்ளவர். அம்மம்மா சரியான பழமைவாதி. சாத்திரம், சம்பிரதாயம், கலாச்சாரம் பார்ப்பவள்.

சாந்தி எதைக் கேட்டாலும் நானும் காந்தனும் அவளுக்கு வாங்கிக் கொடுப்போம். சாந்தி படிப்பில் படு சுட்டி. அப்பாவின் செல்லம். தான் நினைத்ததையே செய்வாள் அவள் ஒரு புத்தகப் பிரியை அம்மாவுக்கு அவள் போக்குப் பிடியாது. அடுப்படியில் அம்மாவுக்கு உதவி செய்ய மாட்டாள். நானும் தம்பியும் கேட்டால் மட்டுமே எங்களுக்கு விரும்பியதை சமையல் அறைக்குப் போய் சமைத்துத் தருவாள்.

சாந்தி யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பௌதிகத்தில் இறுதி ஆண்டு. முதல் வகுப்பில் சித்தி பெற்று மேலும் படித்து முனைவராக வேண்டும் என்பது அவள் விருப்பம். லண்டன் பல்கலைக் கழகத்துக்கு சென்று வான் வெளி ஆராய்சி செய்வது அவள் திட்டம்.

“அண்ணா என் விருப்பம் நிறை வேறுமா? நான் பௌதிக பேராசிரியையாக வேண்டும். ஸ்கோலர் ஷிப் கிடைச்சு கேம்ப்ரிட்ஜ் போகவேணும்”

“ சாந்தி நீ படிப்பதுக்கு நானும் தம்பியும் என்ன உதவியும் செய்வோம். நீ படிப்பில் கவனம் செலுத்து அதுசரி உன்னை பற்றி நானும் என் தம்பியும் ஓன்று உன் சிநேகிதிகளிடம் இருந்து ஒரு கதை கேள்விப் பட்டோம் உண்மையா”?

“என்ன கதை அண்னா ?

“ உனக்கு இப்ப எவ்ளவு வயசு தெரியும் தானே”? :”

” ஏன் அண்னா இப்ப என் வயசைக் கேட்குறீர்கள்.”

“ சொல்லேன்”

“ உங்களுக்கு தெரியாமலா. எனக்கு இப்ப இருபத்தியொன்று. இன்னும் ஒரு வருஷத்தில் பட்டதாரியாகி விடுவேன்”

“உன் பெளதிக பேராசிரியர் அன்டன் ஜெயரத்தினத்துக்கு இப்ப என்ன வயசு”?

“போன மாதம் கேக் வெட்டி அவரின் ஐம்பது வயதை எல்லோரும் கொண்டாடினார்கள்”

“நான் கேள்வி பட்டேன் அன்று நீ அவர் கன்னத்தில் முத்தம் கூட கொடுத்தாயாமே”?

“ அதில் என்ன தவறு அண்ணா?. அவரை எனக்கு பிடிக்கும் அதனால் கொடுத்தேன்.”?

“உன் வயசு என்ன, அவர் வயசு என்ன ? அவர் தன் மனைவியை பல வருடங்களுக்கு முன் இழந்தவர். அதன் பின் திருமணமாகாதவர். அவருக்குப் பிள்ளைகள் கூட இல்லை. தனிமையாக தன் சொந்த வீட்டில் தாயோடு வாழ்கிறார் “


“ அவரைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் அண்ணா. அவர் வீட்டுக்கு நான் இரண்டு முறை என் படிப்பு விசயமாக போயிருக்கிறேன் அவரோடு இருக்கும் தாயுக்கு எண்பது வயசு . அவவும் ஒரு அறிவியல் பட்டதாரி. நல்ல மனுசி. இவர் அவவுக்கு ஒரே மகன். பத்து வருடங்களுக்கு முன் கணவனை அவ இழந்து விட்டா. பாவம் .இப்ப மகன் தான் எல்லாம் “. .

“ முக்கியமாக நீ ஒரு உயர் வேளாள இந்து சாதிப் பெண். உன் பூட்டனர் முதலியாராக பிரிட்டிஷ் காலத்தில் இருந்தவர். கோவில் தர்மா கர்த்தா வேறு பேராசிரயர் அன்டன் ஜெயரத்தினம் எங்களைவிட குறைந்த சாதியைச் சேந்தவர் அதோடு கத்தோலிக்கர். வேறு. நீ ஒரு இந்து என்பதை மறக்காதே “

“ அதுக்கு என்ன அண்ணா ?. இப்ப ஒரு வரும் சாதி பார்த்து காதலிப்பது குறைவு. இனம் மாறி கூட முடிக்கிறார்கள் அவர் ஒரு படித்த பேராசிரியர் . அன்புக்கு, சாதி, மதம், மொழி. வயசு வித்தியாசம் இனம் இல்லை அண்ணா. இரு மனங்கள் ஒத்துப் போனால் எவரும் பிரிக்க முடியாது”

நீ அவரை விரும்புறாயா சாந்தி “? என் தம்பி கேட்டான்

“ அப்படியும் வைத்துக் கொள்ளுங்கோவன்” .

“ அப்பா, அம்மாவுக்கு இது தெரியுமா “?

“அப்பாவுக்கு ஓரளவுக்குத் தெரியும் அம்மாவுக்கு தெரியாது தெரிந்தால் வீடு இரண்டாகும். அப்பா ஓரு முற்போக்கு வாதி::

“ அவர் என்ன சொன்னார்”?: நான் சாந்தியைக் கேட்டேன்.

“ உன் விருப்ம் என்றார் சுருக்கமாக ”

“அவர் பேராசிரியர் என்பதற்காக நீ அவரை விரும்புகிறாயா “ ?

“ அண்ணா அவரின் பணத்துக்காகவோ படிப்புக்காகவோ நான் அவரை நான் விரும்பவில்லை “

“ பின் எதற்காக அவரை விரும்புகிறாய்?. அவருக்கு இப்ப ஒரு மகள் இருந்தால் அவளுக்கு உன் வயசு இருக்கும் . அவர் பல காலம் வாழப் போவதில்லை”

“ அவர் என் அப்பாவைப் போல் சீர்திருத்தவாதி . என் அப்பாவை அவரில் காண்கிறேன்”

“என்ன சாந்தி எதோ புதுசாகச் சொல்லுறாய்? . உன்னில் நானும் அண்ணாவும் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறோம் என்று உனக்குத் தெரியும் தானே . நல்ல இடத்தில் படித்த ஒருவனாய் பார்த்து உனக்கு கலியாணம் செய்து வைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.” என் தம்பி சொன்னான்

“பாவம் புரபெசர். அவருக்கு மனைவி பிள்ளையள் இல்லை. தனி மனிதன். படித்தவர். குடி. சிகரெட் போன்ற கெட்டப் பழக்கங்கள் அவருக்கு இல்லை அண்ணா. என் வருங்காலத்தில் அக்கறை உள்ளவர். அமைதியானவர். கோபம் அவருக்கு வருவதே இல்லை” சாந்தி சொன்னாள்

“இப்ப இளம் பெண்கள் வயசு வந்தவர்களை காதலிப்பது பணத்துக்கும் புகழுக்கும் தான் , இது ஒரு பேஷனாக வந்துவிடடது ஏன் அமெரிக்க ஜனாதிபதியை பார்க்கவில்லையா?. அவருக்கு எவ்வளவு இளம் வயது வயது மனைவிகள் இருந்தார்கள் என்று . இபோதைய மனைவியும் இளம் வயது மொடேல் . ஆரம்பத்தில் இளம் வயது பெண்களை தொடர்புகொள்வது எளிது. இருபதுகளின் ஆரம்பத்தில், இளைய பெண்கள் தங்களுக்கென அடையாளங்களைக் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் இன்னும் தங்கள் உணர்வுகளை கையாளுவதில். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும், வெளி தோற்றத்ததை நம்பி ஏமாறக் கூடாது. வயது கூடிய மனிதன் இளம் பெண்களின் உணர்ச்சிகளை திருப்தி படுத்த முடியுமோ எனக்குத் தெரியாது. அது மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாளோ தெரியாது” என் தம்பி சொன்னான்


“அண்ணா அப்பழுக்கில்லாத அன்பை மட்டுமே செலுத்துவதுதான் உண்மையான காதல் என்ற அன்பின் வடிவம். அதுதான் மனிதனை பல்வேறு இடங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. தான் விரும்புவர் அந்தக் காதலை உணர்ந்து பாராட்டுகிறாரா, இல்லையா என்பது அப்பாற்பட்ட ஒருவித இதய உணர்வு . காதல் என்பது நிபந்தனைகள் அற்றது. காதலும் காமமும் மனிதனுக்கு இனப் பெருக்கத்திற்காக மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒரு இறுக்கமும், உண்மையும், புனிதமும் இருக்கிறது. இதைத் தான் சத் குருவும் சொன்னார் “, சாந்தி காதல் பற்றி தன் கருத்தைச் சொன்னாள்

“அப்போ அம்மா அப்பா ஜாதகப் பொருத்தம்., சாதி, மதம் பார்த்து செய்து வைக்கும் திருணத்தைப் பற்றி என்ன சாந்தி சொல்லுகிறாய் .” ? நான் அவளிடம் கேட்டேன்

“அண்ணா ஒன்று புரிந்து கொண்டு, வாழ்க்கையை ஆனந்தமாக்கிக் கொள்ள ஏற்பட்ட அமைப்பு. அதை மறந்து, அடுத்தவரிடம் என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கணவன் மனைவி உறவு அமைந்தால், வாழ்க்கை கொந்தளிப்புகள் நிறைந்ததாகிவிடும். கோர்ட் வரை போகாவிட்டாலும், குடும்ப அளவிலேயே திருமணம் தோற்றுவிடும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இருவருக்கும் இடையில் அன்பு மட்டும் தீவிரமாக மலர்ந்திருந்தால், வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் விழுந்தாலும் காயப்படாமல் அறுபது நாளென்ன, அறுபது வருடங்களானாலும் சுகமாக மிதந்து பயணம் செய்ய முடியும்.இப்படி சத்குரு ஈசா சொலியிக்கிறார்”

“ அது சரி உங்களின் . உறவை பார்த்து சமுகம் கேலி செய்யாதா?தம்பி கேட்டான்

“அது சரி தங்கச்சி உனக்கும் அவருக்கும் உள்ள பொருத்தமான விருப்பங்கள் எவை “? நான் சாந்தியைக கேட்டேன்

“பல இருக்கு அண்ணா. இருவரும் மாமிசம் உண்பதில்லை . தியானம் செய்வோம், வாசிப்பதும் எழுதுவதும் பிடிக்கும். ஆடம்பரம் இல்லாத உடுப்புகள் என்னைப் போல் அவருக்கும் பிடிக்கும் . அவருக்கு கோபம் வருவதில்லை எதையும் பொறுத்துக் கொள்ளும் மனம் அவருக்கு. அவருக்குப் படித்த பெருமையில்லை. யாரோடும் வம்பு பேசமாட்டார், சைவ உணவு அவருக்கு என்னை போல் விருப்பம். உலாவச் செல்வது விருப்பம். ஓய்வு நேரத்தில் தோட்ட வேலை செய்வது அவர்பழக்கம் என்னைப் போல் அவருக்குப் பழங்கள் பிடிக்கும். சுருங்கச் சொன்னால் எங்கள் இருவரினதும் இயற்கை அதிர்வேண்கள் கிட்டத்தட்ட ஓன்று. அதனால் பெளதிகத்தில் சொல்வது போல் எங்களுக்குள் ஒத்த அதிர்வுகள் உண்டு . அதனால் இரு மனங்களும் ஒத்துப் போகிறது. இப்படி பெரிய லிஸ்ட்டே இருக்கு அண்ணா”

“அவர் முக்கியமாக பெண்கள் மத்தியில் பிரபலமானவர் என கேள்விப்பட்டேன்” என்றேன் நான்

“ மாணவ மாணவிகளிடம் அவர் அன்பாக நடப்பார். அவ்வளவு தான் “ சிரித்தபடி சாந்தி பதில் சொன்னாள்

“ சாந்தி உனக்கு ஒரு அறிவுரை . காதலில் முழு நேரத்தையும் செலவு செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்தி. முதல் வகுப்பில் பாஸ் செய். என்ன”? நான் சொன்னேன்

****

நான் எதிர்பார்த்த மாதிரி சாந்தி முதல் வகுப்பில் பாஸ் செய்து பெளதிகத்தில் பட்டதாரியானாள். நான் எதிர்பார்க்காத விதமாக. அவளுக்குப் பல்கலை கழகத்தில் பௌதீகத்தில் ட்சுரர் வேலை கிடைத்தது. ஆறு மாதத்துக்குள் பேராசிரியர் அன்டன் ஜெயரத்தினத்துக்கும் சாந்திக்கும் பதிவு திருமணம் ரெஜிஸ்றார் ஆபீசில் நடந்தது . நானும் தம்பியும் சாட்சிகளாக இருந்தோம். அப்பா வந்திருந்தார். அம்மா வரவில்லை. இனத்தவர்கள் வரவில்லை. சாந்தியோடு படித்தவர்கள் வந்திருந்தார்கள். பேராசிரியரின் தாய் கைகோல் பிடித்த படி தன் மகனின் இரண்டாம் திருமணத்துக்கு வந்திருந்தாள் அவள் சாந்தி கழுத்தில் சிலுவைப் பதக்கம் உள்ள தங்கச்சங்கிலியை தன் பரிசாகப் போட்டாள். அவளுக்காக என் அப்பா வங்கியில் சேமித்து. வைத்திருந்த ஒரு லட்சம .பணத்தை அவளிடம் கொடுத்தார். நானும் தம்பியும் எங்கள் திருமணப் பரிசாக் ஆளுக்கு 50,000 ரூபாய் கொடுத்தோம்.. சாந்தி குடித்தனம் செய்ய பேராசிரியர் வீட்டுக்குப் போய் விட்டாள். இந்து, கதோலிக்க கோவில் திருமணச் சடங்குகள். இடம்பெறவில்லை

*****

என் தங்கச்சிக்க அவள் விருபப்படி திருமணமாகி இரு வருடங்களுக்குள் எங்களுக்கு ஒரு மருமகனைப் பெற்றுக் கொடுத்தாள். எனக்கும் தம்பிக்கும் அப்பாவுக்கும் சந்தோசம்.அம்மா பேரனை பார்க்க அவள் வீட்டுக்குப் போகவில்லை . அவ்வளவு பிடிவாதம் அவளுக்கு. மகன் பிறந்த நேரமோ என்வோ அடுத்த வருடம் சாந்திக்கு லண்டன் போக மூன்று வருட ஸ்கொலர்ஷிப் கிடைத்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பு . அவள் ஆசை பட்ட மாதிரி நடந்து விட்டது.


“ நான் என் செல்ல மகன் செல்வரதினத்தை பார்த்து கொள்கிறேன். நீ ஒன்றுக்கும் யோசிக்காமல் போய் படித்து முடித்து, முனைவர் பட்டம் பெற்று வா என்று சொல்லி சாந்தியை வழி அனுப்பி வைத்தார் பேராசிரியர் ஜெயரத்தினம்.

“செல்வமும் ஜெயமும் இனி சாந்தியின் வீட்டை ஆட்சி செய்ய போகினம்” என்றார் அப்பா சிரித்தபடி அம்மா ஒன்றும் பேசவில்லை.

***** ’



Rate this content
Log in