பூவரசம் பூ பூத்தாச்சு
பூவரசம் பூ பூத்தாச்சு
“என்ன புனிதா தலையில் கைவைத்தபடி யோசித்துக் கொண்டிருக்கிறாய் ? ஏதாவது வகுப்பில் உனக்கு பிரச்சினையா?” புனிதாவின் தாய் கமலாதேவி கேட்டாள்
கணேஷ் கமலா. தம்பதிகளுக்கு இரு பெண்கள் . மூத்தவள் புனிதா . அவள் பிறந்து ஐந்து வருடங்களுக்கு பின் வனிதா பிறந்தாள்
இருவரும் ஒரே கல்லூரியில் படித்தார்கள் . புனிதா , ஒடுதல் , உயரம் பாய்தல், நீளம் பாய்தல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினாள். பல பரிசுகள் பெற்றவள். படிப்பில் அவ்வளவுக்கு ஆர்வம் அவளிடம் இருக்கவில்லை . வனிதா , புனதாவுக்கு எதுர் மாறு. வனிதா படிப்பில் படு சூரி . புனிதாவுக்கு தங்கை மேல் அளவு கடந்த பாசம்.
“ அப்படி ஒன்றும் வகுப்பில் பிரச்சனை இல்லை அம்மா.”
“நான் நினைத்தேன் ஏதோ படிப்பில் உனக்கு பிரச்சனையாக்கும் என்று.”
“அம்மா எண்டை தங்கச்சி வனிதாவுக்கு என்னிலும் பார்க்க ஐஞ்சு வயசு குறைவு தானே ?”
“ அது எனக்கு தெரியும் , உங்கள் இரண்டு பேரையும் பெற்றவள் நான் . நீ எனக்கு சொல்ல தேவை இல்லை .
வனிதாவுக்கு இப்ப வயது பதின்ரெண்டு சரியான வயசிலை பெரிய பிள்ளை ஆயிட்டாள். அவளுக்கு சாமத்திய சடப்கு விழா’ நடத்த வேண்டும், அந்த செலவு வேறை இ ருக்கு.”
“எனக்கு வயசு 17 ஆகியும் நான் ஏன் அம்மா இன்னும் பெரிய மனுசி ஆகவில்லை . நான் தங்கச்சி போல பெரிய பிள்ளை ஆவேனா அம்மா ?”
“இங்கே பார் மகள் புனிதா இதைப் பற்றியா யோசித்துக் கொண்டிருக்கிறாய் ? அதுக்கெல்லாம் நேரம் காலம் வரவேண்டும் பிள்ளை நீ வந்து ஸ்போர்ட்சில் கெட்டிக்காரி நான் கேள்விப்பட்டேன் ஸ்போர்ட்ஸ் செய்தவர்களுக்கு பெரிய பிள்ளையாவடக்கு தாமதம் இருக்கிறது என்று.”
“நீங்கள் எண்டை தங்கச்சிக்கு சாமத்தியச் சடங்கு பெரியதாக செய்யப் போறியலே.?”
“அப்படித்தான் நானும் அப்பாவும் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறோம் அதிலே என்ன தவறு ? எங்கள் சொந்தங்கள் . பந்தங்கள், நண்பர்கள் எல்லாருக்கும் சொல்லித்தான் செய்ய யோசிக்கிறம்.”
“நீங்கள் வீணாக காசு செலவழிக்க வேண்டுமா அம்மா ?இல்ல நான் இதை ஏன் கேட்கிறேன் என்றால் அந்த காசை மிச்சம் பிடித்தால் ,பிறகு அவள் திருமணதுக்கு சீதனமாய் கொடுக்கலாமே.”
அவளுக்கும் உனக்கும் சீதனம் கொடுப்பது எங்களுடைய பொறுப்பு. நானும் உன் அப்பாவம் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறம்’. உன் அம்மம்மா கூட உங்கள் ரெண்டு பேருடைய கல்யாணத்துக்கு காசு மிச்சம் பிடித்து வைத்திருக்கிறா.”
“அது சரி அம்மா எனக்கும் என் தங்கச்சிக்கு பெரிய பிள்ளையானது செய்யப் போவது போல் எனக்கும் செய்வீர்களா?”
“ இது என்ன கேள்வி . உன் அப்பவும் நானும் உனக்கும் செய்யாமல் விட முடியுமா என்ன? ஊர் சனங்கள் என்று நினைக்கும் சொல்லு பாப்போம்.”
“ அம்மா உங்களை நான் ஒரு கேள்வி கேட்கலாமா
“கேள் புனிதாஅதற்கு பதில் தெரிந்தால் சொல்லுறன்.”
“இல்லை அம்மா இப்படி எல்லாம் இனத்தவர்களே நண்பர்களுக்கும் சொல்லி தங்கச்சிக்கு சாமத்தியச் சடங்கு வைக்க வேண்டியது அவசியமா?”
“ இங்கே பார் புனிதா ,இது இந்த ஊர் சமூகத்தில் நடக்கும் வழக்கம் , நானே தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் வீட்டில் நடந்த விசேசங்களுக்குப் போய் காசு கொடுத்து போட்டு வந்தனான் , இப்ப நான் உன் தங்கச்சியின் சாமத்தியச் சடங்கு நடத்தினால் தான் நான் அவர்களுக்கு கொடுத்த காசு திருப்பி எடுக்க வேண்டும் தானே ?
“இது என்ன வேடிக்கையான கதை அம்மா? அப்ப நீங்கள் தங்கசிக்கு சாமத்தியச் சடங்கு வைக்கிறது நீங்கள் கொடுத்த காசை திருமம்பி பெறவா?”
“புனிதா இது எங்களுடைய சமூகத்தில் இருந்து வரும் பழக்கம் . நான் பணசச் சடங்கு என்று அவிக்க தேவையில்லை அவர்களாகவே கொண்டுவந்து பணம் தரும் போது நான் தர வேண்டாம் எண்டு’ சொல்ல முடியுமே’?”
“அம்மா நீங்கள் உங்களுடைய அக்காவுடன் ஒரு சிறு பிரச்சினைப் பட்டு
பெரியம்மா வீட்டுக்கு கன காலம் போனது இல்லை . கடந்த பல மாதங்களாக அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தது இல்லை. அவ குடும்பத்தையும் கூப்பிடுவியிலே தங்கச்ச்யின் சாமத்திய சடங்குக்கு?”
“அது எப்படி கூப்பிடாமல் இருக்க முடியும் ? உன் அம்மம்மா அன்றைக்கே சொல்லி போட்டா என்னை போய் தன் மூத்த மகளின் வீட்டுக்கு போய் என்னை அவர்களை வனிதாவின் சாமத்திய சடங்குக்கு வர சொல்லி கூப்பிட வேண்டும் எண்டு .”
“ ஒருவிதத்தில் இப்படி சாமத்தியச் சடங்கு திருமணம் என்று வரும்போது தான் குடும்பத்தில் உள்ள கோபதாபங்களை மறந்து ஒரு ஒற்றுமையாக சந்தர்ப்பம் கிடைக்கும் என்னம்மா?”
“ நீ சொல்வதிலும் உண்மை இருக்கிறது அது மட்டுமல்ல உன் பெரியம்மாவின் மக்ளிண்டை சாமத்திய சடங்குக்கு நான் போய் நின்று நடத்தினான். அது கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு முந்தி நடந்தது . காசும் கொடுத்தனான்.”
“அது இருகட்டும் அம்மா, உனக்கு ஓன்று சொல்ல மறந்திட்டான் .
“ என்ன சொல்லு கேட்கிறன்,”
“அம்மா எனனை ஸ்கூலிலை மாணவிகள் பகிடி செய்யினம் என் தங்கச்சி என்னை விட அஞ்சு வயசு குறைவாம் அவ பெரிய பிள்ளை ஆகி விட்டாவாம் நான் இன்னும் ஆக்வில்லையாம் . நான் ஆணாக இருக்கலாம் என்று சொல்லினம் . அப்படியும் நான் இருக்கலாமா அம்மா ?”
“அவர்களுக்கு விசர். அப்படி ஒன்றும் இல்லை உனக்கு புனிதா . அவர்கள் சொல்லுகிறார்கள் எண்டு நீ ஒன்றுக்கும் யோசிக்காதே நீ விரைவில் பெரிய பிள்ளை ஆவாய் உனக்கு உன் தங்கச்சிக்கு சாமத்தியச் சடங்கு இனம் சனதை கூப்பிட்டு நடத்துவேன் நீ ஒன்றுக்கும் இதை பற்றி யோசித்து மனதை அலட்டிக் கொள்ளாதே,” கமலா சொன்னாள்/
“ அம்மா என்னை ஒரு தடவை கொண்டு போய் டாக்டரிடம் காட்டிக் கேளுங்’கோவன், ஏன்எனக்கு ஏன் இந்தப் பிரச்சனை இருக்கிறது எண்டு .”
“நானும் உன் அப்பாவும் இதைப் பற்றி எங்கள் குடும்ப வைத்தியரிடம் பேசினம் .
அவர் சொன்னார் சில பெண்களுக்கு பெரிய பிள்ளையாக தாமதமாக நடக்கும் என்று அதுவும் நீ வந்து உயரம் பாய்தல் ஓட்டங்களில் பங்குகொள்பவள் உன் தங்கச்சி அப்படியல்ல அதிகமாக விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களுக்கு தாமதித்து தான் பெரிய பிள்ளையாவார்களாம்
“இது தெரிந்திருந்தால் நான் ஓடுவதும் , உயரம் பாயும் நிறுத்தி இருப்பேன் அம்மா.”
“இங்க பார் புனிதா இதைப்பற்றி நீ வீணாக அலட்டிக் கொள்ளாதே நான் உன்னுடைய ஜாதகத்தை கொண்டு போய் ஏங்களுடைய சாஸ்திரியிடம் காட்டினான் அவர் சொன்நார் நீ நிச்சயம் திருமணமாகி குழந்தைகள் பெறுவாய் எண்டு. குழந்தைகள் பெறுவதற்கு நீ பெரிய பிள்ளையாக வேண்டியது அவசியம் அது உனக்குத் தெரியும் தானே. நீ தரும் சத்துள்ள அடம் பிடிக்காமல் சாப்பிட வேண்டும்.”
“ அதைத்தான் கிலாசிலை சயன்ஸ் டீச்சரும் சொன்னவ. ஏதோ அம்மா நான் தினமும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் எனக்கு விரைவில் என் பிரச்சினை தீர வேண்டும் எண்டு. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறன். “
“ நீ ஒன்றும் யோசிகாதே புனிதா . எது நடக்க வேண்டுமோ அது அந்த நேரம் நடக்கும் . இதுக்காக நீ உன்னுடைய திறமையை ஓடுவதிலும் உயரம் பாய்வதிலும் காட்டாமல் விட்டு விடாதே விளங்குதா?” கமலா சொன்னாள்.
“சரி அம்மா இதைப்பற்றி நீ என் தங்கச்சயோடை கதைக்க வேண்டாம் அவள் கவலைப் படுவாள் அவளுக்கு ஏற்கனவே நான் இன்னும் பெரிசாக வில்லை எண்டு கவலை .”
“அது எனக்கு தெரியும் . நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் .நீ உன் படிப்பிலும் ஓட்டத்திலும் கவனம் செலுத்து.”
****
இந்த சம்பாஷனை தாய்க்கும் மகளுக்கும் நடந்து ஒரு கிழமைக்கு பின் புனிதாவின் தங்கச்சி வனிதாவின் சாமத்தியச் சடங்கை நடத்தினர் புனிதாவின் தாயும் ,தகப்பனும்.
வைபவம் நடந்த மண்டபத்தில் புனிதா ஒதுங்கியிருந்தாள். வந்திருந்த வனிதவின் சிநேகிதிகள் இடம் கூட அவள் அதிகம் பேசவில் லை. . கமலாவின் சினேகிதி மாலதி வந்து புனிதாவிடம் கேட்டாள்
“என்ன புனிதா உன் தங்கச்சி பெரிசாகி அவளுக்கு வைபவம் நடக்குது . எப்ப உனக்கு இது போல் சாமத்திய சடங்கு நடக்கப் போகுது ? ஏன் நீ இன்னும் பெரிசாகமல் இருக்கிறாய் ?உனக்கு ஏதாவது பிரச்சனையா நீ எப்ப பெரியபிள்ளை ஆகப் போறாய்?”
மாலதி கேட்ட கேள்வி புனிதாவுக்கு பிடிக்கவில்லை. அதுவும் வந்திருந்தவர்கள் முன்னில் அவள் குரலை உயர்த்தி கேட்டது அவளுக்கு கோபத்தை கொடுத்தது .
“ இந்த கேள்வியை என்ன படைச்ச கடவுளிடம் போய் கேளுங்கள் மாமி .”என்று சொல்லி விட்டு புனிதா அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
புனிதாவின் அப்பாவின் சகோதரி ராஜம்மா புனி’தவிடம் வந்தாள் .அவளுக்கு புனிதா குடும்பத்தில் உள்ள குறைகளை கண்டுபிடித்து விமர்சிப்பது என்றாலே ஒரு திருப்தி.
“என்ன புனிதா ஒதுங்கிப் போய் யாருடனும் அதிகம் பேசாமல் நிக்கிறாய் ? உன் தங்கச்சி பெரிய பிள்ளையான வைபவத்தில் நீ முன்னின்று அல்லவா நடத்த வேண்டும்? என்ன பிரச்சனை உனக்கு.ஏதாவது கவலை இருப்பதுபோல் தெரிகிறது. நீ பெரிய பிள்ளையாக வில்லை உனக்கு முன்பு உன் தங்கச்சி பெரியபிள்ளை ஆகிவிட்டாள் என்றகவலை தானே உனக்கு?”
“ மாமி இந்த வைபவத் துக்கு நீங்கள் வந்தது இப்படி மற்றவர்களைப் பற்றி பேசவா ? ஒவ்வொருவருக்கும் ஒரு நல்லது நடக்க காலம் நேரம் என்று ஓன்று இருக்கு . அதை நீங்கள் முதலில் புரிஞ்சு கொள்ளுங்கோ .
எனது அம்மம்மாவும் காலம் கடந்துதான் பெரிய பிள்ளையானவ.
அதனால் அந்த நாள் எனக்கு தாமதமாகலாம் . டாக்டர் அம்மாவுகம் அப்பாவும் சொன்னார் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்
என் உடம்பில் ஒரு குறையும் இல்லை எண்டு.”
“நீ ருதுவாக காலம் கடந்தால், ஊர் சனங்கள் ஒருமாதிரி பேசத் தொடங்குவினம் , நீ ருதுவாகாமல் உனக்கு திருமணம் செய்து வைக்க முடியாது உன்னால் குழந்தைகள் பெற முடியாது . ஒருவரும் வரன் தரமாட்டார்கள் . அது தெரியுமா உனக்கு?”
“மாமி இது போன்ற விஷயங்கள் இந்த நல்ல நாளில் வந்தே நீயங்கள் கதைக்க வேண் டும் . ஏன் உங்கள் விவாகரத்து செய்ததை பற்றி ஊர் சொல்லி சிரிக்குது .”
என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்க்காமல் புனிதாசென்று விட்டாள்.
****
வனிதாவுக்கு சாமத்திய வைபவம் நடந்து முடிந்து பல மாதங்கள் ஆனது . தான் இன்னும் வயசாகவில்லை என்ற கவலை புனிதாவின் மனதில் இருந்து கொண்டே வந்தது
அவளுக்கு 18வயது ஆகிவிட்டது ஒரு நாள் கல்லூரிகளுக்கு இடையே நடந்த உயரம் பாய்தல் ஓடுதல் போட்டியில் பங்கு அவள் கொண்டு இருந்தபோது அவளுக்கு திடீர் என்று வயிற்றில் ஒரே வலி எடுத்தது .உயரம் பாய்தல் போட்டியில் பங்கு கொள்ள முடியாது என்று தன் கல்லூரி உடல் பயிற்ச்சி ஆசிரியையுக்கு புனிதா சொன்னாள்/
“என்ன புனிதா கடைசி நேரம் இப்படி சொல்லுகிறாய் உனக்கு நீ பங்கு கொள்ளும் பட்டிகளில் நிட்சயம் முதல் பரிசு கிடைக்கும் . அதால் எங்கள் கலூரிக்கு பெருமை .நீ அவசியம் பங்கு கொள்ள வேண்டும்.”
ஆசிரியை சொன்னாள்.
“ டீச்சர் எனக்கு பயமாக இருக்கின்றது ஏதோ என் உடலில் ஒரு மாற்றம் ஏற்பட்டு விட்டது போல் எனக்கு உணர முடிகிறது என்னை உடனே என் தங்கச்சியுடன் என் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் .” புனிதா பதட்த்துடன் சொன்னாள்.
ஆசிரியைக்கு அவளுடைய நிலை புரிந்துவிட்டது அவளை கூட்டிக்கொண்டு போய் ஒரு அறைக்குள் வைத்து பரிசோதனை செய்துவிட்டு சந்தோசத்துடன் “புனிதா நீ பெரியபிள்ளை ஆகிவிட்டாய் உனக்கு இது ஒரு பெரிய பரிசு கிடைத்து விட்டது நீ இனி இந்தப் போட்டியில் பங்கு கொள்வது உசிதம் இல்லை உன்னைக் கூட்டிக் கொண்டு உன் வீட்டுக்குப் போகிறன்.” டீச்சர் சொன்னாள்
என்ன டீச்சர் சொல்லுகிறீர்கள் நான் எதை இவ்வளவு காலமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேனோ அது நடந்து விட்டது. இனி ஒருவரும் குறை சொல்ல முடியாது.”
“ஆமாம் புனிதா என் வாழ்த்துக்கள் . நீயும் உன் தங்கச்சி போல் பெரிசு ஆகிவிட்டாய் ஒன்றுக்கும் யோசிக்காதே நீ கொஞ்ச நாட்கள் உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும் பள்ளிக்கு வரக்கூடாது நீ வா என்னுடன் நான் உன்னை வீட்டுக்கு அழைத்துப் போகிறேன்.” என்றார்
புனிதவை அவள் வீட்டுக்கு கூடிப் போக முன்பே அந்த ஆசிரியை புனிதாவின் தாயுக்கு டெலிபோன் செய்து புனிதா ருதுவான செய்தியை சொன்னாள்.
அதுக்கு கமளா “ டீச்சர் இந்த நல்ல செய்தியை சொன்னீர்கள் அவள் போட்டியில் பங்குபற்றி முதலாம் பரிசு பெறுவதைவிட இந்த பரிசைத் எங்கள் குடும்பம் விரும்பும்
நான் உங்கள் மகளைஉங்கள் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வருகிறேன். அவளைக் கவனித்துக் கொள்ளுங்கள் .அவளுடைய தங்கச்சிக்கு எப்படி நீங்கள் பெரிய அளவில் சாமத்தியச் சடங்கு வைத்தீர்களோ அது போலவேபுனிதாவுக்கும் செய்யுங்கள். பாகுபாடு காட்ட வேண்டாம்.”
“ டீச்சர் நானும் என் கணவரும் இதை பற்றி ஏற்கனவே பேசி விட்டோம் எங்கள் வாழ்த்துகளை அவளுக்கு சொல்லி , அவளை ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் எண்டு அவளுக்கு சொல்லுங்கள் அவளுடைய தங்கச்சி வனிதாவுக்கு எப்படி நாங்கள் பெரிய அளவில் சாமத்தியச் சடங்கு வைத்தோமோ அதே போல அவளுக்கும் நிச்சயம் வைப்பம் எண்டு.” கமலா சொன்னாள்.
டீக்கடை கமலா சொன்னதை புனிதாவுக்கு சொன்னதும் அவளுடைய முகம் மலர்ந்தது
“டீச்சர் இது என்னுடைய வாழ்க்கையில் ஒரு புது அனுபவமும் ஒரு சந்தோசமும் அதுவும் நான் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வந்த போது நடந்துவிட்டது போட்டியில் கலந்து கொள்ளாமல் விட்டதுக்கு எனக்கு கவலை இல்லை அதைவிட நான் ருது ஆனது தான் எனக்கு மிகவும் சந்தோஷம் .”என்றாள் புனிதா
ஓட்டப் போட்டி விழாவுக்கு பொருத்தியிருந்த ஒளிபரப்பில் அந்த சமயம் பூவரசம்பூ பூத்தாச்சு “என்ற பாடல் போய்க்கொண்டிருந்தது
டீச்சர் சிரித்துவிட்டு சொன்னாள் “புனிதா அதோ கேட்கும் பாடல் இந்த நேரத்துக்கு ஏற்ற பாடலாக இருக்கிறது .”
புனிதா வெட்கத்தில் தலை குனிந்தாள்.
