Ponnambapalam Kulendiren

Action

3.2  

Ponnambapalam Kulendiren

Action

வன்னியின் வீர மன்னன் பண்டாரவன்னியன்

வன்னியின் வீர மன்னன் பண்டாரவன்னியன்

3 mins
316



முகவுரை

யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன் பண்டார் வன்னியன் (வன்னியர் என இங்கு குறிப்பிடுவது வலிமை உடையோன் என்பதாகவே பொருள்)

*******

இலங்கையின் வடக்கு , கிழக்கு பகுதிக்ளுக்கும் , சோழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு கிறிஸ்துக்கு பின் பதினோராம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் அனுராதபுர ராச்சியத்தை போரில் வென்று பொலோனருவையில் தலைநகரம் அமைத்து ஆண்டாள் என்பது வரலாறு. அவனுக்கு பின் அவனுடைய மகன் ராஜேந்திர சோழன் முழு இலங்கையும் ஆண்டான் என்று வரலாறு சொல்கிறது இவர்கள் இலங்கையை கைப்பற்றினாலும் அவர்கள் தங்களது தளபதிகளை பரிபாலனம் செய்ய அமர்த்திவிட்டு தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கிருந்து ஆட்சி புரிந்தார்கள். அந்த சோழ தளபதிகள் இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள பகுதியில் ஆண்டார்கள் அவர்கள் பரம்பரை வந்தவர்களே பின்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் வடமராட்சியில் தென்மராட்சியில் ஆட்சி செய்தர்கள் என்று வரலாறு சொல்கிறது .

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு தெற்கேயுள்ள அனுராதபுரம் வரை உள்ள இடத்தை வன்னி என்று சொல்வார்கள் அது பரந்த நிலப்பரப்பை கொன்ற இடம். பல குளங்களை கொண்ட நிலம். நெல் விளையும் பூமி அங்குதான் ஈழத்துப் போர் நடந்து .


அந்த பொன் விளையும் நிலத்தை பல குறுநில மன்னர்கள் ஆண்டார்கள். அதில் முக்கியமானவன் பண்டார வன்னியன். இவன் பல பகுதிகளை ஆண்டான் / இவன் ஒரு மாவீரன். முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.. இவனுக்கு பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம்.

முல்லைதீவு , பூநகரி திருகோணமலை , மன்னார்போன்ற பல பகுதிகளைஆண்டான் . \ பண்டாரவன்னியன் முல்லைத் தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.

அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னிநிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னாக காக்கை வன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.

ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்க கண்ட காக்கை வன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனூப்புகிறான். இந்த சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை அறிந்து கொள்கிறான். இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறான்.

இது ஒரு புறமிருக்க.. வன்னிநிலப்பரப்பில் பண்டாரவன்னியன் திறை செலுத்தமறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகாட்டி பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். அத்தருணத்தில் காக்கை வன்னியன் பண்டரா வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க்கவேண்டாமென்ற ஆலோசனையையும்மீறி மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக்கொள்கிறான். ஆனால் தருணங்களை காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டு சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் இந்த காக்கை வனனியன்.

இன்றும் நம்பி ஏமாற்றுவர்களை நீ காக்கை வன்னியன் பரம்பரையோ என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது..


ஒரு நாள் தம்பி பெரியமைனர் பண்டார வன்னியனுக்கு சொன்னார்

 “அண்ணா நமது வன்னி நாட்டைக்கைப்பற்று நோக்கம் அந்த வெள்ளைக்கார கும்பலுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் நமது சகோதரர்களாகிய சிங்களவர் வாழும் கண்டிப் பிரதேசத்தை கைப்பற்ற பெரும்படைகளை அநுப்பியிருக்கிறார்கள். இந்தச்சந்தர்ப்பத்தில் சிங்களமக்களுக்கு துணையாகவும் ஆங்கிலேயருக்கு எதிராகவும் வீறு கொண்டு சீறியெழும் எங்கள் படைகளை அனுப்பிவைத்தால் நன்மையாக இருக்கும்.”

பண்டரா வன்னியன்: “ஆகா நல்லது தம்பி கைலாயா உமது யோசனை என் தம்பி கைலாய வன்னியன்.”

“அண்ணா கண்டிக்கு நமது படைகளை அநுப்புவதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று சிங்களமக்களை காப்பற்ற உதவி புரிந்ததாக இருக்கும். அடுத்தது இந்த சந்தர்பத்தில் நமது படை பலத்தை வெள்ளையருக்கு காட்டகூடியதாயிருக்கும். சுணங்கமால் நமது படைகளை கண்டிக்கு அனுப்புதல் நலம்.”

பண்டாரவன்னியன்: “தம்பி பெரியமைனர் நமது நாட்டில் விளைகின்ற ஏலம் கறுவா கராம்பு முதலிய திரவியங்களை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் வெள்ளைக்கார கும்பலுக்கு இடம்கொடுக்கலாகாது. எமது உடன் பிறப்பாகிய சிங்களமக்களையும் கண்டி நாட்டையும் காப்பற்றியாக வேண்டும். எனவே தயங்காது நமது படைகளைக் கண்டிக்கு ஆயுத்தம் செய்வாயாக…”

கண்டி மன்னனுக்கும் பண்ரார வன்னியனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தபடியால் அங்கு ஒரு சிங்களப் பெண்ணை திருமணம் செய்து உறவைப் பலப்படுத்திக் கொண்டார் என்று சொல்லுகிறது வரலாறு இது எவ்வளவு உண்மை என்பது தெரியாது அந்நிய படைக்கெதிராக போர்புரிய கண்டி மன்னன் அவனுக்கு படைப்பலம் கொடுத்து உதவினார் என்பது உண்மை

இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.

பண்டார வன்னியன்முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

காக்கை வன்னியானாள் காட்டிக் கொடுக்கப்பட்டு ஆங்கிலேயர்களுடன் போராடி கற்சிலை மடுவில் பண்டார வன்னியன் காயப்பட்ட அவனைப் போரில் அந்த கிராமத்தில் தோற்றதாக இன்றும் ஒரு பதிவு உண்டு காயப்பட்ட மன்னன் அங்கிருந்து பனங்காமத்துக்கு சென்று சில காலம் வாழ்ந்து இறந்ததாக சொல்கிறார்கள், அவன் இறந்த சில மாதங்களில் அவனின் மனைவியும் இறந்தாள்.



****



Rate this content
Log in

Similar tamil story from Action