STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Drama Thriller

3  

Amirthavarshini Ravikumar

Drama Thriller

கண்டது கனா

கண்டது கனா

3 mins
178

  ஒரு பெரிய மாளிகையில் கமல் தன் கூட்டு குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்தான். அழகான குடும்பம், அன்பான குடும்பத்தார், அற்புதமான வாழ்க்கை என சொர்க்க வாழ்க்கை வாழ்ந்து வந்தான். அக்கம் பக்கத்தார் அனைவரும் சொர்க்கம் போல் வாழும் குடும்பம், ராஜ வாழ்க்கை என அந்த குடும்பத்தை புகழ்வர். கமலுக்கு இரு மகன்கள். இருவருக்கும் கல்யாணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. மூத்த மகனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை அறிந்த அவன் விரைவாக மருத்துவமனைக்கு சென்றான். 

        செல்லும் வழியில் ஒரு லாரி அவன் மீது மோத தூக்கி வீசப்பட்டான். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவனை சாலை ஓரத்தில் நின்ற மக்கள் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குள்ள மருத்துவர்கள் விபத்தில் சிக்கியவரை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்றனர். கமலின் தொலைபேசியை எடுத்து அங்குள்ள செவிலியர் வீட்டிற்கு தகவல் கூறினாள். கமலின் அண்ணா அவனை அந்த மருத்துவமனையில் இருந்து ஒரு புகழ் பெற்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தீர்மானித்தான். ஆனால் கமலின் இளைய மகன் அவசர சிகிக்சை முடிந்த பின் கொண்டு செல்லலாம் என்று கூறி சிகிச்சையை தொடங்க சொன்னான். மருத்துவர் உயிர்க்கு உத்திரவாதம் நான் இல்லை என்று கூறி ஓரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விட்டு சிகிச்சையை தொடங்கினார்.

அங்கு கமலுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. தலையில் இருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்ததனால் கமலின் உடம்பு சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்தது. 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கமலால் மூச்சு விட முடிந்தது. மருத்துவர்கள் இன்னும் கடினமான நிலையை அவர் கடக்க வில்லை என்று கூறினர். குடும்பத்தினர் ஒரு தேவதை பிறந்த நேரத்தில் தேவையில்லாத சம்பவம் நடக்கிறதே என்று வருந்தினர். "பேத்தியை பார்க்க இவன் தான் ஆர்வமாக இருந்தான். இப்படி ஆகி விட்டதே... " என்று கமலின் அம்மா கதறினார். கமலின் உடலில் முன்னேற்றம் தெரியாததால் கமலின் அண்ணா அவனை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றினார். அங்கும் சில நாள் முன்னேற்றம் இன்றி இருந்தான். கமலின் மனைவி ஒவ்வொரு கோவிலாக சென்று தன் கணவன் கண் விழிக்க வேண்டினாள். கடுமையான விரதம் மேற்கொண்டாள். சில நாள் கழித்து கமல் கண் விழித்தான். ஆனால் அவனால் பேச முடியவில்லை. செய்கையால் மட்டுமே அனைத்தையும் கூறினான்.


     தான் செத்து விடுவோம் என்கிற பயம் அவனுக்குள் இருந்தது. ஒவ்வொரு நாள் இரவும் தான் தூக்கித்தில் செத்து விட வாய்ப்புகள் இருப்பதாக நினைத்து பயந்தான். ஒரு நாள் ஒரு நோயாளி இரவில் அவன் தூங்கி கொண்டு இருக்கையில் ஒரு செவிலியர் ஊசியால் அவன் கழுத்தை குத்த ஓடி வருகிறாள். இவன் அதை கையால் தடுத்து அந்த செவிலியரை எட்டி உதைத்து காப்பாற்றுங்கள் என கதறுகிறான். ஆனால் அந்த செவிலியர் கமலின் கண் முன்பே அவன் கழுத்தில் ஊசியை இறக்கி அவனை கொன்று விடுகிறாள். அப்பொழுது கமலின் மீது யாரோ தண்ணீரை ஊற்றுகிறார்கள். விழித்து பார்க்கிறான் நடந்தது அனைத்தும் கனவு. ஒரு நிமிடம் மூச்சடைத்து நிற்கிறான். அருகில் அவன் மனைவி "என்னாச்சி ங்க" என்று கேட்க இவன் செய்கையால் தன் கனவை கூற முயல்கிறான். கமலின் மனைவி தாரா,  "ஏதோ கெட்ட கனவு போல ஒன்னு இல்ல தண்ணி குடிச்சிட்டு தூங்குங்க " என்று கூறி தண்ணீர் கொடுக்கிறாள்.  


       மறுநாள் காலை அந்த கனவில் வந்த செவிலியர் கமலிற்கு ஊசி போடவருவதை பார்த்து கமல் வேண்டாம் வேண்டாம் என கையால் செய்கை செய்த படி மயங்கி விழுகிறான். அவனை பார்த்த மருத்துவர் அவனுக்கு சிகிச்சை அளித்து விட்டு நாளை ஒரு சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறினார். அன்று இரவு மறுபடியும் கனவு வருகிறது. ஒரு மங்கலான அறையில் கமலும் அவன் அருகில் இருந்த நோயாளியும் உறங்கி கொண்டு இருக்கிறார்கள் . அப்பொழுது ஒரு பச்சை உடைஅணிந்த ஒரு நபர் அந்த நோயாளின் முகத்தை தலையணையால் மூடி அவனை கொலைசெய்து விட்டு அவன் தலையை வெட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கிறான். இதனை பார்த்த கமல் பதறி எழும்புகிறான். தினமும் ஒரு கனவு வருவது நல்ல சகுனம் என கூறி கமலின் அம்மா அவன் கையில் ஒரு தாயத்தை கட்டுகிறாள். மறுநாள் ஆபரேஷன் அறையை பார்க்கும் போது கனவில் பார்த்த அதே இடம் ஞாபகம் வந்ததால் இப்பொழுது ஆபரேஷன் வேண்டாம் என கூறிவிட்டான்.


    மூன்றாம் நாள் பிறந்த குழந்தையை பார்க்க வேண்டும் என ஆசை படுகிறான் கமல். கமலின் மூத்த மகன் புகைப்படதில் குழந்தையை காண்பிக்கிறான். கமல் அந்த புகைப்படத்தை முத்தமிட்டான். உடனே தாரா " நாம் வீட்டிற்கு சீக்கிரம் சென்று விடலாம் அப்பொழுது உங்கள் பேத்தியை பார்த்து கொஞ்சுங்கள்" என்கிறாள். அன்று இரவு தூக்கம் இன்றி தவிக்கிறான். மணியோ இரவு 2. சிறிது கண் அசருகிறான். அப்பொழுது பிறந்த குழந்தையின் சடலத்தை ஒருவன் தரையில் அடித்து கொண்டு இருக்கிறான். இவன் அருகில் சென்று பார்க்கையில் அது அவனது பேத்தி. "ஐயோ விட்டு விடு...."

என்று கத்த ஆரம்பித்தான். உடனே மருத்துவர் ஓடி வந்து அவனை சாந்த படுத்தினர். தாரா இது தனக்கு வித்தியாசமாக தெரிவதாக கூறினாள். மருத்துவர், "இதை நினைத்து பயப்பட வேண்டாம். இந்நேரங்களில் இவ்வாறு ஒரு சிலர்க்கு இவ்வாறு நடக்கும். நாளை அவரை வெளியில் கொஞ்ச நேரம் கூட்டி சென்று வாருங்கள். அனைத்தும் சரி ஆகிவிடும் " என்றனர். தாரா கமலை குழந்தையை பார்க்க கூட்டி சென்றாள். குழந்தையை தன் கையில் தூக்கவே கமலுக்கு அனைத்து பயன்களும் சென்றன. கண்ணீர் ததும்ப முத்தமிட்டான். என் உயிர் காத்த தேவதை என்று கூறி அணைத்தான். 




      கமலும் குணமடைந்து வீடு திரும்பினான். எல்லாரும் சொர்கத்திற்கு புது இளவரசி வந்துவிட்டாள் என்றனர். கமல் அக்கம்பக்கத்தாருக்கு இனிப்பும் பரிசும் வழங்கினான். கமலிடம் அக்கம்பக்கத்தார் அனைவரும் சொர்கலோகம் திறந்து இருக்கிறது இனி பரிசு தான் என்றனர். கமல் சிரித்து கொண்டே, "ஆம் சொர்க லோகம் திறந்தும் நரகம் மட்டும் கண்ணிலும் கனவிலும் தெரிந்தது" என்று தனக்குள் நினைத்து கொண்டு கிளம்பினான்.

    


    

     


     


Rate this content
Log in

Similar tamil story from Drama