Packiaraj A

Romance Crime

4  

Packiaraj A

Romance Crime

கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 41

கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 41

2 mins
7


  கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 41

    

     " காதல் பூமியில் உள்ள ஒரு செல் உயிரினம் அமீபா முதல் பல செல் உயிரினம் சுறா வரை இருந்து மிகப்பெரிய சக்தியாக இருந்தாலும் காதலர்களை இணைக்கும் சக்தி இறைவன் ஒருவனே "

       

       ஓசூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் வேலைக்கு நேர்முகத் தேர்வு நடைபெறுவதாக நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்து ஓசூர்க்கு அப்பா அம்மா இருவரிடமும் சொல்லாமல்,வீட்டை விட்டு ஓசூர்க்கு வந்திருந்தாள்.. திரிஷா 


       நேர்முகத் தேர்வில் திரிஷா தோல்வி அடைந்ததால் அவளுக்கு அந்த வேலை மறுக்கப்பட்டது..


        வேலை கிடைக்கும்..தங்கிட இடமும் கிடைக்கும் என்று நம்பி வந்தவள்.. வீட்டிற்கும் செல்ல முடியாத சூழலில்,எங்கே செல்வது என்று வெம்பி நின்றாள்...


         சென்னைக்கு அடுத்து தமிழகத்தில் வருவாய் அதிகம் உள்ள தொழில்நுட்ப மற்றும் தொழிற்சாலை நிறைந்த ஊர் ,கர்நாடக, ஆந்திரா செல்ல வேண்டும் எனில் ஓசூர்க்கு வந்தே செல்ல வேண்டும் .. ஆகையால் ஓசூர் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பு நிறைந்தே இருக்கும்...


      என்னதான் பேருந்து நிலையம் பரபரப்பாக இருந்தாலும்.வீட்டிற்கு திரும்பி சென்றால் அப்பா கொன்று விடுவார் என்ற பயத்துடன் இருந்தவளுக்கு பேருந்து நிலையம் ஒரு வனமாக காட்சி அளித்தது.. வரும் மனிதர்கள் எல்லாம் மிருகமாக காட்சி தர மிரண்டு இருந்தால் ..


        நேரம் செல்ல செல்ல மெல்ல மெல்ல மக்கள் கூட்டமும்.. பேருந்து அணிவகுப்பும் .. ஒளிரும் விளக்குகள், திறந்திருந்த கடைகள் குறைந்தது கொண்டே வந்தது.. நேரம் சரியாக பத்தரை ஆனது .. மனதில் பயம் தீயாக பற்றியது ... பற்றிய தீயை அணைக்க கண்ணீரை வடிந்தாலோ என்னவோ .. கண்ணீர் துளிகள் மனதை அடையாமல் கன்னத்தில் அருவியாக கொட்டியது....


     திரிஷா அழுது கொண்டிருந்தை கண்ட மகேஷ் அவளிடம் வந்தான்..


     மகேஷ் +2 படிக்கும் மாணவன்.. அவன் நீட் கோச்சிங் முடித்து திரும்பும் போது பேருந்து நிலையம் வந்து சிறிது நேரம் நண்பர்களுடன் அரட்டை அடித்து செல்வது வழக்கம்..


     மகேஷ் அருகில் வந்ததும்.. பயம் தொற்ற ,என்னை ஒன்னும் செய்து விடாதீங்க...போலீஸ் போலீஸ்.. காப்பாத்துங்க என்று கத்த ஆரம்பித்தாள்..


      அவள் கதற.. மகேஷ் பதற ப்ளிஷ்..ப்ளிஷ் மேம்.. உங்களுக்கு உதவத்தான் வந்திருக்கேன்.. உபத்திரம் செய்ய இல்லையென்று பவ்யமாக பாவமாக கூறினான்.. மகேஷ்..


       திரிஷாவின் கண்களுக்கு மகேஷ்.. வில்லனாக தெரிந்ததோ என்னமோ விம்மி விம்மி அழுதாள்..


       உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க மேடம்.. உதவி வேண்டாம் என்றால் கிளம்பிகிறேன் என்றான் மகேஷ்..


      கண்ணீரை துடைத்து நிமிர்ந்து பார்த்த திரிஷாவிடம்.. பணம் எதுவும் தொலைந்து விட்டதா.?, ஊர்க்கு செல்ல பணம் எதுவும் தேவையா ? மேடம் என்றான் மகேஷ்..


       தலையை மட்டும் ஆட்டினாள்.. இல்லையென்று..


        வேற என்ன பிரச்சனை அக்கா என்றான்... (அவனை கண்டு கொள்ளாத மேடம் இப்போது அவனை புரிந்து கொண்டதால் அக்கா ஆனாள்..)


       திறக்கப்பட்ட அணை நீர் போல் அவள் காதலித்தது ,வீட்டை விட்டு வெளியே வந்தது,வேலை கிடைக்காதது என்று அனைத்தயும் அவனிடம் கூறினாள்..


       அவள் கொண்டு வந்த கைப்பையை தூக்கியவன் ..அக்கா வாங்க எங்க வீட்டுக்கு போவோம்.. உங்களுக்கு நல்ல வேலை .. தங்குவதற்கு நல்ல இடம் கிடைக்கும் வரை எங்கள் வீட்டில் 🏡 தங்கிக் கொள்ளுங்கள் என்று அழைத்தான்...


      நட்பை நம்பி கற்பை பறி கொடுக்க அவள் கற்பு அவனை நம்பவில்லை.. ஆகையால் இல்லை வேண்டாம் தம்பி..ஊர்க்கு கிளம்புறேன் என்றாள்... திரிஷா


      இல்லை..இரவு நேரத்தில் நீங்கள் தனியாக செல்ல வேண்டாம்.. என்றான்..


       தம்பி நீங்க வேண்டுமானால் என்னுடன் ஊர் வரை வர முடியுமா? என்றாள் திரிஷா, அதற்கு மகேஷ்யும் OK என்றான்..


மதுரை செல்லும் பேருந்தில் இருவரும் ஏறி அமர .. திரிஷாவின் அப்பா கமலின் கொடூரக் குணம் அவளின் கண் முன்னே வந்து செல்ல.. பயந்து நடுங்கியபடி பேருந்தை விட்டு இறங்கி ஓடினாள் திரிஷா, மகேஷ்.. அக்கா.. அக்கா... என்று அழைத்த படியே பின்னால் ஓடினான்..


பேருந்தை விட்டு ஓடிய திரிஷா..... மகேஷ் செய்த காரியம் என்ன ?..


..... தொடரும்


சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

மேலக்கலங்கல்

தென்காசி மாவட்டம்..


      






         



Rate this content
Log in

Similar tamil story from Romance