கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 44
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 44
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 44
" கட்டுற சேலையை ஆயிரம் பார்த்து ஒரு சேலை தேர்வு செய்கிற பெண்கள்,தாலி கட்டுற கணவனாக கண்டவுடன் ஒருவனை தேர்ந்தெடுப்பது அறியாமை " தயவு செய்து என் பின்னால் சுற்றாதே நிவேதிதா.. என்றான் நிவேதிதாவிடம் கெளதம்...
நான் உன்னை சுற்றுவது இருக்கட்டும்..உன் தலையே சுற்றுவது போல் ஒரு தகவலை சொல்லவா ?.. என்றாள் நிவேதிதா
ம்ம்.. என்றான் கெளதம்...
உள்ளத்தை தேற்றிக்கோ ..மனதை தளர விடாதே என்றாள்..
தலையே போகிற செய்தியை நீ சொன்னாலும் தளர மாட்டேன் நீ சொல்ல வந்ததை தவளையா கத்து.. என்றான் கெளதம்..
திரிஷா வேலை தேடி ஓசூர் போனாள்.. அங்கே ஒரு பையன் மாலையை மாற்றி மாங்கல்யம் கட்டிட்டான்.. என்றாள் திரிஷா..
புலம்பாமா புரியும்படி சொல்.. என்றான் கெளதம்
அவள் ஓசூர் சென்றது கோவிலில் திரிஷாவுக்கும் மகேஷ் தாலி கட்டியது என எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொன்னாள் நிவேதிதா..
திரிஷாவும் மகேஷ்யும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு மகேஷின் வீட்டுக்கு சென்றனர்.. மகேஷின் அப்பா ஒரு தமிழ் ஆசிரியர்.. தமிழ் பாரம்பரிய பண்பாடுகளை மதிக்க கூடிய தெய்வ பக்தி உள்ள ஒருவர் என்பதால் அவர்களை வீட்டுக்குள் அனுமதித்து ஏற்றுக் கொண்டார்..ஆனா என்ன ஒரே ஒரு குறைதான் திரிஷாவை விட மூன்று வயதுக்கு இளையவன் மகேஷ்... என்று நிவேதிதா சொல்ல சொல்ல..
கெளதம் முகம் காட்டுத் தீயில் கருகிய மரங்கள் போல் இருந்தது.. அழுதான்.. அழுதான்.. அழுது கொண்டே கை கூப்பி இதுக்கு மேலே ஒன்றும் சொல்லாதே என்றான்..
கெளதம்.. நடந்தது நடந்திருச்சி .. உன் பின்னால் இனிமேல் நான் வர மாட்டேன்.. அம்மா அப்பா பார்த்த கவிதாவை திருமணம் செய்துக்கோ... நான் வாரேன் என்று கிளம்பி சென்றாள் நிவேதிதா..
விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பார்களே, அதுபோல திரிஷா கிடைக்காதா வருத்தமும் கவலையும் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை கெளதமிடம்... இயல்புநிலைக்கு திரும்பினான்...
திரிஷாவை மறந்த கெளதமின் 💓 இதயம்.. மெல்ல மெல்ல கவிதாவை உள்வாங்க ஆரம்பித்தது..
கவிதா மூணாறு எஸ்டேட்டில் இருப்தால் அவளை பார்ப்பது அதிதுதான் ..
கவிதாவை கெளதம் பாவடை சட்டையில் ஏதோ .. சொந்தக்காரர் வீட்டு விழாவில் பார்த்தது.. கருப்பு நிறந்தான் ஆனால் அழகுதான்.. கவிதா அவனை கடந்து சென்ற போது பாட்டிமார்கள் இவள்தான் உன் பொண்டாட்டி என்று சொன்னபோது....
அந்த சிறுவயதில் அவளை அவன் கற்பனையில் மனைவியாக கைபிடித்து அழைத்து செல்வது போல் மிதந்தான்... திரிஷாவை பார்க்கும் வரை கெளதம் இதயத்தில் வாழ்ந்தவள் பாவடை சட்டை அணிந்த கவிதா தான் ..
கெளதம் கவிதாவை பெண் பார்க்க மூணாறு சென்றபோது .. பாவடை சட்டையில் பார்த்த கவிதா..கவிதா மேக்கப் ஏதும் இல்லாமாலே..16 வயதில் கரும் சிகப்பு தாவணியில் பார்த்த போது... 16 வயதினிலே பட நடிகை ஸ்ரீதேவியை கருப்பாக பார்த்தது போல் இருந்தது... கெளதமுக்கு..
கண்ணா ...கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது! என்ற ரஜினிகாந்த் வசனத்தை போல்..
கிடைச்ச கவிதாவை திருமணம் செய்து கொண்டு இல்லறம் நல்லறமாக ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக.. சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் மொபைல் கடை ஒன்றை நடத்திக் கொண்டு கார்..வீடு ... என்று சகல வசதிகளுடன் வாழ்ந்து வருகிறான்...
என்னதான் வாழ்ந்தாலும்...சில நேரங்களில் திரிஷாவின் ஞாபகங்கள் கெளதமுக்கு வரத்தான் செய்தது...
திரிஷாவை பிரிந்து பத்து வருடங்கள் மேல் ஆகியும் ஒருமுறை கூட அவளை பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்...அதற்கான வாய்ப்பும் அமையவில்லை....திரிஷாவைப் பற்றி யாரிடமும் கேட்கக் கூட தைரியம் இல்லை ....
சில ஆண்டுகளுக்கு பிறகு.....ஒரே நாளில் ஒரே நேரத்தில்....
கெளதம் சங்கரன்கோவில் காவல்நிலையத்திற்கு ஏதோ வேலையாக சென்று .. காவல் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே வருகையில்...
திரிஷா ஏதோ வேலையாக யூனியன் ஆபிஸ் வந்தவள் அவளும் இருசக்கர வாகனத்தில் அவளும் வெளியே வருகையில்.....
பார்க்காத இரு துருவம்.. இப்போது அருகே அருகே நிகழ்ந்தது என்ன..?
..... தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்..

