கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 40
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 40
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் - 40
" மின்சார விளக்கு பழுதான,புது விளக்கு வாங்கி இருட்டை அகற்றி வெளிச்சம் பெறுவதில்லை" அதுபோல காதலை மறுத்த திரிஷாவின் இருண்ட கால நினைவுகளை துறந்து, மற்றொரு பெண்ணை காதலித்து நிகழ் காலத்தை வெளிச்சமாக்கலாமே என்றாள் நிவேதிதா.. சோகத்துடன் இருந்த கெளதமை பார்த்து..
" அண்ணன் எப்ப நகர்வான்; திண்ணை எப்போ காலியாகும் என சொல்வரே... அதுபோல, திரிஷா கெளதமை விட்டு எப்போது பிரிவால்,அவனை எப்ப காதலிப்பது என்று காத்திருந்த நிவேதிதா அவனுக்கு வலை விரித்தாள்..
நிவேதிதா மெல்லிய தேகமும் செவ்வந்தி உதட்டு சிரிப்பும் மல்லிகை மலரும் முன்னழகும் வல்லாரை கீரையாக மருந்தான பேச்சும் .. கண்ணுக்கு அகப்படாத நுண்ணிய இடையில் மெல்லிய பாலாடை போன்றவள்.. தீப்பிழம்பான சூரியனைக்கூட ☀️ பூமி சுற்றுகின்றன .ஏனோ தெரியவில்லை மெல்லிய நிவேதிதாவை காதல் செய்ய யாரும் சுற்றுவதில்லை ..
கெளதம் மீண்டும் நிவேதிதாவிடம் .. நிவேதிதா திரிஷா சென்ற ஊர் உனக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.. bless சொல் என்றான்..
கெளதம் திரிஷா சென்ற ஊர் எனக்கு தெரியாது.. வேணும்னா கெளதம் வந்த ஊர் சொல்லவா..? என்றாள்..நிவேதிதா.
என்ன நிவேதிதா உளறுகிறாய்.. என்றான் கெளதம்..
நான் ஒன்னும் உளறல உள்ளத்தில் இருக்கிறத சொல்றேன் என்றாள்..நிவேதிதா
ஏற்கனவே ஒருத்தி என் உள்ளத்தை பள்ளம் தோண்டி புதைச்சுட்ட..இப்ப உன்னை சுமக்க உள்ளமும் இல்லை.. உயிரும் இல்லை...புதைக்கிற பிணத்தை கூட பதமா இருக்க மிதமான பொருட்கள் போட்டு பிதப்பாங்க... உயிரோடு பூமியில் வாழ சாதகமான சூழ்நிலை எனக்கு இல்லை.. என்றான் கெளதம்..
பாடாத தேனீ நான்.. உன்னை கண்டதும் பாட கத்துக்கிட்டேன்..இப்ப உன்னை தேட தொடங்கிட்டேன் .. உன்னில் மயங்கி கிடக்கிறேன்.. உன்னை அடையாமல் இந்த தேனீ கூடு போகாது... என்றாள் நிவேதிதா..
நிவேதிதா..நீ வாடிய பூவில் தேன் சேகரிக்க நினைக்கிற..வாடிய பூவில் தேனும் கிடைக்காது உன் பசியும் மறையாது.. மொட்டாக இருந்து மலரும் மலரை தேடி தேன் எடுத்தால் உன் பசியும் தீரும் வாழ்வும் வளமாகும் என்றான் கெளதம்..
பேருந்து கல்லூரி அருகே .. வந்ததும்.. கெளதம்.. திரிஷா இருக்கிற ஊர் எனக்கு தெரியும்..நாளை இதே பேருந்துக்கு வா சொல்றேன்.. என்று சொல்லிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினாள்...
டே.. கெளதம்.. என்று வடிவுக்கரசி தன் மகனை அழைத்தாள்.. அழைத்த தாயின் குரலைக் கேட்டு என்னம்மா என்று கன்றுக்குட்டி போல் ஓடிவந்தான் கெளதம்...
நான் களஞ்சியத்தை பார்த்து பேசினேன்.. அவளும் அவா தம்பி தங்கையாக்கிட்ட பேசிட்டா..
ஏற்கனவே அவர் மகள் கவிதாவை உனக்குனு அவள் பிறந்த அன்றே முடிவு பண்ணியாச்சு..கழுதை நீதான் கால்களை உதைத்து கொண்டு திரியுற..வருகிற சிவராத்திரி அன்று மூணாறு கிளம்புறோம் ..பெண்ணை பார்க்கிறோம் .. மூன்று முடிச்சு போடுகிறோம் என்றாள் வடிவுக்கரசி..
என்னம்மா சொல்ற.. அந்த கவிதா உனக்கு தங்கச்சி முறை எனக்கு சித்தி முறை .. என்னம்மா இது லாஜிக்.. என்றான் கெளதம்..
லாஜிக்க பார்த்த லட்சாதிபதி வீட்டு பொண்ணு கிடைக்காது.. உன் அப்பனோட அக்கா மகள் மேலத்தெரு அங்காள ஈஸ்வரியை கட்டிக் கிட்டு
"ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ர்ரு...
சத்தியம் நீயே
தரும தாயே
குழந்தை வடிவே
தெய்வ மகளே..."னு பாடிக்கிட்டு மாடு தான் மேய்க்கனும்..பாத்துக்கோ.. என்றாள் வடிவுக்கரசி...
லட்சாதிபதிக்கு அடிமையாக இருக்கிறதவிட மாட்டுக்கார வேலனாக வாழ்வது எவ்வளவோ சிறப்பு என்றான் கெளதம்....
இங்கே பாருடா.. இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றாள்.. மருந்தை குடித்து சமாதி ஆகிவிடுவேன் பார்த்துக்கோ.. என்று கோபத்துடன் அழுதபடி கூறினான்.. வடிவுக்கரசி..
கெளதமுக்கு பெண் பார்க்கும் தகவல் தெரிந்து சிங்காரத்தின் தங்கை வளர்மதி வந்திருந்தவள்..அண்ணி மருமகனுக்கு பெண் பார்க்க செல்வதாக கேள்வி பட்டேன்.. என்றாள்..
ஆமாண்டி.. என்றாள் வடிவுக்கரசி..
அண்ணி ..என் மகள் சாரு இருக்கும் போது நீ எப்படி வெளியே பெண் எடுப்ப ? என்றாள் வளர்மதி..
இங்க பாரு..தங்கையா 20,000 ரூபாய் ரொக்கம் 10 சவரன் போடுவேன் சொன்னாரு அவர் பெண்ணை பேசிருக்கேன்.. என்றாள்.. வடிவுக்கரசி
உனக்கு இருபதாயிரந்தான வேணும்..இப்ப மாடு சினையா இருக்கு..மாடு கன்று போட்டவுடன் விற்று 20,000 ரூபாய் தாரேன் கொஞ்சம் பொறேன் என்றாள்... வளர்மதி
ஒன்னும் இல்லாத வெறும் சிறுக்கி வீட்டுல பெண்ணெடுக்க மாட்டேன்.. அதைப் பற்றி பேசாதே.. என்றாள் வடிவுக்கரசி..
மண்ணை அள்ளி தூற்றியவாரு வசைபாடி சென்றாள் வளர்மதி..
இதையெல்லாம் பார்த்த கெளதமுக்கு தலை சுற்றியது..
கெளதம் தான் விரும்பும் காதலியை கை பிடித்தானா ?
கெளதமை விரும்பும் நிவேதிதாவை கை பிடித்தானா?
கெளதமின் அம்மா பார்த்த பெண் கவிதாவை கைபிடித்தானா ?...
.. தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

