கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 42
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 42
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 42
" காதல் திருமணம், நிச்சய திருமணம் நாம் பேசப்படுகிற இரு வகை திருமணங்கள்.. பேசப்படாத திடிர் திருமணம் என்ற மூன்றாம் வகை திருமணமும் உண்டு "
" 2 நிமிட திடிர் நூடுல்ஸ் போல் 2 நிமிடங்களில் மணமக்கள் அறிமுகம் இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் நடைபெறும் சிலருக்கு திடிரென்று திருமணம் நடக்கும் "
ஏனோ தெரியவில்லை மூன்றாம் வகை திருமணமான திடிர் திருமணத்தை பற்றிய கருத்துக்களை பட்டிமன்றம், கவிதைகள், கதைகளில் மற்றும் கட்டுரைகள் என்று யாரும் பேசுவதும் எழுதுவதும் இல்லை..
பேருந்தை விட்டு இறங்கி பதறி ஓடிய திரிஷாவின் பின்னால் ஓடியவன் அவளின் முன்னால் வந்து அவளை மறித்து நின்றான்..
பறித்த மாங்கனி போல் இருந்தவள்...கரிய நிறத்தில் மதுரையை எரித்த கண்ணகி போல் தலைவிரிக் கோலமாக பயத்துடன் மனநிலை பாதிக்கப்பட்டவள் போல் நின்றதை கண்ட மகேஷ்..( மனதுக்குள்..இது சரியான பைத்தியமாக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டு) பயத்துடன் பின்னோக்கி திரும்பி நகன்றான் ..
நில்... என்று சத்தமாக கத்தினாள் திரிஷா ...
மகேஷ் திரும்பி பார்த்தவனை எனக்கு உதவி செய் தம்பி என்று கையெடுத்து வணங்கினாள்.. திரிஷா..
ஏன்.. இப்படி..நடந்துக்கிறீங்க? என்றான்.. மகேஷ்
அப்பாவோட கண்டிப்பான வளர்ப்பில் வளர்ந்ததால்..கண்டபடி பயம் என்னுள் தொற்றிக் கொள்கிறது..அப்பா, அம்மா சிறைக் கைதியை போல் பாவித்த அவர்கள் கண்டிப்பை மற்றும் அறிந்த எனக்கு கெளதமின் கருணையும், அன்பும், காதலும் எனக்கு வேறு ஒரு உலகத்தில் சுதந்திர பறவையாக பறப்பது போல் இருந்தது..
அந்த சுதந்திரம் பிடித்ததால் கண்டிப்பான அப்பா,அம்மாவை உதறிவிட்டு, கெளதமின் அன்புக்கு அடிமையாகி.. அவனை திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு சென்றோம்.. ஆனால், விதி எட்டி பிடித்து இருவரையும் பிரித்து விட்டது என்று அழ ஆரம்பித்தாள்..
பிரிந்த காதலை ஒட்ட வைக்க அன்பு என்ற பசையோடு என் பின்னாலயே சுற்றினான் கெளதம்.. என் அப்பாவிடமிருந்து அவன் உயிரை காப்பாற்ற காதலை வெட்டி விட வெறுப்பு என்ற கத்தரிக்கோலுடன் அவனை சுற்றினேன்..
என்னோடைய வெறுப்பு அவன் அன்பில் கரைய ஆரம்பித்தது..இது நல்லதில்லை என்பதால்.. அவன் உயிரோடு வாழ வேண்டும் என்பதற்காக.. அப்பா அம்மாவுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தேன்..வேலை கிடைக்கும்.. இருக்க இடம் கிடைக்கும்.. பசிக்கு உணவு கிடைக்கும் என்று இந்த வேலையை நம்பி வந்தேன்..
வேலை இல்லை ஊர்க்கு திரும்பி செல்ல வேண்டிய நிலையில் உள்ளேன்.. ஊர்க்கு சென்றால் உயிர் இருக்காது என்பது தெரியும்.. உயிரோடு வாழ வேண்டும்.. எப்படி வாழ்வேன் என்று கண்ணீர் விட்டாள்...
அக்கா உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன்.. என் வீட்டுக்கு வாருங்கள் என்று கூட்டிச் சென்றான்.
வீட்டுக்கு பெண்ணோடு வந்தவனை கண்ட மகேஷ் அப்பா .. யார் இந்த பெண்? என்றார், அவன் ஆச்சரியத்தோடு நடந்ததை சொன்னேன் மகேஷ்.. ஆக்ரோஷமாக , இந்த பெண்ணை எங்காயவது விட்டுவிட்டு வீட்டுக்கு வா.. என்று சொல்லி கதவை அடைத்து உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டு கொண்டார்... மகேஷின் அப்பா..
கதவைத் தட்டி பார்த்தான்.. கெஞ்சிப் பார்த்தான் கதவுகளும் திறக்கப்படவில்லை, அவனது அப்பாவின் மனமும் திறக்கப்படவில்லை...
செய்வதறியாது.. மீண்டும் பேருந்து நிலையத்திற்கு திரும்பி செல்லும் வழியில்..
இமாவனுக்கு மகளாக பிறந்தவள், தவம் கொண்டு மணவழகனை மணந்தவவள், இந்திரனுக்கு பூணூல் அளித்தவள், வீரத்தின் அடையாளமானவள் , காளையை வாகனமாக கொண்டவள் புன்னகையும் முகம் கொண்டு சூலம் தாமரை இரு கையில் தாங்கியவாறு,நகை பல அணிந்து அருள்பாலித்து வரும் தேவி ஹேமாவதி அம்மன் கோவில் கண்ட திரிஷா வணங்கச் சென்றாள், மகேஷ்யும் அவள் பின்னால் சென்றான்..
திரிஷா கண்ணை மூடி மனம் உருகி வேண்டினாள்.. மகேஷ் ..அம்மனின் கழுத்தில் மஞ்சள் கயிறு மஞ்சலோடு ஊஞ்சல் ஆடியதைக் கண்டான் .. அவனுக்கு திடிரென்று ஒரு ஐடியா தோன்றியது.. திரிஷாவை மாற்று பெண்ணாக அழைத்து செல்வதால் தானே அப்பா வீட்டுக்குள் அனுமதி தரவில்லை..இவளை மருமகளாக அழைத்து சென்றாள்.. வீட்டுக்குள் அனுமதித்தே ஆகவேண்டும்.. என்று எண்ணிய மறு நிமிடம் ..
மகேஷ் எண்ணம் நிறைவேறியதா ?
மகேஷ் கேம்க்கு திரிஷா உடன்பட்டாளா ?..
.. தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

