STORYMIRROR

Packiaraj A

Romance

4.1  

Packiaraj A

Romance

கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் -38

கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் -38

2 mins
4


கண்கள் தொடுக்கும் காதல் : பாகம்: 38


" குடல் கூழுக்கு அழும்போது 

கொண்ட பூவுக்கு அழுவுதாம் " கதையா இருக்கு ,நீ பெரிய வீட்டு பெண்ணை நீ நினைக்கிறது என்று வடிவுக்கரசி ,கவலையோடு சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி பாயை விரித்து படுக்க சென்ற மகன் கெளதமை பார்த்து சொன்னாள்..


" நாய்கிட்ட கெடச்ச தேங்கா மூடிபோல " அவள் கிட்ட மாட்டிக் கொண்ட என் மனசை .. அவளும் ஏத்துக்கல ..அடுத்தவளுக்கு ஏலமும் விடல .. ஏமாந்து நிற்கிறேன்.. ஏழையாக துடிக்கிறேன்.. என்றான் கெளதம் 


அவளை மறந்திட வழியை நீ தேடு.. அதுக்கு மருந்தை நான் தேடுறேன்.. என்றாள் வடிவுக்கரசி.


நெஞ்சுல அவள் உருவத்தை பச்ச குத்திருந்த அழிச்சிட்டு மறந்திடுவன்.. அவள் உருவத்தை நெஞ்சில் பசை போட்டு ஒட்டில‌ வச்சிருக்கேன்.. அவள் உருவத்தை கிழிச்ச என் இதயமும் சேந்து கிழிந்திடுமே என்றான் கெளதம்..


இருவரும் பேசிக் கொண்டிருந்த போது..ஒரு கார் வந்து கெளதம் வீட்டின் முன் வந்து நிற்கும் சத்தம் கேட்க.. வெளியே வந்து பார்த்தாள் வடிவுக்கரசி..


நந்தி வழிபாடு முடிந்து இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு வந்த கமலும் அபிராமியும்..வீடு திறந்து கிடந்தது.. திரிஷா.. திரிஷா.. என்று கூப்பிட்டாள் அபிராமி.. வீட்டிலிருந்து பதில் சத்தம் ஏதும் வரவில்லை..என்ன இந்த பொண்ணு அதுக்குள்ள தூங்கிருச்சு... என்று சொல்லி சமையல் அறைக்கு சென்றாள் அபிராமி..


கமல் சோர்வாக இருந்ததால் சோஃபாவில் அமர்ந்தவர்.. டீப்பாயில் வெள்ளை தாள் ஓடும் காற்றடிக்கு தகுந்தவாறு ஆடிக் கொண்டிருந்ததை கண்டு..அதை எடுத்து படித்தார்.. அதிர்ந்தார்.. அபிராமி என்று அலறினார்.. ஓடிவந்தாள் அபிராமி.. வெள்ளை காகிதத்தில் எழுதி இருந்ததை கமல் சொல்ல அபிராமி மெல்ல அழத் துவங்கினால்..


இந்த விடயம் வெளியே தெரிந்தால் அவமானம்.. இருவர்மாக தேட முடிவெடுத்து.. திரிஷாவின் தோழி நிவேதிதா வீட்டுக்கு சென்று அவளிடம் விசாரித்த போது.. கெளதம் அவளை பின் தொடர்ந்து வந்தது, அவள் அவனை ஏற்க மறுத்தாது .. என்று கூற வந்தவள் அதை சொல்லவில்லை.. அவள் சொன்ன பதில்.. எனக்கு தெரியாது என்ற பதிலை மட்டும் நிவேதிதா.. கூறினாள்..


அந்த நொடியில் நிவேதிதா கணக்கு..போட ஆரம்பித்தாள்.. திரிஷா கழித்தல் குறி என்றாள்..நாம் கெளதமுடன் காதலெனும் கூட்டல் குறி போட்டு.. திருமணங்கிற பந்தத்தில் பெருக்கல் குறி போட்டு புது கணக்கு ஒன்றை மனதில் போட்டுத்தான்..கெளதமை கமலிடம் போட்டுக் கொடுக்கவில்லை...


தேடி வந்தவர் நாடி வந்த இடந்தான் கெளதம் வீடு.. கெளதம் வீட்டிற்கு வந்த கார் கமல் அபிராமி வந்த கார் தான்..


வெளியே நின்றிருந்த கமல், அபிராமியை பகைமை மறந்து புதுமையான குரலில்..உள்ள வாங்க என்றாள் ..கிராமத்து மண்வாசனை மழை பெய்தால் மட்டும் அல்ல வெயில் அடித்தாலும் வாசம் வருவதாக.. எந்த அடி அடித்த பகையாளி ஆனாலும்...வீட்டு வாசலுக்கு வந்து விட்டால் வரவேற்பாது இயல்பு .. கிராமத்தில்..


உள்ளே வந்தவர்.. திரிஷா காணமால் போனது பற்றி சொன்னார்கள்.. கெளதம் எனக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை..உங்க பெண்ணிடமே தொடர்பில்... இல்லை.. என்றான்..


அபிராமி கண் கலங்கினாள்.. வடிவுக்கரசி உங்க பொண்ணு எங்கேயும் போயிருக்கிறது .. சங்கரன்கோவிலில் எதாவது தோழி வீட்டில் இருக்கும்..உங்க வீட்டுக்கு திரும்பி வரும்.. என்று ஆறுதலாக கூற.. கமலும் அபிராமியும் திரும்பினர்..


வடிவுக்கரசி சந்தோஷமாக சிரித்தபடி..கெளதமை பார்த்து அடியே மாப்பிள்ளை... ஓடுகாலி மறுபடியும் எவனையோ இழுத்துட்டு ஓடிருச்சு..


கெளதம் கோபமாக.. இப்படி பேசினா எனக்கு கோபம் வரும் என்றான்..


உனக்கு என்மேல் கோபம் வருது.. எனக்கு உன்மேல் பரிதாபம் வருது..டே போடா.. என்றாள் வடிவுக்கரசி..


கெளதம் கண்ணகளில் கண்ணீர் வடிய வடிய அழுதான்....விடிய விடிய அழுதாலும் பயண் ஒன்றுமில்லை என்று சொல்லி வடிவுக்கரசி அவள் அம்மா கூட பிறந்த தாய் மாமன் பொண்டாட்டி களஞ்சியத்தை பார்க்க சென்றாள்..


கெளதமுக்கு களஞ்சியம் தம்பி மகள் கவிதாவை பெண் பேச...


திரிஷா வீடு திரும்பினாளா ?..

நடந்தது என்ன? நடந்த கதை..


தொடரும்...


சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

மேலக்கலங்கல்

தென்காசி மாவட்டம்..



Rate this content
Log in

Similar tamil story from Romance