கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 37
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 37
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 37
"பாம்பின் கால் பாம்பறியும்" என்பர் அதே போல் " காதலியின் தடம் காதலன் அறிவன் " என்பதற்கிணங்க, கெளதம் நான்காம் நாளான இன்று திரிஷா அதே பேருந்தில் வரமாட்டாள் என்று முடிவெடுத்து..காலை 8.30 மணிக்கு கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அவள் வருகைக்காக காத்திருந்தான்...
காலை 9.00 மணிக்கு பேருந்து வந்தது, அந்த பேருந்தில் திரிஷா வரவில்லை..காலை 9.25 மணியை கடந்த நிலையிலும் அவள் வரவில்லை..ஏன் வரவில்லை? என்ற பதற்றம் ஒரு பக்கம்.. ஒருவேளை நம்மை பற்றி அவள் அப்பனிடம் சொல்லி ,காட்டி கொடுத்திருப்பாளோ என்ற பயம் ஒரு பக்கம்...
திரிஷாவும், தோழியும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.. அவன் வண்டியை மறிக்க பதற்றத்துடன் வண்டியை நிறுத்தி.. முன்னெச்சரிக்கையாக வண்டியின் சாவியை உருவிக்கொண்டு..அதை தோழி நிவேதிதா கையில் கொடுத்தாள்....
அவளை இடை மறித்து..திரிஷா ஏன் என்னை பார்க்க மறுக்கிறாய் ?..பேச மறுக்கிறாய்..?..ஒரே ஒரு.. வார்த்தை போதும் சொல்.. என்று அவள் முன் காலடியில் முழங்காலிட்டு கேட்டான்.. வரம் கொடுக்க மறுத்த தெய்வமாக ஏதும் சொல்லாமல் இரக்கமற்ற பெண்ணைப் போல் கல்லூரிக்குள் ஓடோடிச் சென்றாள்...
அவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வடிய எழுந்தான்.. அவனைப் பார்த்து அவன் மீது இறக்கம் கொண்ட நிவேதிதா..அழாதிங்க Bro.. உங்கள் நல்ல உள்ளத்திற்கு நல்லதே நடக்கும்.. நான் அவளை உங்கள் வழிக்கு கொண்டு வருகிறேன்..அதுவரை உங்கள் வழி என்னவோ பாருங்கள் Bro என்று ஆறுதல் கூறியபடி நகர்ந்தாள்..
ஏன் மறுக்கிறாள்? என்று தெரியாமலே சிவகாசிக்கு பேருந்து ஏறினான்..
அன்று இரவு கெளதமின் செயலையும்.. அவள் செய்த தவறான செயல்களும் நினைவில் வந்து போக விடியும்வரை தூக்கத்தோடு காதலையும் தொலைத்து விட்ட குற்றம் திரிஷாவின் உள்ளத்தை வாட்டியது..
ஐந்தாம் நாள் சனிக்கிழமை கல்லூரி விடுமுறை..என்ன செய்வது என்று சிந்திக்க.. தீடிரென்று நினைவு வந்தது.. கெளதம் நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்து சென்னைக்கு வேலைக்கு சென்றது..உடனே அன்றைய நாளிதழை தேடி எடுத்து படித்தாள்... திரிஷா
ஓசூரில் பள்ளிகள் முதல் மருத்துவக் கல்லூரி வரை நடத்தும்..ஒரு கல்வி குழுமத்தின் விளம்பரத்தை பார்த்தாள்.. அதில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால்.. பேசினால்.. நேர்காணலுக்கு வரச் சொன்னார்கள்..
திரிஷா ஓசூர் செல்ல முடிவெடுத்தாள்.. இந்த முடிவு அவளுக்காக இல்லை.. கெளதம் எனும் ஒரு மனித உயிர்க்காக . தான் இங்கே இருந்தால் கெளதம் பின் தொடர்வான் ... பின் தொடர்வது அப்பாவுக்கு தெரிந்தாள் அவன் உயிர்களுக்கு ஆபத்து என்று உணர்ந்தவளின் நல்ல முடிவுதான் இது...
அன்றைய சனிக்கிழமை சனிப் பிரதோஷம் என்பதால்,திரிஷாவின் குடும்பத்தார் அனைவரும் நந்தியை வழிபாடு செய்ய "அரியும் சிவனும் ஒன்னு அரியாதவன் வாயிலே மண்ணு" என்று உலகுக்கு உணர்த்திய சங்கரநாராயணன் கோவிலுக்கு வழக்கமாக சென்றனர்..
" வீட்டை விட்டு வேலைக்காக செல்கிறேன்..
நான் யாருடனும் செல்லவில்லை, யாரும் வற்புறுத்தலிலும் செல்லவில்லை, என்னைத் தேட வேண்டாம், உயிரோடு இருந்தால் வருகிறேன் இப்படிக்கு திரிஷா " என்று எழுதிய காகிதத்தை டீப்பாயில் வைத்து விட்டு ஊரைவிட்டு கிளம்பி.. திருமங்கலம் வந்தவள், திருமங்கலத்தில் இருந்து இரவு 11.30 க்கு ஓசூர் செல்லும் A1 travelsயில் ஏறியவன் ,காலை 6.30 மணிக்கு ஓசூர் வந்தடைந்தாள்,
நகரப் பேருந்தில் ஏறி நேர்காணல் நடத்தும் கல்வி குழும கட்டிடத்திற்கு சென்றாள்..
வேலை கிடைத்ததா ? இல்லை, காதலுக்கு வழி கிடைத்ததா ?..
... தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

