கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 39
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 39
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 39
விவாகரத்திற்கு பிறகு மறுபடியும் சேர்ந்து வாழ்வதற்கு சரியான தீர்வு எது ?
" இணைந்த இதயங்களை பிரிக்க எந்த ஒரு சக்திக்கும் இடமில்லை.. "
" நவக்கிரகங்கள் மாதிரி தெற்கும் வடக்குமாக பிரிந்து இருக்கிறவங்களா , ராமனும் சீதையுமாக இணைந்திட "
நீதி மன்றத்தில் தீர்ப்பால் பிரிந்த இருபாலரை , திருமணம் செய்து முதன் முதலாக வாழ்ந்த இல்லத்தில் அவர்கள்களை தனிமையில் சில நிமிடங்கள் சந்திக்க வைத்தால், சிந்திப்பார்கள் பழைய காதல் கதைகளை .. அறையின் நான்கு பக்க சுவர்கள் காதல் கதை கூற, ஜன்னல் வழி வந்த காற்று அவர்களை தழுவி இருவரின் முதல் தழுவலை உணர்த்த... கட்டில்,மெத்தையெல்லாம் அறிமுகமாக அரங்கேறிய லீலைகளை உள்ளம் நினைவாக்க.. முகம் பார்க்கும் கண்ணாடி அகம் விரித்து வாழ்ந்த வாழ்க்கையை பிரதிபலிக்க .. இயற்கை அவர்களை மீண்டும் இணைக்கும்..
பள்ளிக்கூட வேலைக்கு நேர்முகத் தேர்வாளர் கல்விக்கும்,பள்ளிக்கும் தேவையில்லாத ..பள்ளியறை சம்பந்தமா கேள்வியை திரிஷாவிடம் கேட்க..அவளும் அசராமல் சொன்ன பதில்தான் இது...
தேர்வாளர் excellent answer ..you are selected.. இரண்டாம் கட்ட நேர்காணல் மாலை 5.00 மணிக்கு நிர்வாகிகள் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.... வாருங்கள்.. என்றார் நேர்காணலை நடத்தியவர்..
மாலை ஐந்து மணி ஆனது,காலை நடந்த நேர்காணலில் ஒரு பணிக்கு நான்கு நபர்களை தேர்வு செய்திருந்தனர்.. அந்த நான்கு நபர்களில் இருவரை நிர்வாகி தேர்ந்தெடுப்பார்கள் போல்.. என்று திரிஷா உணர்ந்து கொண்டாள்..
திரிஷா.. திரிஷா.. என்று அழைத்தனர்.. திரிஷா நிர்வாக அறைக்கதவை திறந்து may I coming sir என்றாள்.. நிர்வாகி yes என்றார்.. அவரிடம் தான் கொண்டு வந்த சான்றிதழ் கோப்புகளை காண்பித்தால் , சான்றிதழ்களை பார்த்தவர், சங்கரன்கோவிலிருந்து வாருங்கிளா ?, Yes sir என்றாள் திரிஷா.அது related சில questions கேட்ட நிர்வாகி Ok.. wait pls என்றார்.. thanks sir என்று கூறி அறையை விட்டு வெளியே வந்தாள்..
தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வாசிக்கப்பட்டது.. ஒவ்வொரு பெயராக வாசிக்க வாசிக்க.. நிர்வாகிடம் சான்றிதழ் வாங்கியபடி சென்று கொண்டிருந்தனர்..தி.... என்று திரிஷாவின் பெயரை அந்த பெண் உச்சரிக்க ஆரம்பித்தால்.. நிர்வாகியின் பியூன் ஓடிவந்து..ஐயா கூப்பிட்டாங்க வாங்க மேடம் என்று அழைக்க உள்ளே சென்றாள்..
தி .. என்று ஆரம்பித்ததால் திரிஷா நான் select ஆகிட்டேன்.. என்று சந்தோஷத்துடன் இருந்தாள்..
தி.. ஷீ யாக மாறி ஷீலா என்று அழைத்தாள், நிர்வாகி அறைக்கு உள்ளே சென்று திரும்பிய பெண்... திரிஷா எழுந்து அப்பெண்ணின் முன் வந்தாள்..
திரிஷா என்று முதலில் அழைத்தீர்கள் .. தீடிரென்று ஷீலா என்று அழைக்கிங்க.. என்றாள் திரிஷா..
முதலில் நீங்கள் செலக்ட் ஆகி உங்க பெயர்தான் இருந்தது.. இந்த பெண் Founder வுடைய car driver க்கு .. சொந்தக்கார பெண்... driver recommend .. செய்ததால் வேலையை அந்த பொண்ணுக்கு ஒதுக்கிட்டாங்க.. இன்னொன்று owner spinning Mills supervisor wife வுக்கு கொடுத்ததால... நீங்கள் rejected .. என்றாள் அந்த பெண்..
இதுக்கு எதற்கு newspaper advertisement, interview எல்லாம்...? என்று திரிஷா கோபமாக கத்தினாள்..
மேடம் அமைதிய பேசுங்கள்.. என்றாள் பணிப்பெண்..
அடச்..சீ..தூ... என்று துப்பினாள் திரிஷா..
இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்.. newspaper advertisement, interview 📜 இந்த செலவெல்லாம் வெறும் 5000 ரூபாய்..ஆனா 5 லட்சம்.5 கோடினு கணக்கு காட்டி எல்லாமே வருமான வரி கட்டாமல் ஆட்டையப் போடத்தான் ஓழிய வேலை கொடுக்க இல்லை.... என்றாள் பணிப்பெண்..
திரிஷா.. கோபத்துடன் நிர்வாகி அறைக்குள் சென்றவள்.. நிர்வாகியை பார்த்து கோடிகளை வரி கட்டாமல் திருட்டு கணக்கு காட்ட கேடியே , உனக்கு எங்கள் கஷ்டங்களா கிடைத்தது.. என்றாள்..
ஏ..லேடியே யாரைப் பார்த்து கேடி என்கிறாய் போடி வெளியே என்றான் நிர்வாகி..
அரசுப் பணிக்குத்தான் security, recommend, கையூட்டல்,இட ஒதுக்கீடு பிரச்சனைகள் இருக்கிறது என்று உங்ககிட்ட வந்த, இங்கேயும் இதே பிரச்சனை என்றால் நேர்மையானவர்கள் எங்கதான் வேலைக்கு சேர்வது ?.. எனக்கு இப்ப வேலை தரவில்லை என்றால் (தே யில் ஆரம்பிக்கும் புகழ் பெற்ற IPS பெயரை சொல்லி) அவர் என் மாமாதான் அவரிடம் முறையிட்டு நீதிமன்றம் வரை செல்வேன் என்று திரிஷா சொன்னவுடன்..IPSபெயரை சொன்னவுடன் ஆடிப் போனார் நிர்வாகி..
வேலை கிடைத்ததா? காதல் என்ன ஆனது?
.. தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

