கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் : 29
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் : 29
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் : 29 " பெற்றோரை வெறுக்கும் முரண்பாடு கொண்ட முரட்டுக் காதல் முறையற்ற காதலே " என்று மகளை பிரிந்து மூன்று நாட்களாக வாடும் கமல் ஆதங்கமாக அபிராமிடம் புலம்பிக் கொண்டிருந்த போது.. வீட்டுக்கு முன் ஒரு சிகப்பு நிற கார் கப்பலாக வாசலை ஒட்டியபடி நிற்க , அதிலிருந்து நீலநிற கோட் சூட் அணிந்த ஒருவர் இறங்கினார்..வந்து இறங்கிய வரை கமலும் அபிராமியும் வரவேற்றனர்.. கெளதம் ஊர் மக்களை மூன்று நாட்களாக காவல் துறை தொந்தரவு செய்ததை கண்டித்து, வீட்டுக்கு ஒருவராக ஒன்று கூடி திருவேங்கடம் காவல் நிலையத்தை முற்றுகை போராட்டம் செய்ய முடிவு எடுக்க போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது... சென்னை சென்ற ஊர்த் தலைவர் முருகேசன் மூன்று நாட்களுக்கு பின் கூடலூர் வந்தவர் .. காதலர்களின் திருமணத்தை வீட்டிலே நடத்த முடிவு எடுத்தார் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக சுந்தரம், கெளதம் ஜவுளிகள் வாங்க,மாலை வாங்க,பந்தல் அமைத்தல், தோரணம் அமைத்தல், விருந்து யென வேலைகளை பம்பரமாக சுழன்று செய்து கொண்டிருந்தனர்... திரிஷா வீட்டுக்கு வந்த கோட் சூட் மனிதர் பிரபலமான வழக்கறிஞர் R.S.துரை சிங் அவர்கள்.. திரிஷாவை பற்றி தகவல் ஏதும் கிடைத்ததா ? என்று கமலை பார்த்து R.S துரை சிங் கேட்டார்.. மூன்று நாட்களாக தமிழ் நாடு, கேரளா நம்ம ஆட்கள் சுற்றித் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.. காவல் துறையினர் எவ்வளவோ ஊர்க்காரர்களை மிரட்டியும் அவன் அப்பன்,ஆத்தா இருக்கிற இடத்தையோ ஓடுகாலி நாய்கள் இருக்கிற இடத்தையோ சொல்ல மாட்டேன்கிறான்க .. காவல் துறையினர் வாங்கிய பணத்துக்கு தக்க விசாரணையோ அந்த நாய்களை தேடுவதோ இல்லை அவர்களை நம்பி பயணில்லை .. என்றார் கமல்.. அடுத்து எதாவது செய்ய முடியுமா? சட்டப்படி என்ன செய்யலாம் சொல்லுங்கள் ஐயா.. செய்வோம்.. என்று அபிராமி வழக்கறிஞரிடம் கேட்டார்.. இந்தியா தண்டனை சட்டம் 32 யின் கீழ் காணாமல் போனவர்களை மீட்டிட ஆட்கொணர்வு மனு (Habeas corpus) ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால், காவல் துறையினர் 24 மணி நேரத்தில் காணமால் போனவர்களை மீட்டிட உத்தரவு பிறப்பிக்கும்..அதை அவங்க மீற முடியாது..உடனே ஆக்ஷன் எடுப்பார்கள்.. என்றார் வழக்கறிஞர்.. இப்பவே மனுவை தாக்கல் செய்திடுவோம்.. என்றார் கமல்.. ஆட்கொணர்வு மனு சாதாரன நீதிமன்றங்களில் போடுவதற்கு அனுமதி இல்லை.. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் மட்டுமே மனுவை போட முடியும்... என்றார் வழக்கறிஞர்.. மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திட கமல் வழக்கறிஞர் உடன் கப்பல் மதுரையை நோக்கி கிளம்பியது.. திருவேங்கடம் காவல் நிலையத்தில் போராட்டம் செய்த கெளதம் ஊர்க்காரர்களை காவல்துறை போராட்டத்தை கைவிடச் சொல்ல, போராட்டத்திற்கு தலைமை ஏற்ற மீனாட்சி , நடந்தது தனிப்பட்ட நபர் காதல் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு , இந்த நிகழ்வுக்கும் ஊர்க்கும் சம்பந்தமில்லை என்று தெரிந்தும் ஊர் மக்களை தண்டிக்கிறது பெரும் குற்றம்,எங்களிடம் கலெக்டர் வந்து பேசும் வரை போராட்டம் நடத்துவோம் என்று பிடிவாதமாக இருந்தார்.. கூடலூர் ரவி வீட்டில் கெளதமுக்கும் திரிஷாவுக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.. பெண் சாமுத்ரிகா பட்டுடுத்தி. செந்தூர் பொட்டு வைத்து ,குன்றத்து பெண்கள் குவித்து விளையாடிய கரிய விளைப் பூவான திரிஷாவின் கூந்தலின் மேற் பகுதியில் சிவந்த ரோஜா மலர் சூடி மல்லிகை பூ ஒரு சுற்று கனகாம்பரம் பூ மறு சுற்று சுற்றியே அவள் கூந்தல் காற்றோடு குழலாட . கண்ணில் வெட்கம் தானாட, உதட்டில் புன்னகை மலராட,வெண் கழுத்தில் பொன்னோடு பூ மாலையாட , நெஞ்சத்தில் மிளிராட , கையில் கண்ணாடி வளையாட ,இடையில் வியர்வை துளி தூளியாட, நடையில் சலங்கை ஒலியாட..தேர் ஏறும் அம்மனாக மணமேடை ஏறினாள் திரிஷா.. பட்டு வேஷ்டி சட்டையில் கெளதம் மணமேடை ஏறிட , வந்தோர் பார்வையை மணமக்களை கண்டு ஆசிர்வதிக்க எழுப்பும் கெட்டிமேளம் முழங்க .. ஐயர் ஓதிக் கொண்டே தாலி எடுத்துக் கொடுக்க..தாலியை வாங்கிய கெளதம், திரிஷா கழுத்தில் தாலியை கொண்டு சென்ற போது.... தாலியை கெளதம் கட்டினான இல்லையா ? .. தொடரும் சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் மேலக்கலங்கல் தென்காசி மாவட்டம்

