saravanan Periannan

Abstract Action Classics

4.9  

saravanan Periannan

Abstract Action Classics

கி.பி 1279 வீழ்ச்சியும் எழுச்ச

கி.பி 1279 வீழ்ச்சியும் எழுச்ச

2 mins
495


இந்த கதை நம் தமிழ் மன்னர்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கூறுகிறது.

தளபதியாரே பாதுகாப்பு சென்ற தடவையை விட இரு மடங்கு அதிகமாகியுள்ளது.

ஆம் இளவரசி நம் மன்னர் மூன்றாம் இராசராச சோழன் போரை தவிர்த்து அமைதியை விரும்புகிறார்.

ஆனால் எதிரிகள் அப்படி இருப்பதில்லையே என தளபதி சொல்லி முடிக்க

தூரத்தில் இருந்து புழுதி படலம் ஒன்று தங்களை நோக்கி வருவதை தளபதி பார்க்கிறார்.

 

சிற்றரசன் அதிரூபன் தன் படையுடன் இளவரசியை தாக்க வருகிறான்.

தளபதி திரும்புகையில் புலி சின்னம் பொறித்த கொடியுடன் இளவரசன் மூன்றாம் இராசேந்திர சோழன் தன் படையுடன் வந்து கொண்டிருந்தார்.

தளபதி இளவரசியை பாதுகாப்பாக தன் வீரர்களை வைத்து வியூகம் அமைத்து உள் நிறுத்தினார்.

மூன்றாம் இராசேந்திர சோழன் அதிரூபனுடைய படையை நிர்மூலம் செய்து அதிரூபன் தலை கொய்தார்.

பெருவுடையார் கோயிலில் மன்னர் மூன்றாம் இராசராச சோழன் பூசை செய்து கொண்டிருந்தார்.

தூதுவன் இளவரசியை தங்கள் தம்பி மூன்றாம் இராசேந்திர சோழன் காப்பாற்றியதை பற்றி கூறினார்.

சிற்றப்பா என்று மூன்றாம் இராசேந்திர சோழரிடம் இளவரசி அழுதபடி வந்தாள்.

குந்தவை வழி வந்த நீ கண்ணீர் சிந்தாதே மகளே.

மூன்றாம் இராசேந்திர சோழன் கோபமாக மூன்றாம் இராசராச சோழனை பார்க்க சென்றார்.

மூன்றாம் இராசேந்திர சோழன் தன் அண்ணன் மன்னன் மூன்றாம் இராசராச சோழனை பார்த்து 

கலம் கட்டி கடல் கடந்து புலி கொடி உயர நாடுகள் ஆண்ட நம் முன்னோர் 

நீர் வளம் பெருக நீர்நிலைகள் அமைத்து 

சிவபாதம் வணங்கி பெருவுடையார் கோயில் கட்டி பூசைகள் செய்தனர்.

போரில் வீரம்,விவேகமுடன் சண்டையிட்டு எழுப்பிய இந்த சோழ சாம்ராசியத்தை உன் கோழைதனத்தால் சுருக்கி விட்டாய்.

இனியும் பொருத்தால் அது நம் முன்னோர்க்கு செய்யும் இழுக்கு ஆகும் மன்னா.

மூன்றாம் இராசராச சோழன் அமைதியாக அங்கிருந்து சென்றார்.

மூன்றாம் இராசராச சோழன் மற்றும் மூன்றாம் இராசேந்திர சோழனின் தந்தை, மூன்றாம் குலோத்துங்க சோழன் முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டார்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனை வெற்றி கொண்டு பாண்டியர்களின் மணிமுடி சூடும் மண்டபத்தை இடித்தார்.

தன் அண்ணன் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் தோல்விக்கு பழிவாங்கும் விதமாக முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் போரிட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனை வென்றார்.

ஹோசலர்கள் தலையிட்டு சோழ இராசியத்தை சோழர்களுக்கு திருப்பி தந்தனர்.

மூன்றாம் இராசராச சோழன் சோழ மன்னராக பதவியேற்க சோழ தேசம் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது.

முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியனின் வெற்றி பாண்டியர்களின் எழுச்சி வலுபெற துணை நின்றது.

மூன்றாம் இராராச சோழரை தொடர்ந்து அவரது தம்பி மூன்றாம் இராசேந்திர சோழன் சோழ மன்னராக பதவி ஏற்கிறார்.

கி.பி 1250 

மூன்றாம் இராசந்திர சோழன் மதுரையை ஆண்டு கொண்டிருக்கும் இரண்டாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் மீது போர் தொடுக்கிறார்.

இந்த போரில் மூன்றாம் இராசேந்திர சோழன் வெற்றி பெற்று மதுரையை கைப்பற்றுகிறார்.

இவரால் சோழ ராசியம் மீண்டும் எழுச்சி பெற தொடங்குகிறது.

இதை பார்க்கும் ஹோசலர்கள் பாண்டியருக்கு துணை நிற்கின்றனர்.

ஹோசலர்கள் சோழ தேசம் மற்றும் பாண்டிய தேசத்திற்கு இடையே உள்ள பகையை தொடர அனைத்தும் செய்கின்றனர்.

அதாவது சோழர்கள் தோற்பது போல் இருந்தால் அவர்களை ஆதரிப்பது.

இல்லையெனில் பாண்டியர்கள் தோற்பது போல் இருந்தால் அவர்களை ஆதரிப்பது.

ஏனேனில் சோழர்,பாண்டியரில் யார் வென்றாலும் அவர்களது அடுத்த குறி ஹோசலர்கள் மீது தான்.

இந்த ஹோசலர்களால்,சோழர் பாண்டியர் இருவரில் ஒருவர் கூட முழுமையாக எழுச்சி பெறவில்லை.


இரண்டாம் மாறவர்ம சுந்தர பாண்டியனை தொடர்ந்து அவரது மகன் சடையவர்மன் சுந்தர பாண்டியன் மன்னராகிறார்.

சடையவர்மன் சுந்தர பாண்டியன் சேர நாட்டை வென்று விட்டு அடுத்து மூன்றாம் இராசேந்திர சோழன் மீது படை எடுத்து பாண்டிய ஆட்சியை ஏற்றுக் கொள்ள வைக்கிறார்.

கி.பி 1268

சடையவர்ம சுந்தர பாண்டியனின் மகன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டிய மன்னனாக பொறுப்பு ஏற்கிறார்.

கி.பி 1279

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஹோசலர்களை வென்று ,ஹோசலர்களை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றுகிறார்.

பின்பு முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மூன்றாம் இராசேந்திர சோழன் மீது படை எடுத்து பாண்டியர்களின் முழுமையான வெற்றியை பெற வழிவகுத்தார்.

சோழர்களின் மூன்று நூற்றாண்டு கால ஆதிக்கம் கி.பி 1279 உடன் முடிவு பெறுகிறது.


பின்பு சோழ அரச குடும்பத்தை சேர்ந்தவர்களை பாண்டிய ஆட்சியின் கீழ் குறுநில மன்னர்களாக பொறுப்பில் அமர்த்துகிறார்.


முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1308 ஆம் ஆண்டில் மறைந்தார்.


இதனால் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் இரு மகன்களும் பாண்டிய தேச அரியாசனதுக்கு உரிமை கோர உள்நாட்டு போர் கி.பி 1308 ஆம் ஆண்டு முதல் கி.பி 1323 ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்றது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியமே 

கலை மூலம் சிறந்த சோழமே 

ஈசனை மட்டுமே முழு முதற் கடவுளாக வணங்கிய நீங்கள் இருவரும் 

ஈசனை வணங்குவதில் கொண்ட ஒற்றுமையை தங்கள் இரு அரச குடும்பத்தின் இடையே கொண்டிருந்தால் 

நம் தமிழினம் ஓங்கி உயர்ந்திருக்கும்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract