DEENADAYALAN N

Action Crime Thriller

5  

DEENADAYALAN N

Action Crime Thriller

காருக்குள் இறந்தவன்

காருக்குள் இறந்தவன்

6 mins
368


Suspense

காருக்குள் இறந்தவன்

(கோவை என். தீனதயாளன்)


டிடெக்டிவ் ரிஷிக்கு அழைப்பு வந்த போது காலை பதினொன்னரை மணி இருக்கலாம். இறந்து போன பரந்தன் வழக்கு சம்மந்தமாக அவன் சில திட்டங்களை வகுத்து, அதன் விவரங்களை கணினியில் ஏற்றிக் கொண்டிருந்தான். கைபேசி அழைத்தவுடன், கணினி வேலையை ஒரு கையால் தொடர்ந்து கொண்டே, மற்றொரு கையால் கைபேசியை எடுத்து தன் காதுக்கும் தோளுக்கும் இடையில் சிக்க வைத்து விட்டு மீண்டும் மற்றொரு கையை கணினியிடம் அர்ப்பணித்துக் கொண்டே, ‘ஹலோ ரிஷி ஹியர்..’ என்றான்.


‘சார்.. உயர் காவல் அதிகாரி உங்களை உடனடியாக வரச் சொன்னார்’ என்றார் மறுமுனையில் இருந்த இளநிலைக் காவல் அதிகாரி.


‘இஸ் இட்.. இதோ இன்னும் பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன்’ என்று கூறியவன் ‘கண்ட்ரோல் எஸ்’ஸை அமுக்கி, ‘வேர்ட்’ அப்ளிகேஷனை க்ளோஸ் செய்து, கணினியை ‘ஷட்டவுன்’ செய்தான். அடுத்த ஐந்தாவது நிமிடம் அவனுடைய பிரத்தியேக வாகனத்தில் இருந்தான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தன் உயர் அதிகாரியின் முன் பிரசன்னமானான்.


‘ஹேய் ரிஷி, உங்க அண்ணாக்கள் விவானும், அவ்யுக்த்தும் இப்போ என்ன அசைன்மென்ட்டில் எங்கே இருக்காங்க?’ என்று வாஞ்சையுடன் விசாரித்தார்.


‘சார் விவு ‘ஜுரிச்’சிலும், அவி ‘டென்மார்க்’கிலும் ஒரு இன்டெர் நேஷனல் அசைன்மென்ட்ல இருக்காங்க சார்’ என்றான் ரிஷி.


‘வெரி இன்ட்ரஸ்டிங் அன்ட் இன்டெலிஜென்ட் கைஸ்’ என்று ஓரிரு வினாடி நிறுத்தி விட்டு, ‘அஃப் கோர்ஸ்.. லைக் யூ’ என்று சிரித்தார்.


‘தேங்க்யூ சார்’ என்று ரிஷி சொன்னவுடன், உயரதிகாரி ரிஷியை அமருமாரு சைகை செய்ய, ரிஷி அமர்ந்தான்.


‘ரிஷி.. பரந்தன் இறப்பு விஷயமாத்தான் பேசலாம்னு வரச்சொன்னேன். சம்பவம் நடந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது. உன்னோட முதல் கட்ட தகவல்கள் ஏதாவது இருக்கா? ஏதாவது முன்னேற்றம்? எனி அப்டேட்ஸ்?’ என்றார்.


‘இது வரைக்குமான தகவல்களை சொல்றேன் சார்.. பரந்தனின் இறப்பு, தொழிலதிபர்கள் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்குது சார். வியாபார வட்டாரத்தில் விஷம் போல் பரவியிருக்கு சார். பரந்தன் ஒரு நடுத்தர வயது தொழிலதிபர். ‘மேக் இன் இந்தியா’லே ஒரு ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிய ஆரம்பிச்சி நடத்திகிட்டிருக்கார். தன் வியாபாரத் திறமையால், குறுகிய காலத்தில் தொழிலில் பெரும் முன்னேற்றம் கண்டு கொண்டிருப்பவர். ஓய்வின்றி உழைப்பவர். திறமையோடு கண்டிப்பும் நிறைந்தவர்னு பேர் வாங்கி இருக்கார் சார்.


மனைவி இல்லத்தரசியா இருக்காங்க. மகள் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்குது. எட்டாம் வகுப்பில் மகன் இருக்கான். காலைலே ஏழு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் மாலை ஏழு மணிக்குதான் அலுவலகத்திலிருந்து திரும்புவார்.


அவரது இறப்பு இயற்கையாய் இருந்திருக்க வாய்ப்பில்லை அப்பிடீங்கிறது பொதுவான கருத்து சார். அதை ‘தற்கொலை’ன்னு சில பேரும், இல்லையில்லை ‘கொலை’ன்னு சில பேரும் பேச ஆரம்பிச்சிருக்காங்க.


காரின் நான்கு கதவுகளும் பூட்டிக் கிடந்திருக்கிறது. உள்ளே குளிர்சாதனக் கருவி ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. குளிர்சாதனத்திலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்த குளிர் காற்று மிகுந்த எரிச்சலை ஊட்டி இருக்கிறது. ஒரு வேளை குளிர்சாதனப் பெட்டியிலிர்ந்து வரும் குளிர் காற்றில் விஷம் கலந்திருக்கலாம்னு நம்பப்படுது சார்.


அந்த விஷத்தை யார் எங்கே எப்படி கலந்திருப்பார்கள். அதன் தொழில்நுட்பம் என்ன? பரந்தன் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில், ‘தானே’ இதை செய்திருப்பாரா? அல்லது அவர் மீது பகை கொண்ட யாராவது செய்திருப்பார்களா? அது ஒருவரா, இருவரா, ஒரு குழுவா? அவர்களின் நோக்கம் என்ன? வியாரபமா? தனிப்பட்ட முறையிலா? – இரண்டு மூன்று நாட்கள்லே இதற்கான விடைகளை கண்டு பிடிச்சிடுவேன் சார்.


இன்னொரு விஷயம் சார். எப்போதும் ஓட்டுனருடன்தான் பயணம் பண்ணுவார். ஆனால் அன்று அவரே காரை ஓட்டி இருக்கிறார். அதன் அவசியம் என்ன? ஓட்டுனருக்கு என்ன ஆயிற்று? - இந்த கேள்வி ஒரு பக்கம் இருக்கு சார்.

இதைத்தவிர அவரோட பொண்ணு சம்மந்தமான ‘பேக்ரவுண்டை’ விசாரிக்க சொல்லி இருக்கேன் சார்.


நான் இப்பொ சொன்ன விவரங்கள் எல்லாம் இந்த ‘ஃபைல்’லே இருக்கு சார்” என்று ஒரு ஃபைலை உயரதிகாரியிடம் கொடுத்தான் ரிஷி.


‘குட் ஜாப் டன் ரிஷி’ என்று சொல்லிக் கொண்டே ஃபைலை வாங்கி வைத்தார் உயரதிகாரி. ‘சரி.. ஏதாவது முக்கியமான விவரங்கள் தகவல்கள் இருந்தால் எனக்கு உடனே ‘அப்ரைஸ்’ பண்ணு’ என்று சொல்லிவிட்டு, ‘சரி ரிஷி. நீ கிளம்பலாம். ஆல் தி பெஸ்ட்’ என்றார்.


‘தேங்க்யூ சார்’ என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்த ரிஷி நேராக அவன் உதவியாளன் முகிலின் அறையை நோக்கி நடக்கலானான்.


என்ன முகில்? நான் கேட்ட விபரங்களையெல்லாம் சேகரிச்சிட்டியா’ என்ற படி முகிலின் அறைக்குள் நுழைய, ‘வாங்க பாஸ்.. உங்களுக்காகத்தான் காத்திருக்கேன்.’ என்று முகில் ரிஷியை வரவேற்றான். இண்டர்காமில் இரண்டு தேநீர்களுக்கு ஆணையிட்டான்.


‘பாஸ்.. பரந்தன் கேஸ் விஷயமா நீங்க மூனு அசைன்மெண்ட் குடுத்திருந்தீங்க. ஒன்னு அவரோட மகள் தொடர்புகளை விசாரிக்க சொன்னீங்க. இரண்டாவது அவரது வியாபார வட்டார நெருங்கிய புள்ளிகளை விசாரிக்க சொன்னீங்க. மூனாவது அவரோட ட்ரைவர் பத்தி விசாரிக்க சொல்லியிருந்தீங்க’


‘வெரி குட் முகில்.. எல்லாம் ஒழுங்கா நினைவுலே வெச்சிருக்கியே..’ என்று பாராட்டிய ரிஷி, ‘முதல்லே அவரோட மகள் விஷயம் சொல்லு’


தேநீர் வந்தது. குடித்துக் கொண்டே பேசத்தொடங்கினார்கள்.


‘பாஸ்.. அவரோட மகள் சமித்ரா நல்லா படிக்கிற பொண்ணுதான். யாரோ ஒரு பையனோட இரண்டு முறை பேசிகிட்டிருந்ததா ‘மன்றோ பார்க்’ சிசி டிவி லே பதிவு ஆயிருக்கு. மேலும் விவரம் சேகரிக்கணும்’


‘அடுத்து அவரோட வியாபார வட்டாரத்துலே ‘மதகராஜ்’னு ஒரு தொழிலதிபர் இவரோட வியாபாரத்துலே போட்டியாளரா இருக்கறதா தெரியுது. ரெண்டு பேரும் அடிக்கடி தொலை பேசியில் அப்பப்போ சூடா பேசிக்குவாங்கன்னு பரந்தன் அலுவலகத்துலே இருக்கற ஒரு அலுவலர் மூலமா தெரிய வருது.’


‘அடுத்து அந்த ட்ரைவர்.. அவர் தலை மறைவா இருக்கறதா தெரியுது. அனேகமா கலக்காபாளையத்துலே இருக்கற அவங்க அக்கா வீட்டிலே பதுங்கி இருக்கலாமின்னு ஒரு தகவல் தெரிஞ்சிருக்கு’


எல்லாம் கேட்டுக் கொண்ட ரிஷி, ‘சரி முகில், உடனடியா பரந்தன் வீட்டுலே இருந்து விசாரணைய ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்’ என்ற போது கதவு தட்டப்பட்டது.


‘யெஸ் கம் இன்’ என்ற போது, உள்ளே நுழைந்த உதவியாளர், ‘ரிஷி சார் இங்கேதான் இருக்கீங்களா.. இந்த ஃபைல உங்கிட்டே குடுக்க சொல்லி ரைட்டர் குடுத்தாரு சார்’


ஃபைலை ஆராய்ந்தான் ரிஷி. அது இறந்து போன பரந்தனின் ‘போஸ்ட் மார்ட்டம்’ ரிப்போர்ட். மிகவும் ஆழ்ந்து படித்து மிக முக்கியமான விவரங்களை கைபேசியில் ஏற்றிக் கொண்டான். அதில் ‘விஷம் தோய்ந்த குளிர்ந்த காற்றினால் ஏற்பட்ட மூச்சுத்திணரலால் இறப்பு’ (death due to suffocation created by poison rubbed cool air)’ என்பது இறப்புக்கான காரணமாய் குறிப்பிடப்பட்டிருந்தது.


அடுத்த நாள் காலை. ரிஷியின் அலுவலக அறை. சுமார் பத்து மணிக்கு, ‘ரிஷி சார்… செத்துபோன பரந்தனோட ட்ரைவர்னு சொல்லிகிட்டு ஒருத்தர் வந்திருக்கார்…’ என்று இன்டர்காமில் தகவல் வந்தது


‘அனுப்புங்க.. ‘ என்றான் ரிஷி.


உள்ளே நுழைந்தவர் வயது ஐம்பது இருக்கும். ஒரு வார தாடியுடன் வாடி சோகமாக இருந்தார். ரிஷியின் காலில் விழாத குறையாக, ‘சார்.. என்னக் காப்பாத்துங்க சார்.. எனக்கும் இந்த சாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லே சார்..’ என்றார்.


‘அப்படி உட்காருங்க.. நீங்கதான் பரந்தனோட ட்ரைவரா?’


ரிஷி பல கேள்விகளைக் கேட்டான். அவருடைய பதில்களை உள் வாங்கிக் கொண்டான்.

‘சரி.. நீங்க உங்க அக்கா வீட்டிலேயே இருங்க.. எனக்குத் தெரியாமெ நீங்க அங்க இருந்து எங்கேயும் போகக்கூடாது. நீங்க சொன்னது எல்லாம் உண்மையான்னு விசாரிச்சிட்டு உங்களை மறுபடியும் அழைக்கிறேன்’ என்று ரிஷி அவரை விடுவித்தான். அந்த ட்ரைவர் பவ்யமாக கும்பிட்டு விட்டு கிளம்பினார்.


அடுத்த அரை மணி நேரம், ரிஷி கைபேசியின் மூலம் சில தொடர்புகளை ஏற்படுத்திப் பேசிக்கொண்டிருந்தான். அதில் ட்ரைவர் அளித்த சில தகவல்கள் பற்றியும் விவரங்கள் சேகரித்துக் கொண்டான். மேலும் சமித்ராவை தொந்திரவு செய்த நபரின் சில விவரங்களையும் சேகரித்தான். 


பரந்தனின் வியாபாரப் போட்டியாளர் ‘மதகராஜ்’ அலுவலகம் செல்லும்முன் அவரை கைபேசியில் அழைத்தான். ஆனால் அவரது உதவியாளர்தான் எடுத்தார். மறுமுனையில் பேசுவது யார் என்று தெரியாமலேயே, உதவியாளர், ‘அவர் லண்டன் போய் ஒரு மாசமாச்சி. அடுத்த மாசம்தான் வருவார்’ என்று கூறி வைத்து விட்டார். மதகராஜின் ‘லண்டன்’ பயணம் பற்றி வேறு சில மூலங்களும் உறுதி செய்தது.


மதியம் மூன்று மணிக்கு பரந்தன் வீட்டு சோஃபாவில் ரிஷி அமர்ந்திருந்தான். எதிரிலிருந்த சோஃபாக்களில் பரந்தனின் மனைவியும் மகள் சமித்ராவும் அமர்ந்திருந்தனர்.


‘இவுரு உங்க வீட்டு சுற்றுச் சூழலைப் பார்க்கப் போகிறார்’ என்று முகிலைக் காட்டி ரிஷி சொல்ல, ‘ஓ தாராளமாக’ என்று வீட்டார் கூறி விட்டனர். இது சம்மந்தமாக முகிலிடம் ஏற்கனவே சில விவரங்களை சொல்லியிருந்தான் ரிஷி. ‘ஓ கே பாஸ்.. ‘ என்று விடை பெற்று கிளம்பினான் ரிஷி.


அதன் பின் சில பல மாமூலான கேள்வி பதில்கள் தொடர்ந்தன. இடையில் ரிஷி, சமித்ராவிடம், ”தப்பாக நினைக்காதீங்க சமித்ரா. காதல் அது இதுன்னு.. ஏதாவது..’


‘நிச்சயமாக இல்லை சார்.. நான் அந்த மாதிரி பொண்ணும் இல்லே..’ என்று சற்று ரோஷத்துடன் கூறினாள் சமித்ரா.


“ஒ சரி சரி.. நீங்கள் அடிக்கடி ‘மன்றோ பார்க்’ பக்கம் போவதுண்டா?’


சமித்ராவின் முகத்தில் லேசான பதற்றம் தெரிந்தது.


‘மன்றோ பார்க் பக்கம் போவீங்களான்னு தான் கேட்டேன்..’ என்று ரிஷி ஒரு அழுத்தம் கொடுத்தான்.


‘இல்லே சார்.. வந்து.. ம்..’ சமித்ரா தடுமாறினாள்.


‘இதோ பாருங்க சமித்ரா.. ஒரு பொண்ணு பார்க்குக்கு போறது ஒண்ணும் தப்பான விஷயமில்லே’


‘போவேன் சார்..’


‘யார் அந்தப் பையன்?’


அவள் மேலும் அதிர்ச்சி அடைந்தாள்.


‘இல்லே.. உங்க கூட பேசிகிட்டிருப்பானே ஒரு பையன் யார் அவன்?’


‘சார் அவன் ஒரு பொறுக்கி சார்.. எப்பவும் என் பின்னாடியே சுத்திகிட்டிருப்பான். நானும் என் ஃப்ரெண்ட்ஸும் சனிக்கிழமைகளில் பார்க்குக்கு போய் பேசிகிட்டிருப்போம். அப்போ ஓரிரு முறை எங்கிட்டே ‘லவ்’ பண்றதா சொன்னான். செருப்பாலே அடிப்பேன்னு சொல்லி அனுப்பிச்சிட்டேன் சார்’ என்றாள் சமித்ரா.


‘ஓ கே. அவன் யார் என்னன்னு ஏதாவது தெரியுமா?’


‘தெரியாது சார்’


‘ஓகே. நான் பரந்தன் சாரோட ரூமைக் கொஞ்சம் பாக்கலாமா?’


அறையைத் திறந்து விட்டார்கள். அங்கிருந்த சில பொருள்களை தன் கைப் பேசியில் படமெடுத்துக் கொண்டான். மீண்டும் அந்த அறையைப் பூட்டி, ‘காவலதிகாரிகள் உத்தரவு தரும் வரை இந்த அறையை யாரும் திறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.’ என்று இல்லத்தரசியிடம் சொல்லி, சாவியை ஒப்படைத்தான். பின் வீட்டைச் சுற்றி ஒரு வலம் வந்தான். அங்கே குப்பையில் கிடந்த ஒரு பொருளை எடுத்து தன் பையில் பத்திரப் படுத்திக் கொண்டான். அது ஒரு காரின் சாவி. பரந்தன் காரின் டூப்ளிகேட் சாவியாக இருக்கலாம்.


அதே சமயம் முகிலும் வந்து சேர ரிஷியும் முகிலும் கிளம்பினர். கிளம்பியவுடன், முகில் சொன்ன விஷயமும் அவன் சேகரித்திருந்த தடயங்களும் ரிஷிக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தன. முகிலிடம் உடனடியாக செய்ய வேண்டிய சில வேலைகளைக் கூறினான். சிறிது நேரத்தில் முகிலை ஒரு இடத்தில் இறக்கி விட்டான்.


அடுத்த நாள் காலை ஒன்பது மணி. தன் உயரதிகாரியையும் முக்கிய அதிகாரிகளையும் சந்திப்பு அறையில் காலை பதினோரு மணிக்கு கூடுவதற்கு அழைப்பு விடுத்தான் ரிஷி.


சரியாக ஒன்பது மணிக்கு, சந்திப்பு அறைக்கு வெளியில் இருந்த அறையில் ட்ரைவரும், பரந்தனின் மனைவி மற்றும் மகளும், சமித்ராவிற்கு தொந்தரவு கொடுத்த பையனும் அழைத்து வரப்பட்டு, அமர வைக்கப்பட்டிருந்தனர்.


அவர்களை தனித் தனியாக அழைத்து, சுமார் ஒரு மணி நேரம் ரிஷி செய்த விசாரணையை முகில் விடியோ எடுத்தான்.


சரியாக பதினோரு மணிக்கு சந்திப்பு அறையிலிருந்து சிசி டிவி கேமரா முலம் வெளியில் அமர்ந்திருந்தவர்களின் விவரங்களை, சந்திப்பு அறையில் இருந்த அதிகாரிகளுக்கு, ரிஷி தெளிவாக விளக்கினான். அது சம்மந்தமாக, ரிஷி சொல்ல சொல்ல, முகில், கணினியை இயக்கி சில சான்றுகளை ப்ரொஜெக்டர் திரையில் காட்ட, ரிஷி விளக்கிக் கொண்டிருந்தான்.


‘சார்.. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி, பரந்தனின் மனைவி என்பதற்கான சில சான்றுகளை இப்போது திரையில் பார்த்தீர்கள். அதாவது, ‘போஸ்ட் மார்ட்டம்’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விஷ மருந்தின் வெளி அட்டைப் பெட்டியை பரந்தனின் வீட்டுக் குப்பைத் தொட்டியில் இருந்து கைப்பற்றி இருக்கிறோம். அதோடு, பரந்தனின் மனைவி, அவர்கள் வசிக்கும் பகுதி மருந்துக் கடையில் அந்த விஷ மருந்தை வாங்கியதற்கான ஆதாரமாக பெயருடன் பில்லையும் மருந்துக் கடையில் இருந்து பறிமுதல் செய்திருக்கிறோம். பரந்தன் கிளம்புவதற்கு முன், அவருடைய மனைவிதான் குளிர் சாதனப் பெட்டியிலிருந்து காற்று வெளிப்படும் ஃப்ரேம்களில் விஷத்தை தடவி வைத்திருக்கிறார். அதற்காக அந்தக் காரின் டூப்ளிகேட் சாவியை பயன் படுத்தியிருக்கிறார். இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளதை இப்போது வீடியோவில் பார்த்தீரிகள். இனி அவரை உள்ளே வரவழைக்கிறேன். நீங்கள் மேலும் விசாரணை செய்யலாம்.’


ரிஷி முடித்தவுடன் பரந்தனின் மனைவி உள்ளே வந்தார். உயரதிகாரிகள் அவரிடம் மேற்கொண்ட விசாரணை ரிஷியின் உளவுத் திறனை பறைசாற்றி உறுதி செய்தது.


ரிஷியை பாராட்டி விட்டு அதிகாரிகள் செல்ல, தன்னுடைய பல வித சிறப்பு அம்சங்கள் பொருந்திய சிறப்பு வாகனத்தில் ஸ்டைலாக ஏறி அமர்ந்து, டிடெக்டிவ் ரிஷி கிளம்பினான்.


கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in

Similar tamil story from Action