ஏலியன் அட்டாக் - 8
ஏலியன் அட்டாக் - 8
முகிலன் பயதின் எல்லைக்கே சென்றுவிட்டான் அவனின் முகத்தில் பயத்தின் ரேகை படர்ந்திருந்தது. இன்னும் சற்று நேரம் ஆனால் அவன் மூச்சே நின்றிருக்கும், அப்படிப்பட்ட நேரத்தில் தான் வில்சனின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வந்தது.
" நீங்க பயப்பட தேவையில்லை ,...... இது மனுசங்கள ஒன்னும் பண்ணாது..... நம்ம பூமியில உள்ள நாய்க்குட்டி மாதிரிதான் இது.......
என்ன..... நாய விட , கொஞ்சம் அதிகமா இதுங்க பேசுது அவ்வளவு தான்".
"என்ன....?, நாய்க்குட்டி மாதிரியா...?", முகிலன் முகத்தில் ஊசலாடிய பயம் சுவடு தெரியாமல் ஓடி போனது.
" இது ஏப்டி சார் உங்களுக்கு தெரியும்? ", அணு தன் சார்பாக ஒரு வினாவை முன் வைத்தாள்.
"உங்களுக்கு என்ன ஒரு விஞ்ஞானியா மட்டும் தானே தெரியும்......?" அவர்களின் பதிலை அவர் எதிர்பார்த்தார்.
ஆனால் வாயடைத்து நின்றனர் மூவரும்.அந்த பல்லி பிராணிகள், தங்களின் வேலையை தொடர்ந்தது.....
"அட சீ..... சும்மா கெட..... " , முகிலன் அவைகளை அமைதி படுத்த தன் பாணியில் முயற்சிதான்.
"நானும் டாக்டர்.கண்ணனும் வெறும் சயின்டிஸ்ட் மற்றும் இல்ல..... நாங்க ஆஸ்ட்ரோநாட்ஸ்...... அதாவது ராக்கெட்ல பயணம் பண்ணுறவங்க.
" நேஜமாவா.....?,முகிலன் அந்த பிராணிகளின் குரலை தாண்டி தன் குரலை உயர்த்தினான்.
"ஆமா ... அது ரெண்டு வருசத்துக்கு முன்னாடி" ,அவர்கள் மூவருக்கும் என்ன பேச என்பது புரியாமல் விழித்தனர்.
_ தொடரும்........
( ஒரு vote போட்டு comment பண்ணுங்க friends 😇)
