ஏலியன் அட்டாக் - 7
ஏலியன் அட்டாக் - 7
குரல் வந்த திசை நோக்கி மூவரும் வேகமாக ஓடினர். சற்று தொலைவில் ஒலித்த குறலோசை மெல்ல மெல்ல அவர்களின் அருகில் ஒளிக்கதொடங்கியது.
இறுதியில் அந்த குரலோசை, பாதியாக கட்டப்பட்டு இருந்த ஒரு கட்டிடத்தில் இருந்து வந்தது.
"முகில்..... முகில் நீ எங்க இருக்க....?, நா பேசுறது கெக்குதா டா.....?", அணு தன் தம்பின் பதில் ஓசை வருகிறதா என தன் செவிகளை கூர்மை படுத்தினால்.
"அணு....." , முகிலன் அலறல் ஒரு அறையில் இருந்து கேட்க, அவர்கள் மூவரும் அந்த திசை நோக்கி ஓடினார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி......
"அய்யோ..... அது என்ன...?" மாயாவின் சொற்கள் முகிலனை அவர்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.
ஆனால் அந்த ஜந்துக்கள்...... அவைகளுக்கு காது கேட்காது போலும்....... அவைகளின் பார்வை , பரன் மீது பயத்தில் ஏறி அமர்ந்திருந்த முகிலனை விட்டு விலகவில்லை..... பார்ப்பதற்கு மூன்று அடி உயரத்தில் உள்ள ஒரு வாலில்லா பல்லியை போலவும் வேறுபட்ட துணியால் ஆன ஆடைகளையும் அணிந்து மனித இனத்திற்கு தொடர்பில்லாத ஒரு உயிராகவே தோன்றியது.
இரவில் இருந்து நடந்த சம்பவங்களை வைத்து அவர்கள் அனைவரும் அந்த உயிர் தங்களின் உலகை சேர்ந்தது அல்ல என்ற முடிவிற்கு வந்தனர்.
முகிலன் பயத்தில் பறன் மீது அமர்ந்திருந்தான், அவன் அமர்ந்திருந்த அமைப்பையும், அவன் முகத்தில் முழுவதுமாக படர்ந்திருந்த பயத்தையும் பார்க்கும்போது மாயாவிர்க்கு சிரிப்பு தான் வந்தது..... ஆனால் சூழ்நிலையை புரிந்து கொண்டு தன் சிரிப்பை கஷ்டபட்டு கட்டுபடுத்தினாள்.
அந்த இரு பல்லி உருவம் முகிலனை நோக்கி தங்கள் கைகளை உயர்த்தி...... "டாக்டர். கண்ணன்.... , டாக்டர்.கண்ணன்.....", விடாமல் அந்த வார்த்தைகளையே கூறியது.
"இந்த பேரு...... இது நேத்து அந்த மெஷின் ல இருந்து வந்த பேரு தானே....." அணு நினைவில் அந்த வானில் இருந்து விழுந்த பொருள் வந்தது.
"ஆமா அணு, ஆனா இதுங்க நம்ம முகிலன பாத்து, டாக்டர். கண்ணனு சொள்ளுதுங்களே.....? என் அப்டி சொல்லுது....? மாயாவின் கேள்விக்கான பதில் அணுவின் இல்லை.
அந்த பல்லி மனிதர்கள் மீண்டும் மீண்டும் முகிலனை நோக்கி அதே வார்த்தைகளை கூறினார்கள்.
அவனோ பீதியின் உச்சகட்டத்தில் இருந்தான்.
_ தொடரும்.........
