Win cash rewards worth Rs.45,000. Participate in "A Writing Contest with a TWIST".
Win cash rewards worth Rs.45,000. Participate in "A Writing Contest with a TWIST".

Madhu Vanthi

Drama Tragedy Action


4  

Madhu Vanthi

Drama Tragedy Action


ஏலியன் அட்டாக் - 16

ஏலியன் அட்டாக் - 16

2 mins 148 2 mins 148

டாக்டர் வில்சனிடம் இருந்து பதினேழு மிஸ்டு கால்கள் வந்ததை கவனித்ததும், "வில்சன் சார் ஏன் இத்தனை தடவை கூப்பிட்டு இருக்காரு?" என அனு முகத்தில் அதிர்ச்சியை காட்ட, அதற்க்கு "வில்சனா???....", என்று பதறிய சொஹாரவை மூவரும் சேர்ந்து, "இப்போ இவன் ஏன் இப்டி ஓவர் ரியாக்ட் பண்ணுறான்", என்று அவனை குழம்பி போய் பார்த்த அந்த நேரம்... அனுவின் மொபைல் மீண்டும் அலறியது, வில்சன் சார் என்று ஒளிரியபடி....

சொஹாராவின் அதிர்ச்சியை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காத அனு மொபைலை அட்டென்ட் செய்தி காதில் வைத்து ஹலோ என சாதாரணமாகவே பேச்சை தொடங்கினாள்.

"ஹலோ... அனு தானே மா...", அப்புறம் இருந்துகொண்டு பதட்டத்தை மறைத்த குரலில் வில்சன் கேட்டார்.

"ஆமா.. அனு தா ஸார்... "

"இப்போ நீங்க எங்க மா இருக்கீங்க... அந்த வீட்டுல இருந்து கெலம்பீட்டீங்க தானே"

ஹான்.. கெலம்பீட்டோம் ஸார்... கெலம்பி ஹாஃப் அன் ஹவர் ஆகுது...

ஓ... ஹாஃப் அன் ஹவர் ஆச்சா... சரி மா... சரி மா...", என கூறி சற்று இடைவெளி விட்டவர், "அங்... அப்பறம்... அங்க ... அங்க எந்த பிரச்சனையும் இல்லையே....", என அவர் தயங்கி தயங்கி கேட்க.. அவர் தயக்கத்தில் இப்புரம் அனிச்சையாகவே விடையரியா புன்னகை ஒன்று மலர்ந்தது...., "இங்க என்ன பிரச்சன... எத பத்தி ஸார் கேக்குறீங்க...."

"அ.. அது அது வந்து... மார்னிங் பீச்ல நடந்துச்சே... அத மாறி எதாச்சும் ஆச்சான்னு கேட்டேன் மா..."

"ஓ அப்டியா ஸார்... அப்டி எந்த பிரச்சனையும் இல்ல ஸார்..."

"ம்ம்.. சரி ஓகே மா...", என பட்டென்று ஃபோனை கட் செய்து விட்டார்...

இங்கே அனு மாயா முகில் தான் பிளந்த வாய் பிளந்த படியே சொஹாராவை நோக்கிகொண்டு நின்றார்கள்... அதிலும் முக்கியமாக அணு தான் அதிர்ச்சியில் திறந்த வாயை மூட கூட மறந்து நின்றாள்.

அந்த அதிர்ச்சிக்கு காரணமான சொஹாராவோ எதுவுமே அறியாத அப்பாவி போல் இவ்வளவு நேரமும் தான் பேசி கொண்டிருந்த அனுவின் மொபைலை நல்ல பிள்ளை போல் அவளிடமே கொடுத்தான்...

இப்போது உண்மையில் வில்சனிடம் பேசியது சொஹாரா தான்... ஆரம்பத்தில் ஹலோ மட்டுமே அனு கூறியிருக்க.. அடுத்து எல்லம் அனுவின் குரலில் சொஹாரா தான் மிமிக்கிரி செய்தது.

"டேய்... என்ன டா நீ.. இவ்வளவு நேரமும் வேர ஏதோ ஒரு பொண்ணோட குரல்ல பேசீட்டு இருந்த.. இப்போ என் அக்கா வாய்சையே ஆட்டைய போட்டியா.. ஏன் டா வில்சன் ஸார் கிட்ட பொய் சொன்ன...", என முகிலன் கொதிக்க கிளம்பினான்.

"அவர உனக்கு முன்னாடியே தெரியுமா??", என மாயா ஒரு சந்தேக பார்வையில அவனை பார்த்து கேட்க..,

"அவர நம்பாதீங்க.... அவர் நல்லவர் கெடயாது... பிளீஸ்.. எனக்கென்னமோ இப்போ நடக்குற பிரச்சனைக்கு அவர் தா காரணம்ன்னு தோணுது... பிளீஸ் என்ன நம்புங்க...", என இறைஞ்சி நின்றான் அவன்...

முகிலனுக்கு அவன் கெஞ்சலான முகத்தை பார்க்க பத்தி கொண்டு தான் வந்தது..., இப்டி ஒரு வாய்ஸுக்கு இப்டி ஒரு மூஞ்சியா என... இருந்தாலும் அந்த குரலுக்காக சொஹாராவை நம்ப தயாரானான்.

"நாங்க நம்புரோம்.. ஆனா காலைல அவர் தானே உங்க பிளானட்ல இருந்து வந்த ஏலியன் கிட்ட இருந்து எங்கள கப்பாத்துனாரு... அவருக்கு எதிரா இருக்குற உன்ன நாங்க நம்ப எதாச்சும் ஆதாரம் வேணுமே...", என முகிலன் தெள்ளந்தெளிவாக கூற...., "எங்க பிளானட் ஏலியனா... அதுகெல்லம் வாய்ப்பே இல்ல...", என சொஹாரா கூறும்போதே காலையில் பீச்சில் நடந்த சம்பவம் என வில்சன் கூரியது நினைவிற்க்கு வர... அதன் பின்பே என்ன நடந்தது என மற்றவர்களிடம் கேட்டான்.

அவர்களும் நீருக்குள் இருந்து வந்த அந்த விசித்திர உயிரினங்களை பற்றியும் வில்சன் வந்து காப்பாற்றியது பற்றியும் கூறிட..., "அந்த கிரியேச்சரா உருவாக்குனதே அவர் தா..." என ஒரு குண்டை தூக்கி போட்டான் சொஹாரா

        

                                      - தொடரும்....Rate this content
Log in

More tamil story from Madhu Vanthi

Similar tamil story from Drama