ஏலியன் அட்டாக் -1
ஏலியன் அட்டாக் -1
இரவானது தன் முழுமையை அடைந்து புதிய விடியலுக்கு தயாராகி கொண்டிருந்த வேலை, அனு தன் தொலைநோக்கியில் விழியை பதித்து வானில் தோன்றிய விண் தூரலை ரசித்துக்கொண்டு இருந்தாள். உடன் மாயாவும் முகிலனும், அவள் சொல்வதை கேட்டுகொண்டே வீட்டு பால்கனியில் இருந்த சோஃபாவில் அறை தூக்கத்தில் இருந்தார்கள்.
வானின் மீது கொண்ட காதலாலோ என்னவோ அனுவிர்க்கு மட்டும் தூக்கம் வரவில்லை; அவள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாள்,
மாயாவும் .. முகிலனும்.... உம்ம்ம்... ம்ம்ம்ம்..... என அவள் வார்த்தைக்கு "உம் " போட்டுக்கொண்டு இருந்தனர்.
இப்படியே மணி நேரங்கள் கடந்து கொண்டிருந்த நேரம் திடீரென்று அனுவின் அறிவிப்பு குரல் அபாய குரலானது..."ஆஆஆஹ்ஹ்.... ஹே ஹே ஹே.... எந்திரிங்க... எந்திறிங்க.... ரெண்டு பேரும் இத பாருங்க ", என் அலறியதும் இருவரின் தூக்கம் கலைந்தது..."என்ன அனு.... எத பாக்க..?.", என்ற முகிலனின் வினாவிற்கு முன்பே , அனுவின் தொலைநோக்கியை தன் விழியில் பதித்தாள் மாயா...
அந்த காட்சியை பார்த்த உடன் மாயாவிர்க்கு இதயம் வேகமாக துடித்தது.....,"மய் காட்......இது ஒரு எரிக்கல்....இவ்வளவு பக்கத்துல!"மாயா கூறிய மரு நொடியில் முகிலன், " அத நீ டெலஸ்கோப் வச்சு தான் பாக்கனும்னு அவசியம் இல்லை... அத எடுத்துட்டு பாரு .. அது நம்ம வீட்டுக்கு தான் வருது..."முகிலனின் வார்த்தை அனைவரையும் வாயடைக்க செய்தது.
தூரத்தில் தெரிந்த தங்க பந்து சிறிதுசிறிதாக வளர்ந்து நெருப்பு பந்தாக அவர்களை நெருங்கியது.... பயத்தில் மூவரும் அவர்களை அறியாமலேயே பின்னோக்கி நகர்ந்தனர்.வேகமாக வந்த நெருப்பு பந்து அவர்களை தாண்டி நேராக தோட்டத்திற்கு சென்றது.
அதன் பின்பு தான் அவர்களுக்கு உயிர் வந்தது, "ஜஸ்ட் மிஸ்... தப்பிசோம்.....வாங்க போய் பாக்கலாம்...", அனு ஆர்வத்தில் இருவரையும் அழைத்தாள்;... "வேணாம் போலீஸ் -கு
போன் பண்ணலாம்", பயம் நீங்காதவளாய் மாயா கூறினாள்."அத அப்ரம் பாக்கலாம் மொதல்ல போய் கல்-ல பாக்கலாம் .... வாங்க" அனு இருவரின் கைகளை பிடித்து தோட்டத்திற்கு இழுத்து சென்றாள்.
தோட்டத்தில். ....
வேகமாக வந்த அனுவிற்கு கல்லை நெருங்க நெருங்க ஒருவிதமான ஆர்வம் கலந்த பயம்.. மூவரும் அந்த கள்ளை நெருங்கிய அதே சமயம், கல்லுக்கு நேரே இருந்த பழைய அறையில் இருந்து வெளிச்சம் வந்து மூவரின் கவனத்தையும் இழுத்தது. திடீரென்று வெளிச்சம் வந்ததால் கல்லை பார்கும் வேலையை மறந்து மாயா ,சில அடிகள் தொலைவில் இருந்த அந்த அறையின் கதவை திறந்தாள். அங்கிருந்த வானொலியில் ஒரு பல்ப் பொருத்தப்பட்டு இருந்தது....அதுவே ஒளியை வீசியது.
"வெறும் லைட் தான்... வெற ஒன்ணும் இல்ல..." மாயாவின் பதில் அனுவிருக்கு பயத்தை உண்டாக்கியது. "கரண்ட் இல்லாத ரூம் - ல எப்படி லைட் எரியும்....?"அனு சுற்றி முற்றி பார்த்தாள், எங்கும் மின்சார இணைப்புக்கு அறிகுறி தெரியவில்லை....., அதே சமயம் கல்லின் அருகே சென்ற முகிலன் அதிர்ச்சி கலந்த குரலில் இருவரையும் அழைத்தான்.அருகில்வேன்ற இருவரும் அந்த கல்லை பார்க்க, "இது ஒரு கல்லே இல்லை எதோ ஒரு மெஷின் மாதிரி இருக்கு" ,என்றான் முகிலன். மூவரும் அதிர்ச்சியில்
உரைந்திருந்த வேளையில் பல்பை ஒளிரவிட்ட அந்த வானொலி கரகரத்தது...,பயத்துடன் மெல்ல மூவரும் அதனருகே செல்ல... டாக்டர்.வி.கண்ணனுக்கு தகவல்..... பூமிக்கு ஆபத்து... முதல் படையெடுப்பு 20.59⁰N - 78.96⁰E.... அலர்ட் ......அலர்ட்.....வானொலியின் குரல் அடங்கியது ."பூமி மேல படையெடுப்பு..... அப்படினா படையெடுக்க போறது ஏலியன்ஸ் - ஆ......." முகிலன் சொன்னதும் அனுவும் மாயாவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்..
_தொடரும்.......
