Seetha Lakshmi R

Comedy

4.8  

Seetha Lakshmi R

Comedy

செந்தமிழ் நாடும் சுந்தர தெலுங்கு

செந்தமிழ் நாடும் சுந்தர தெலுங்கு

3 mins
294


"மீனாக்ஷி! ஓ மீனாக்ஷி! நா முத்து மீனாக்ஷி! நா செல்ஃபோனு கனிபிஞ்ச லேது", ( என் செல்லமே! என் மொபைலை காணல!) கொஞ்சம் கலவரத்துடன் தெரிந்தான் சந்தோஷ். 


"அய்ய! அங்க எங்கேயாவது வச்சிருப்ப, போய் தேடு", என்றாள் கொஞ்சம் அலுப்புடன் சொன்னாள் மீனாக்ஷி.


சந்தோஷ்: "இதிகோ! நுவ்வு எந்துக்கு உன்னாவ்?! வெதிகி சூடு". (நீ எதுக்கு இருக்க? தேடி கொடு)


மீனாக்ஷி: "இன்னாது! சூடா? இன்னோரு காபியா?! இப்ப தானே குடிச்சே? போ! போ! நல்ல புள்ளையா குளி."


சந்தோஷ்: "நல்லோடு அன்டாவா?! நீக்கன்னா கலர் தக்குவே! அந்துகனி அப்புடப்புடு குர்த்து செய்யகு." (நான் கருப்புதான், அடிக்கடி சொல்லி காட்ட வேணாம்) 


மீனாக்ஷி: "சரி சரி கடுப்பா இருக்கேன். தொந்தரவு செய்யாதீங்க."


சந்தோஷ்: "ஏன்ட்டீ? மல்ளி செப்பு?" (என்னது? இன்னோரு தடவ சொல்லு)


மீனாக்ஷி: "செப்பாவது? இரும்பாவது. கடுப்பு", என்றாள்.


சந்தோஷ் (வயிற்றை தொட்டு): "இதா?!" என்கிறான். 


மீனாக்ஷி: "அ, ஆமாமாம்! வயிறு பசிக்குது", என்றுவிட்டு, சாப்பிடுவது போல பாவனை செய்கிறாள்.


சந்தோஷ் செல்ஃபோனை எடுத்து, தன் அம்மாவை தொடர்பு கொள்கிறான். 


சந்தோஷ்: "அம்மா நீ கோடலிக்கி கடுப்பு வச்சிந்தி."


மீனாக்ஷி திடுக்கிட்டு தலை நிமிர்ந்து,"என்னது இது?! எனக்கு கடுப்பு வந்தா நீ அம்மாவுக்கு ஃபோன் போடற?"


சந்தோஷ்: "ஏ?! சாலா மஞ்சி நியூஸ் காதா? அந்துகே?"


சரிதான்! கம்ப்யூட்டரையும், செல்லையும் தட்டி தட்டி மூளை குழம்பி விட்டது போலும் என்று தன் வேலையை பார்க்கிறாள். 


சாயந்திரம் ஆபீஸிலிருந்து திரும்பியவளுக்கு அதிர்ச்சி! வீட்டில், மாமியார், மாமனார், மச்சினர் மற்றும் மாமியாரின் மாமியார் என வந்து விட்டிருக்க மனதுக்குள், 'போச்சு இனி அத்தம்மா தெனமும் வகை வகையா பப்பு (பருப்பு) வெரைட்டீஸ் பண்ணி போடுவாங்களே, அத தின்னுட்டு, இந்த சந்தோஷ் பையன் புகழ்ந்து கவிதையா கொட்டி, நம்மையும் அத செய் இத செய் னு சொல்வானே?!' , என்றெண்ணினாள்.


மீனாக்ஷி: "அத்தம்மா! (காலை தொட்டு கும்பிட்டு) நுவ்வு எப்புடு வச்சிந்தி?" 


அவள் மாமியார் தலையில் கையை வைத்துக் கொண்டு அவள் தெலுங்கை ரசிப்பதா வேண்டாமா என்று யோசித்தபடியே, "லேம்மா". (எழுத்துரு)


சதீஷ் (முந்திரிக் கொட்டைத் தனமாக): "அம்மா மீனாக்ஷி சாலா பாகா வண்டா சேஸ்துந்தி. கானி கடுப்புதோ உந்தி. இக எலா?! " (அம்மா மீனாக்ஷி நல்லா சமைப்பா, ஆனா இனி எப்படி) அத்தம்மாவும் புன்னகையுடன் தலையை ஆட்டி மீனாக்ஷியை பார்த்து சிரிக்க அவளுக்கு என்னவோ போலாகிவிட்டது. 'சே! இதையெல்லாம் அத்தம்மாவிடம் சொல்கிறானே?', வெட்கப்பட்டாள் மீனாக்ஷி. 


அத்தம்மா: "அவுன்ரா! எர்ரபடிந்தி முகம்! வெலுகு கனிபிஸ்துந்தி." (ஆமா டா! முகம் செவந்து போயிடுச்சு, ஏதோ ஒளி தெரியுது)


அதன்பின் அத்தம்மா, சதீஷ் உட்பட எல்லோரும் ராஜ உபசாரம் செய்ய, முதலில் ஒரு மாதிரி இருந்தாலும், அன்பு மழையில் நனைய நனைய மகிழ்ச்சி அடைந்தாள் மீனாஷி. அத்தம்மா அடிக்கடி தன் வயிற்றை தொட்டு கடுப்பு என்று எதோ சொல்ல, மீனாக்ஷி உடனே, "ஆமா அத்தம்மா! ஈ சந்தோஷ் (சந்தோஷை கை காட்டி) எப்புடு பாத்தாலும், என் வயித்தெரிச்சலை", சொல்லி முடிப்பதற்குள் அத்தம்மா முகம் வெட்கத்தில் சிவந்து,"பிச்சி பில்லா", ஏன கன்னத்தை தட்டியது எதற்கு என புரியாமல் விழித்தாள். இருந்தும் சந்தோஷ், அத்தம்மா இருப்பதால், இனி கொஞ்சம் நாட்கள் அடங்கி இருப்பான் என்று சந்தோஷப்பட்டாள். 


அத்தம்மா கிளம்பும் முன் நிறைய உபதேசத்தை அள்ளி அள்ளி சந்தோஷுக்கு கொடுத்தாள். "ஆமா அத்தம்மா, என் வயித்தெரிச்சல கிளப்பாம குட்டா இருக்க சொல்லுங்க", என்று தன் வயிற்றை தொட்டு மீனாக்ஷி காண்பிக்க, "ஏம் பில்ல ரா இதி", என்று அத்தம்மா வெட்கப்பட மீனாக்ஷி மறுபடியும்'ஙே'.


வெள்ளிக்கிழமை ராத்திரி சந்தோஷ், கொஞ்சலும், கெஞ்சலுமாய், "முத்து! பங்காரம்", (செல்லமே! தங்கமே;) என்றழைக்க, "என்ன?! நாளைக்கு பப்பு வெணுமா, ஆந்திரா ஸ்டைல் ல? இல்ல என்னை கடுப்பாக்கணும்னு எதுனா ப்ளான் வெச்சிருக்கீங்களா?", என்று கேட்டாள். 


சந்தோஷ்: "அதே பங்காரம்! ரேபு டாக்டர் அபாயிண்ட்மெண்ட் தீஸ்குந்தாமா?". (நாளைக்கு டாக்டர் கிட்ட போவோமா)


மீனாக்ஷி: "எ எதுக்கு?! சின்ன சின்ன பூசல் சண்டைக்கெல்லாம் டாக்டரா?", அவள் விழியோரம் லேசாக கண்ணீர்.


சந்தோஷ்: "டோலிங்! எடவத்து! கனீசம் ஈ கண்டீஷன் லோ!"(கண்ணே இந்த நேரத்துல அழாதே)


மீனாக்ஷி: "அப்ப எனக்கு ஏதோ மூளை கோளாறு ன்னு சொல்றியா?!"


சந்தோஷ்: "லேது! லேது! ஆ ரோஜு அம்மா செப்பிந்தி ப்ரெக்னேன்ஸி லோ!"

(இல்லயில்ல! அன்னிக்கு அம்மா ப்ரெக்னென்ஸில)


மீனாக்ஷி: "ஓ! அதான் ஒங்கம்மா மூஞ்சி செவந்து போச்சா? ப்ரெக்னென்சி?! ஹும்! பாவம் அவங்க ஒரு மாதிரி இருந்தப்பவே நெனச்சேன். இருங்க ஃபோன் பண்றேன்", என்றாள். 


ஃபோனை போட்டு ஸ்பீக்கர் பட்டனை ஆன் செய்கிறாள்!


சந்தோஷ்: "அம்மா எலா உன்னாவு?"


மீனாக்ஷி: "அத்தம்மா கங்கிராஜுலேஷன்ஸ்! ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் திஸ்."


அத்தம்மா: "பர்லேதம்மா நுவ்வு இந்த த்வரகா எக்ஸ்பெக்டிங் அனி நேனு கூட எக்ஸ்பெக்ட் செய்லேது". (பரவாயில்லை மா நானும் இத எதிர்பார்க்கல)


சந்தோஷ்: "அம்மா! இதி கடுப்புதோ உந்தி, கானி டாக்டர்" (அம்மா! இவ டாக்டர் பத்தி பேசினா அப்ஸெட் ஆகுறா) 


மீனாக்ஷி: "சந்தோஷ் டோன்ட் ஸ்டார்ட். கடுப்பு வர்றது, அதனால் வயிறெரியறது எல்லாம் நார்மல்".


சந்தோஷ்: "அதே அன்னி நார்மல்கா உந்தனி செக் செய்யாலி காதா?!" (எல்லாம் சரியா இருக்கானு தெரிஞ்சுக்க வேணாமா)


அத்தம்மா: "அவுனம்மா! சந்தோஷ் செப்பேதி கொஞ்சம் வினம்மா". (ஆமாம் மா! சந்தோஷ் சொல்றத கொஞ்சம் கேளு)


மீனாக்ஷி: "யூ டூ அத்தம்மா?! சரி அத விடுங்க? பேபி எப்ப ட்யூ?"


அத்தம்மா?! "ஐயோ! என்ட்ரா நன்னு அடுகுதுந்தி? மீனாக்ஷி! டேக் கேர்", என்று ஃபோனை கட் செய்தாள்.


மீனாக்ஷி: "ஒங்கம்மா ரொம்ப வெட்கப்படறாங்களே!", என்று அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.


சந்தோஷ்: "நீக்கு லேது கா!" (ஒனக்கு இல்லியே)


மீனாக்ஷி: "நான் ஏன் வெட்கப்படணும்? ஐ எம் நாட் ப்ரெக்னென்ட்", என்று சொல்ல தொப் என்று சந்தோஷ் மயங்கி விழுகிறான்.


லக்ஷ்மி ஸ்ரீநிவாசன் 🌺

19.11.2019


Rate this content
Log in

Similar tamil story from Comedy