saravanan Periannan

Abstract Action Classics

5.0  

saravanan Periannan

Abstract Action Classics

செந்தில்நாதன் அத்தியாயம் 10

செந்தில்நாதன் அத்தியாயம் 10

4 mins
402


 அட்டைப்படம்: பரத்.மு

இக்கதையை படிக்கும் முன் செந்தில்நாதன் அத்தியாயம் 1,2,3,4,5,6,7,8,9 படிக்கவும்.

இக்கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.

வராகனின் வீீரர்கள் குதிரையில் வந்து வராகனின் திருமணம் நடக்கும் அரண்மனை முன் நிறுத்தி விட்டு அந்த அரண்மனைக்குள் ஓடினார்கள்.

அங்கு நின்று கொண்டிருந்த தளபதியிடம் புரட்சி படையின் எழுச்சி மற்றும் அவர்கள் தாக்க வருவதையும் பற்றி கூறினார்கள்.

தளபதி இதை திருமண மேடையில் அமர்ந்திருந்த வராகனிடம் கூறினான்.

இதை கேட்கும் வராகனும் பூங்குழலியும் சற்று அதிர்ச்சி அடைகிறார்கள்.

வராகன் தளபதியிடம் நம் படையில் இருந்து புரட்சிப்படை சென்றவர்கள் பற்றி கவலைப்பட வேண்டும்.

நம்மிடம் உள்ள வீரர்களை தயாராக சொல்லி அழைத்து வா.

வராகன் பூங்குழலியிடம் திரும்ப அவள் வராகனின் கையை பிடித்து அமர வைக்கிறாள்.

ஏன் பூங்குழலி நான் உயிருடன் திரும்ப மாட்டேன் என முடிவு கட்டி விட்டாயா.

பூங்குழலி இல்லை என்று சொல்ல,கவலைப்படாதே பூங்குழலி இந்த போரை முடித்து உன் கழுத்தில் மங்கல நாண் பூட்டுவேன்.

இது அந்த பரமசிவன்‌ மீது நான் செய்யும் சத்தியம்.

வராகன்‌ எழுந்து வீரனே சென்று என் போர்கவசத்தை மற்றும் வாளை எடுத்து வா.

அத்துடன் ஆயுதங்கள் நிரம்பிய எனது 7 குதிரைகள் பூட்டிய ரதத்தை எடுத்து வா என உத்தரவிட்டான்.

வராகன் தன் போர்கவசத்தை எடுத்து போட்டு கொண்டு தன் வாளை கையில் எடுத்து கொண்டு அந்த அரண்மனையை விட்டு வெளியே வருகிறான்.

வராகன் தன் படை வீரர்கள் அனைவரும் இரும்பு தலைகவசம் அணிய உத்தரவிட்டான்.

ஏற்கனவே வராகன் தன் படை வீரர்கள் தலை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இதை தயார் செய்ய சொல்லியிருந்தான்.

அமுதவள்ளி தன் புரட்சிப்படையுடன் அங்கு வந்தாள்.

வராகன் தன் தேரில் இருந்த படி தன் இரு கைகளையும் பக்கவாட்டில் விரித்து தன் படையை அமைதி காக்க சமிக்ஞை செய்தான்.

அமுதவள்ளியும் தன் இரு கைகளையும் பக்கவாட்டில் விரித்து தன் புரட்சிப்படையை அமைதி காக்க சமிக்ஞை செய்தாள்.

வராகன் அமுதவள்ளியை பார்த்து பெண் தெய்வங்கள் போர் செய்ததை புராண கதைகளில் கேட்டுள்ளேன்.

ஆனால் பெண் தெய்வம் தன் இதர பெண் தெய்வங்களுடன் இப்பொழுது என்னோடு போர் செய்ய வந்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.

அமுதவள்ளி வராகனை பார்த்து அன்பு உள்ளம் கொண்ட பெண்கள் அநியாயங்களை கண்டு பொங்கினால் இந்த உலகம் ஆட்டம் கண்டு போகும்.

வராகன் அமுதவள்ளியை பார்த்து தேவி வார்த்தைகளால் மாயம் செய்யாமல் சற்று யோசித்து பார்.

எனக்கு போர் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஒரு போர் ஆரம்பம் ஆனால் நம் உணர்ச்சிகளை கை விட்டு எதிர்த்து நிற்போர் எவராயினும் வெட்டி வீச வேண்டும்.

போரை ஆரம்பிப்பது எளிது ஆனால் நிறுத்தலாம் என்று நினைத்தாலும் போர் நிற்கும் போது சர்வ நாசம் நிகழ்ந்திருக்கும் என வராகன் கூறி முடித்தான்.

அமுதவள்ளி அது எனக்கு தெரியும் இளவரசன் வராகன்.

ஒரு தீயவனை அழிப்பதற்கு சில நல்லவர்கள் தன் உயிரை அர்ப்பணிப்பது தவிர்க்க இயலாதது.

போரை நீ தொடங்க வேண்டாம்,இந்த போரை நானே தொடங்குகிறேன்.

சர்வம் நீயே சர்வேஷ்வரா

 இந்த போரை உன் அருளுடன் தொடங்கிறேன்.

என அமுதவள்ளி தன்னுடைய போர் சங்கை எடுத்து முழங்கினாள்.

வராகன் அதை பார்த்து வியந்தான்.

அமுதவள்ளி தனது புரட்சிப்படையை கருடன் வடிவில் அமைத்தாள்.

வராகன் அது கருட வியூகம் என உணர்ந்து தன் படையை பிறை சந்திரன் வடிவில் அமைத்தான்.

கருட வியூகமும் பிறை சந்திர‌ன் வியூகமும் ஒன்றோடு ஒன்று மோதின.

வராகனின் யானை ருத்திரவாசன் தன் சக யானைகளுடன் சேர்ந்து நாசம் செய்தது புரட்சிப்படையை.

ஈட்டிகளை வீசினாலும் அதை துதிக்கையால் வீசியது ருத்திரவாசனும் அதன் சக யானைகளும்.

அமுதவள்ளி வலிமையான கதாயுதம் ஒன்றை எடுத்தாள்.

தன் கதாயுத வீரர்களை யானையின் தலையில் இப்படி தாக்க வேண்டும் என்று சொல்லி விட்டு தன்னுடைய ரதத்தில் இருந்து கால்களை ஊன்றி குதித்து தன் முன் முன்னேறி வந்த ருத்திரவாச யானையின் தலையில் கதாயுதத்தால் ஓங்கி அடித்தாள்.

வராகன் ருத்திரவாச என கத்தினான்.

ஏய் அமுதவள்ளி என் நண்பனின்‌ ஆயுள் பறித்த உன்னை கொல்வதை என் நண்பனின ஆத்மா வீர சொர்க்கத்திலிருந்து பார்க்கும் என கூறியபடி வராகன் தன் ரதத்துடன் அமுதவள்ளியின் ரதம் நோக்கி முன்னேறினான்.

அமுதவள்ளி செந்தில்நாதனின் வாளையும் அவளது கேடயத்தையும் எடுத்துக் கொண்டு ரதத்தில் இருந்து தரையில் குதித்தாள்.

வராகனும் வாளையும் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு தரையில் குதித்தான்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் வாளால் ஒருவருக்கு ஒருவர் காயங்களை குடுத்தார்கள்.

அமுதவள்ளியின் கன்னத்தில் கீறல் பட்டது வராகனின் வாளால்.

என்ன தேவி உன் அழகு முகம் ரத்தம் சொட்டுகிறதே என சிரித்தான் வராகன்.

அமுதவள்ளி இந்த உடல் அழகு தற்காலிகமானது ஆனால் இந்த வீரத்தின் அடையாளமாய் தழும்பு நான் உள்ளவரை நிலைத்திருக்கும் என சிரித்தாள்.

வராகன் முறைத்தப்படி வாளால் அமுதவள்ளி கழுத்தை வெட்ட வர அமுதவள்ளி தன் தலையை குனிந்து வராகனின் பாதத்தில் கேடயத்தால் ஓங்கி அடித்தாள்.

பின்பு வராகன் தன் வாளை தவற விட அதை பிடிக்கும் அமுதவள்ளி வராகனின் மார்பில் ஓங்கி உதைத்தாள்.

வராகன் கீழே விழ அமுதவள்ளி அவன் நெஞ்சில் காலை வைத்தாள் அமுதவள்ளி.

என்னை கொன்று விடு என வராகன் சொன்னான்.

அமுதவள்ளி தன் வீரன் ஒருவனை அழைத்து வராகனின் கை கால்களை இரும்பு சங்கிலியால் பிணைத்து தன் ரதத்தில் ஏற்றும்படி உத்தரவிட்டாள்.

அதிக உயிர்களை பலி கொண்ட இந்த போர் வராகனின் கைதுடன் முடிந்தது.

வராகனின் வீரர்கள் மற்றும் புரட்சிப்படை வீரர்கள் இணைந்து அடிப்பட்டோரை மருத்துவர்கள் மற்றும் மருத்துவச்சிகள் இருக்கும் இடத்துக்கு அழைத்து சென்றனர்.

வராகன் தன்னை கொல்லும்படி மீண்டும் மீண்டும் கூறினான்.

அமுதவள்ளி அவனையும் அங்கு கூடி இருந்த வீரர்களையும் பார்த்து 

வராகனை கொல்வதால் இங்கு நடக்கும் எதுவும் மாற போவது இல்லை.

வராகன் எனும் ஒருவன் கொடியவன் ஏன் என்றால் அவன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தீயதாக இருக்கிறது.

வராகனின் எண்ணங்களை இப்போது நாம் நல்ல விதமாக மாற்றினால் அது எதிர்காலத்தில் வரும் சந்ததிக்கும் இது ஒரு பாடமாக இருக்கும்.

வராகன் தன்னை எண்ணி அவமானத்தால் தலை குனிந்தான்.

வராகன் செய்த தவறுகளுக்கு அவர் அதில் சரி செய்ய கூடிய சரி செய்து விட்டு ,சரி செய்ய முடியாத தவறுகளுக்கு பாதிக்கப்பட்டவர்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டு விட்டு சிறை செல்ல வேண்டும்.

அமுதவள்ளி வராகனின் கை,கால்களில் கட்டி இருந்த சங்கிலிகளை அவிழ்த்துவிட்டு வராகனின் திருமணத்தை பூங்குழலியுடன் நடத்தி வைத்தாள்.

வராகன் அமுதவள்ளியிடம் இந்த நாட்டின் அரசியாக பதவி ஏற்க சொல்ல அமுதவள்ளி சிரித்துவிட்டு 

மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் யார் வேண்டும் என்றாலும் அரச பதவியை ஏற்கலாம்.

இந்த நாட்டில் உள்ள பெண்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை காக்கும் படி புரட்சி படையை கேட்ட வள்ளி தான் இந்த நாட்டின் அரசி.

வள்ளி அரசி ஆக தயங்க அமுதவள்ளி அவள் கண்ணை பார்த்து இதை பதவியாக நினைக்காதே இந்த பதவியை மக்களின் சேவகி என ஏற்றுக்கொள்.

வள்ளியின் தலையில் பட்டாபிஷேகத்தின் போது மகுடம் வைக்கும் போது அதை மறுத்து செங்கோலை மட்டும் வாங்கி கையில் பெற்றுக்கொண்டாள்.

மக்கள் எங்களின் அரசி வள்ளி என முழக்கமிட்டனர்.


 செந்தில்நாதனின் கதை இனிதே நிறைவுற்றது.

          சுபம்



Rate this content
Log in

Similar tamil story from Abstract