அ,ஆ டீச்சர்
அ,ஆ டீச்சர்
வேலை பிடிக்கவில்லை என பொய்யாகக் காரணம் காட்டி வீட்டில் உட்கார்ந்திருந்ததைக் கண்டதும் ராமுவுக்குக் கோபம் வந்தது. தனது மகனை அருகில் அழைத்து அத்தையை வேலைக்குப் போகச் சொல்லுடா! இலஞ்சம் என்பது உலகத்தில் இல்லாததா! சமாளித்து வாழ்வதுதான் வாழ்க்கை. வேண்டாம் என்று மறுத்தால் குடும்பத்தையே நாசப்படுத்திவிடுவார்களடா! உங் பெரியப்பனுக்கு நாலும் வயசுக்கு வந்த பொண்ணுடா! விட்டுட்டு வந்தால் அவ்வளவுதான். யோசிச்சு பார்த்து செய்யணும்டா! காவல்துறையிலிருந்து எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளபோது இவள் பணிந்து போவது தவறாகாது.
விடிந்தால் ரக்ஷாபந்தன். படித்ததற்கு விரோதமாக எது வந்தாலும் சமாளித்துக்கொள்வோம் என்று சொல் அண்ணா!
இதை பத்து வருஷத்துக்கு முன்னாடியே சாடைமாடையா போட்டு காட்டியாச்சு! மனுஷனுக்கு ஒருமுறைதான் சாவு. கடவுள் என்பக்கம்தான் இருக்காரு! சராசரி மனுஷன் வாழ்க்கை வாழற மக்களை துன்பப்படுத்திப் பார்க்கிறது அதிகார வர்க்கத்திற்குப் பழக்கமாகிப்போச்சு!
உன்னை அசிங்கமாகப் பேசினால் சரி! அசிங்கமாகப் படம் போட்டால் என்ன செய்வாய்?
நாட்டில் டாக்டர்,ஓவியர் இவர்களுக்கு படத்தைக்காட்டித்தான் சொல்லித்தருவார்கள். அதுபோல யாரோ போட்டிருக்கிறார். என் குழந்தைகள் உன்னால் துன்பப்படவேண்டுமா?தூக்கிட்டு போய்ட்டா என்ன பண்ணுவாய்?
அப்படியும் மிரட்டியாச்சு! நான் பயப்படலை! நல்லா தூங்கு! விடிந்தால் பேசுவோம். ரக்ஷாபந்தன் கய
ிறுங்கறது எந்த கஷ்டங்களையும் சமாளிக்கிற கயிறுதான்.
என் இரத்தம் அழிந்தால் உனக்கு சந்தோஷமா?
நான்தான் அ,ஆ டீச்சர்தானே! சாக்கடைன்னு தெரிந்தால் விலகி வழிவிடணும். தமிழ் படிக்கிறது அறிவை வளர்க்கத்தானே தவிர தவறான பாதையைத் தொட அல்ல! தொடராதுன்னு நினைச்சுதான் கோவில்கோவிலா சுற்றிவர்றேன் என்று சொன்னபடி அண்ணனுக்கு படுக்கையை விரிக்க உதவி செய்தாள்.
தொடர்ந்தால்…….என்ன செய்வதாக உத்தேசம்?
உலகத்தில் நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள். அதோ! அந்த குயில் நீ வரைந்திருக்கிறாயே! அதன் நிறம் கருப்பாக இருந்தாலும் குரல் இனிமையாகத்தானே இருக்கிறது. என் வாழ்க்கையும் அதுமாதிரிதான் என நினைத்துக்கொள்கிறேன்.
சரி! இந்த இனிப்பைச் சாப்பிடு……..
நீயும் அந்த பத்திரிகைக்காரன் சாப்பாடு போட்டமாதிரி போடறியா அண்ணா! அந்த விஷத்தை எடுக்க வண்டு இரவில் வந்தது. இந்த விஷத்தை எடுக்க யார் அண்ணா வரவேண்டும்….கொண்டா! தெரிந்தே விஷம் குடித்த சாக்ரடீஸ்மாதிரி என நினைத்துக்கொள்கிறேன் என தம்ளரை வாங்கினாள்.
வேகமாக வந்த அம்மா அவள் கையில் இருந்த தம்ளரைப் பிடுங்கி எறிந்தாள். என்ன வந்தாலும் சமாளிப்போம்டா!
பாரதியைப் படமாக்கி நாளைக்கு வரைந்து தரணும்னு ஆன்லைன்ல இருந்து மெசேஜ் வந்துதும்மா! என கண்ணைக் கசக்கியபடி வந்த பேத்தியை அணைத்துக்கொண்டாள் பாட்டி.