Madhu Vanthi

Drama Classics Others

3  

Madhu Vanthi

Drama Classics Others

2K KIDS - 8

2K KIDS - 8

8 mins
169


அன்று சனிக்கிழமை.... பள்ளிக்கு விடுமுறை என்பதால் மணி எட்டை தொட்ட பின்னரும் கனவு லோகத்திலேயே மிதந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.... ஒரு வாரத்திற்கு சேர்த்து வைத்து உறக்கத்தில் லயித்திருந்தார்கள்...

ஆனால், ஏழு மணிக்கே, வெள்ளை பேண்ட்... சந்தன நிற கேஸ்வல் ஷர்ட் அணிந்து, இடது கையில் ஜூப் வாட்ச்சும்... வலது கை மித்ரா அணிவித்த வெள்ளி போரஸ்லேட்டும் போட்டு டிப் டாப்பாக கல்லூரிக்கு கிளம்பி, வீட்டின் நட்டநடு கூடத்தில், சோஃபாவில் அமர்ந்து , ஹாயாக காலை ஆட்டிக் கொண்டிருந்தான் ஹர்ஷன்... ஏழு மணிக்கே அரக்கப்பரக்க பறந்துவிடும் இவன் இன்று ஹாயாக அமர்ந்திருக்க காரணம்.... இன்று அவர்கள் கல்லூரியில் பிரஷர்ஸ் டே.....

கல்லூரி தொடங்கி ஒரு மாதம் வரையில் அட்மிஷன், வேலையில் அனைவரும் மூழ்கி இருக்க... முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மாணவ மாணவிகளுக்கும் பழைய மாணவ மாணவிகளுக்கு இடையே நட்புறவை வளர்க்குமாறு இப்போது பிரஷர்ஸ் டே வைக்க முடிவெடுத்திருந்தார்கள்.... ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டும் தனித்தனியாக ஒவ்வொரு நாளில் விழாவை நடத்த திட்டமிட்டிருக்க.... இவர்களுக்கு இன்று முடிவாகி இருந்தது...

சொல்ல போனால் இது ஹர்ஷன் மித்ரா என இருவருக்குமான விழா தான்... மித்ரா இளங்கலை முதலாம் ஆண்டு என்றால் ஹர்ஷன் முதுகலை முதலாம் ஆண்டு... அதனால் விழாவில் என்ன செய்ய சொல்ல போகிறார்களோ என ஒரு பதட்டத்திலேயே தான் இருவருமே

இருந்தார்கள்...

"பாட சொன்னா ஓகே.... கவித இல்லன்னா வேற எதாச்சும் சொல்ல சொன்னா ஓகே .... ஆனா ஆட சொன்னா... ம்ம்ம் அது கூட ஓகே தா.... ஆனா..... வேற எதாச்சும் வில்லங்கமா செய்ய சொல்லிட்டா என்ன பண்ண???.... ", என அவன் தீவிரமாக சிந்தனையில் மூழ்கி இருந்த வேலை, "ஹர்ஷா.... நா ரெடி.... வாங்க கெலம்பலாம்....", என்றவளின் குரல் கேட்டு பட்டென பின்னால் திரும்பினான்... அவளை முதன் முறையாக புடவையில் பார்க்கும் ஆர்வத்தில்.....

அவள் முகம் பார்த்து...

நான் இங்கு தடுமாறினேன்....

விரல் தொட வேர்த்து....

உயிர் கொண்ட சிலை ஆகினேன்.....


பீ ஜீ எம் ஆக இந்த பாடல் ஓட... சில்லென்ற காற்று அப்படியே அவன் மீது மோதுவது போல் பிரமைகள் தோன்ற..... பின்னணியில் விதவிதமாக இசை கருவிகள் ஒலிக்க.... அன்ன நடையிட்டு வரும் அவளின் அழகில் சொக்கி போய் அவளை பச்சையாக சைட் அடிக்க தொடங்கினான் ஹார்ஷன்.... நல்ல வேலை... அனைவரும் உறக்கத்தில் இருந்ததால் யாரும் கவனிக்கவில்லை... அவனின் தாத்தாவை தவிர...

பறந்து விரிந்த வயலூறின் வயல் வெளிகளில்... காலை சூரியனின் பொன்னிறக் கதிர்கள் படர்ந்து இருக்கையில்... அந்த வயலில் பரவும் ஒரு விதமான நிறத்தை கொண்ட அருமையான வேலைப்பாடுகள் நிறைந்த ஃபேன்ஸி புடவையில் அது உருவி விடுமோ என பயந்து... மெல்ல மெல்ல நடந்து வந்தாள் மித்ரா....

So baby don't you

break break my

break break my heart....

So baby don't you

break break my

break break my heart....

ஹர்ஷனுக்கு இன்னும் அந்த பீ ஜீ எம் நின்றபாடில்லை.... அந்த தென்றல் காற்று இன்னும் அவனை சுத்துவது போல தான் இருந்தது.... சற்று நேரம் பின்பே அதை உணர்ந்தவன் மித்ராவிடம் இருந்து பார்வையை பிரித்தெடுக்க... அப்போதே உணர்ந்தான்... பீ.ஜீ எம் டிவியில் இருந்து வருவதையும், தென்றல் காற்று ஃபேனில் இருந்து வருவதையும்..... மித்திவுக்கு புடவை கட்ட உதவி விட்டு வெளியே வந்த சங்கரி தான் இரண்டையும் ஆன் செய்தது....

மித்ரா இன்னமும் புடவையை தான் ஆராய்ந்து கொண்டிருந்தாள்...., "பின் எல்லாம் சரியா குத்திருக்கா?... எங்கேயாச்சும் லூசா இருக்கா??.... உருவிருமா??.... ", என அவள் சுற்றி சுற்றி சரி செய்து கொண்டே இருக்க.... அவளை தலையில் தட்டிய சங்கரி...., "எல்லாம் சரியா தா இருக்கு.... வா.... வந்து சாப்புட்டு... சாப்புட்டு கெளம்புங்க ரெண்டு பேரும்....", என இருவருக்கும் தோசை ஊற்றி பரிமாறினாள்....

ஹர்ஷன் கை, தோசையை பிய்த்து வாயில் வைக்க.... கண் அவளை பிடித்து மூளைக்கு அனுப்பியது.... அவன் இதுதான் அவளை புடவையில் பார்க்கும் முதல் முறை..... உண்மையை கூற வேண்டுமானால் அவளுக்கும் இதுவே புடவை உடுத்துவது முதல் முறை.... அவளின் நீராட்டு விழாவுக்கு கூட புடவை வேண்டாம் லெஹாங்கா தான் வேண்டும் என ஒற்றைக்காலில் நின்று அடம்பிடித்து புடவையை ஒதுக்கியவள்.... Pமுதலில் ஹர்ஷன் கேட்டு கூட மறுத்து விட்டாள்...

இப்படி புடவை என்றாலே பத்தடி பின்னே ஓடும் இவள்.... இன்று கண்ணுக்கு லட்சணமாக லட்சுமி தேவியை போல் வருவதற்கு காரணம் அவளின் காதலன் கூட அல்ல கல்லூரி சீனியரின் மிரட்டல் தான்.

**********

இரண்டு தினங்களுக்கு முன்பாக

முதலாம் ஆண்டு பிஎஸ்சி ஜர்னலிசம்

எப்போதும் போல மௌனமே தன் ரூபமாய் இருக்கும் மித்ரா.., பிரேக் முடிந்தும் பத்து நிமிடம் ஆகியும் இன்னும் வகுப்பில் பிரவேசம் அளிக்காத மொழிப்பாட ஆசிரியரை தேடி.... வாயில் மேல் விழி வைத்து காத்து இருந்தாள். ஆனால் அவர் வருவதற்கான அறிகுறி தான் தெரியவே இல்லை... அவரை தேடி சென்றிருந்த ரெப்பிரேசன்டேடிவ் வந்து, "இன்னைக்கு இங்கிலீஷ் சார் டிபார்ட்மென்ட்ல பிரஷ்ஷர்ஸ் டே... சோ வர மாட்டாராம்... அடுத்த ரெண்டு பீரியடும் ஃப்ரீ பீரியட் தானே... சோ எல்லாரையும் HOD கெலம்ப சொல்லிட்டாங்க... என்று விட்டு அவனிடத்தில் அமர்ந்து கொண்டான்... ஆனால் ஒருவரும் இடத்தை விட்டு அ சையவில்லை... மாறாக தத்தம் மொபைலை தான் தூக்கினார்கள்...

(ஸ்கூல் படிக்கும்போது எப்படா வீட்டுக்கு விடுவாங்கன்னு இருக்கிறது... காலேஜ் வந்துட்டா போக சொன்னாலும் பெஞ்ச் ஓட ஓட்டிகிறது...)

காலை எட்டு மணியில் இருந்து மதியம் ஒன்றரை மணி வரையில் ஆறு பாட வேலை நடக்கும்... அதில் கலை பிரிவு மாணவர்களுக்கு மட்டும் நான்கு பாடவேலை கட்டாயம் இருக்க... மீதி இரண்டு பாடவேளை எப்போதாவது தான் இருக்கும்... ஆனால் அறிவியல் பிரிவிற்கு ஆறு பாடவேளையும் கட்டாயம் தொடர்ந்து நடைபெறும்... இந்த இறுதி இரு வகுப்பு இவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறு ஆனந்தம்... தத்தம் காதலுடன் வீட்டிலும் பேச முடியாது கல்லூரியில் வகுப்பு நடைபெற்றால் பேச முடியாது... இந்த ஃப்ரீ பீரியட் இவர்களுக்காகவே கொடுக்க பட்டது போல் தான் இருக்கும்

ஆனால் மித்ரா மட்டும் நல்ல பிள்ளை... மொபைலில் இந்த மாதிரி மொக்கையெல்லம் போடமாட்டாள்... தன்னவன் ஃப்ரீயாக இருக்கிரானா என நெராடியாக அவன் வகுப்பிற்கே சென்று பார்த்து விடுவாள்.... யாருக்கு கிடைக்கும் இந்த வரம்...

"ஹர்ஷனுக்கு இப்போது கிளாஸ் தான் நடக்கும்... அடுத்த ஹவரும் லாப் இருக்குன்னு தா காலைல சொன்னான்...", என சிந்தித்து கொண்டே டேபிலில் தலை சாய்த்து கொண்டு கனவு காண தொடங்கி விட்டாள்.... (யாராவது பேச்சு கொடுத்தால் பேசலாம்... பேச்சு தொனைக்கு ஆள் இல்லன்னா இப்டி தா தலையாலையே பெஞ்ச்ச தேய்க்க தொடங்கீரணும்)

கல்லூரி தொடங்கி ஒரு மாதம் ஆகியும் வெகு சிலருடனே அவள் சகஜமாக பேசி இருந்தாள்.... ஆனால் இப்பொழுது அவள் தனிமையில் தான் அமர்ந்திருந்தாள்.... ஆளாளுக்கு ஒரு மொபைலை காதோடு ஒட்ட வைத்துக் கொண்டு அதிலேயே கடலை வறுத்துக் கொண்டிருந்தால் இவளிடம் பேசுவதற்கு யார் இருப்பார்???....

மித்ராவிற்கு நேரம் நகரவே இல்லை... சரியென எழுந்து அமர்ந்து இன்ஸ்டாவில் வீடியோக்களை பார்க்க தொடங்கினாள்....

அவள் அதிலேயே மூழ்கி விட அப்பொழுது விருவிருவென வகுப்பினுள் நுழைந்தது ஒரு கூட்டம்.... வேறு யாரும் இல்லப்பா அவங்க டிபார்ட்மென்ட் சீனியர்ஸ் தா.

இவள் இறுதி இருக்கையில் இருந்ததாலும் மொபைலுக்கும் மூழ்கி விட்டதாலும் இவர்கள் வந்ததை அவள் கவனிக்கவில்லை....., "சீனியர்ஸ் வந்தா விஷ் பண்ணனும்னு தெரியாதா... அப்டியே ஒக்காந்து இருக்கீங்க....., "என்ற அந்த குரலில், தன்னை தான் கூறுகிறார்களோ.... என அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து நோக்க.... அப்பொழுது தான் தனக்கு முன்னால் சிலர் எழுந்து நின்றிருக்க சிலர் மட்டும் அப்படியே அமர்ந்திருப்பதைக் கண்டாள்.... சீனியர்களின் பார்வையும் அவள் மீது இன்னும் பதியவில்லை... அதனால் சமத்து பிள்ளையாக எழுந்து கொண்டாள்.

அந்த சீனியரில் ஒருவன் அனைவரையும் பார்வையிலேயே எழ வைத்த அடுத்த நொடி, "ஓகே ஓகே... ஓக்காருங்க எல்லாரும்...", என கூற..., "இதுக்கு எதுக்கு எந்திரிக்கனும்??", என வாய்க்குள் முணங்கியபடி அனைவரும் அமர..., "கம்மிங் சாட்டர்டே நம்ம டிபார்ட்மெண்ட் ஃப்ரெஷ்ஷர்ஸ் டே... சோ யாரும் புக்ஸ் கொண்டு வர வேண்டாம்..... அஸ் அ பார்ட் ஆஃப் ஃபங்ஷன்.... நாங்க யார வேணுன்னாலும் கூப்புட்டு பேர்போர்ம் பண்ண சொல்லுவோம்.... நீங்களா எதாச்சும் பன்னா நல்லது... அப்டி நாங்க ஸ்டேஜ்க்கு கூப்பிடும்போது நீங்களா எதுவும் பண்ணலன்னா நாங்களே டான்ஸ் பாட்டுன்னு எதாச்சும் செய்ய சொல்லுவோம்... திஸ் இஸ் ஒன்லி ஃபார் யூஜி.... பீஜிக்கு நோ ஆப்ஷன்.... நாங்க சொள்ளுறத மட்டும் தா செய்யனும்... ஏன்னா அவங்கள்ளாம் ஏற்கனவே இங்க படிச்சவங்க தா... சிலர் மட்டும் தா புதுசு... அவங்கள நாங்க பாத்துக்குறோம்..... சோ..... உங்களுக்கு எது வேன்னாலும் நாங்க சொல்லலாம்.... எல்லாத்துக்கும் பிரிபேரா வாங்க.....", என்று அவர் கூறி கொண்டிருக்கையிலேயே, "அப்போ நாங்க லீவு போட்டுகுவோம்....", என கம்மிய குரல் ஒன்று அவரின் குரலுக்கு கோரஸ் பாட... அக்குரல் மெல்லமாக கேட்டிருந்தாலும் வகுப்பே அமைதியில் மூழ்கி இருந்ததால் அனைவர் காதிலும் தெளிவாக விழுந்தது.

"யார்ரா அந்த புத்திசாலி....", என கேட்டபடி அந்த சீனியர் பார்வையை சுழல விட... எவரும் சிக்கவில்லை...., "இந்த மாதிரி புத்திசாலி வேலை எல்லாம் பார்க்க கூடாது..... புக்ஸ் மட்டும் தான் கொண்டு வர வேணாம்னு சொன்னேன்.... ஆனா அட்டெண்டன்ஸ் இருக்கும்.... சோ யாரெல்லாம் வரலன்னு பார்த்து தனியா சிறப்பு கவனிப்பு உண்டு.... அப்பறம்.... வெளி காலேஜ்ல இருந்து யாரையும் கூட்டிட்டு வந்துறாதீங்க பா... போன வருஷம் இப்டி வெளி காலேஜ் ப்ரெண்ட்ஸ கூட்டிட்டு வந்து... ஒரு சண்ட வந்து பெரிய பிரச்சனையா போச்சு... எல்லாருக்கும் ஐடி குடுத்தாச்துல.... தென் அத போட்டுட்டு வாங்க....", என அவர் கூறமுடிக்க.... மேற்கூறிய எண்ணத்தில் மூழ்கி இருந்த அனைவரும் அதை அப்படியே கைவிட்டார்கள்... ஆனால் அதற்கு மாற்றுவழி எதேனும் இருக்கிறதா என யோசிக்க தொடங்கினார்கள்...

அந்த யோசனையிலேயே அனைவரும் கப்சிப் என்றாகிவிட.... பின் சீனியரே தொடர்ந்தார்...., எத்தனை மணிக்கு வர வேண்டும்.... என்னென்ன நிகழ்ச்சிகள் உண்டு.... எப்போது நிகழ்ச்சி நிறைவடையும்.... பஸ் எப்போது வரும் என அனைத்தையும் கூறி விட்டு இறுதியாக, "அப்புறம் கடைசியா ஒரு முக்கியமான விஷயம்.... யூ ஆல் வில் மஸ்ட் கம் இன் டிரடிஷ்னல் டிரஸ்கோட்", என கூறி வாயை மூடிய அடுத்த நொடி, "என்னாது..... நா ஸாரி கட்டணுமா????... என வாய்விட்டே கேட்டு விட்டாள் மித்ரா....

அனைத்து தகவலையும் கூறி முடித்து வாயிலுக்கு சென்ற சீனியர் பட்டாளம் அப்படியே திரும்பி மித்ராவை நோக்கி...."என்ன மா.... ஸாரில வர மாட்டியா?...", என மிரட்டுவது போல கேட்க.., "இ.. இல்ல..... இல்ல சீனியர்... ஸாரிலயே வரேன்....", என அவர் சட்டென கேட்டதில் சற்று தடுமாறியவள் இறுதியில் சமாளித்து விட.... அவர்கள் அப்படியே திமுதிமுவென அடுத்த வகுப்பை தேடி சென்ரார்கள்.... (வந்தது ஒரு பெரிய கூட்டம்.. ஆனா பேசுனது ஒரே ஒருத்தர் தா 🤣 )

இங்கே அனைவரும் எந்தெந்த ஸாரி போடலாம் என திட்டம் போட்டு கொண்டிருக்க....., "எப்டி இருந்தாலும் நா புதுசா தா எடுக்கணும்....", என முகத்தை தொங்க விட்டாள் மித்ரா.... அவள் புது ஸாரி கட்டினால் மற்றவர்கள் பழையதை கட்டுவர்களா என்ன??.. உடனடியாக வீட்டுக்கு தகவல் கூறி... ஒரு ஐயாயிரம் ஜீ பே செய்து விட கூறிவிட்டு... இன்றே கடைக்கு செல்ல திட்டமிட்டார்கள்.... மித்ரவும் ஹர்ஷனுக்கு தெரிவிக்க அவனுக்கு அழப்பு விடுக்க... அங்கே அவன் டெஸ்க் டிராயர் கர்ர்ர்ர்ர்..... கர்ர்ர்ர்.... என வைப்பிரேட் ஆக... அதை எடுத்து பார்த்த ஹர்ஷன், பட்டென பக்கத்தில் இருந்தவன் மடியில் படுத்து விட்டான்.... அவன் அதை கண்டு கொண்டது போல் தெரியவில்லை.....

அவள் விஷயத்தை சொல்லி, "பிரெண்ட்ஸ் கூட போறேன் நீங்க கிளாஸ் முடியவும் வாங்க...", என கூற... ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு... நானும் வரேன்...", என்று விட்டு காலை கட் செய்தான்.... ஐந்து நிமிடத்தில் இந்த வகுப்பு முடிந்துவிட... அடுத்த வகுப்பை கட்டடித்து விட்டு மித்திராவுடனே கிளம்பி விட்டான்...

அவனுக்கோ எக்கச்சக்க ஆனந்தம்... அன்று ஒரு நாள், "மித்ரா.... நீ ஸாரி கட்டி நா பாத்ததே இல்ல.. அதனால ஃப்ரெஷ்ஷர்ஸ் டே-க்கு ஸாரி கட்டுறியா?..." என ஆசையாய் கேட்டதற்கு மறுத்தவள்.... இன்று வேறு வழியே இல்லாமல் தன் விருப்பத்தை நிறைவு செய்ய போகிறாள்... என்ற ஆனந்த எண்ணத்திலேயே அவளுடன் சென்றவன் கடையை அடைந்ததும் பெண்களை விட்டு விட்டு சற்று தள்ளி நின்றான்....

முதலில் செட் ஸாரி எடுக்கலாம் என முடிவு செய்திருந்தவர்கள்... பின், ஸ்கூல்ல தா யூனிபார்ம்மா இருப்போம்... இங்கேயும் யூனிபார்ம் வேணுமா??... என கூறி ஒரே நிறத்தில் வெவ்வேறு டிசைன் அல்லது ஒரு டிசைனில் வெவ்வேறு நிறம் என எடுக்க முடிவு செய்து விட்டார்கள்....

மித்ராவின் தோழிகள் கடைக்காரரை அரட்டி மிரட்டி புடவை செலக்ஷனில் இருக்க.... மித்ராவோ எதை எடுக்க எப்படி எடுக்க என ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்... அதை பார்த்து விட்டு அவளின் தோழிகள் நேராக சென்று ஹர்ஷனை இழுத்து வந்து...., "உங்க ஆளுக்கு நீங்களே செலக்ட் பண்ணுங்க அண்ணா.... அவ பாட்டுக்கு முழிச்சுட்டு இருக்கா....", என அவனையே தேர்ந்தெடுக்க கூறிவிட்டார்கள்.... அதன் படியே அவனும் தன் காதலியின் வாழ்வின் முதல் புடவையை அவனே தேர்ந்தெடுத்தான்... பச்சை நிறத்தில் தங்க நிறம் கலந்து மின்னும் ஃபேன்ஸி புடவை அது....

மற்றவர்களும் தேர்ந்தெடுத்தது... அப்படியே பிளவுஸ் தைக்கவும் கொடுத்துவிட்டு வந்தார்கள்....

*********

அன்றைய நினைவை நினைத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்த ஹர்ஷன் மித்ராவுடன் கிளம்பினான்... இந்த நேரத்தில் கல்லூரி பஸ் வாராது என்பதால் பைக்கிலேயே இருவரும் சென்றார்கள்.

அனைத்து கூட்டமும் மொத்தமாக ஆடிடோரியத்தினுள் தான் இருந்தார்கள்... இன்னும் விழா துவங்கவில்லை... ஆளாளுக்கு தத்தம் அழகை மொபைலில் சிறை பிடித்து கொண்டிருந்தார்கள்..., "மித்ரா... கொஞ்ச இங்கேயே இரு நா இப்போ வந்துரேன்...", என்று விட்டு அவன் எங்கோ சென்று விட... அவள் அமைதியாக ஒரு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்....

அனைவரும் விதவிதமாக செல்ஃபி எடுத்து கொண்டிருக்க... மித்ரா மட்டும் அமைதியாக இருப்பதை கண்டு ஒரு மாணவி அவளருகில் வந்தாள்.

"ஃபர்ஸ்ட் இயரா மா??.... ", என்று அந்த பெண் கேட்டதும் அவளை நிமிர்ந்து நோக்கிய மித்ரா ஆமா என தலையாட்டினாள்... , "ஏன் தனியா இருக்க... பிரெண்ட்ஸ் இன்னும் வரலையா??...", என அக்கறையாக விசாரித்தால் அவள் அனைவரிடமும் இருந்து அவள் தனித்து இருப்பதால் சகஜமாகப் பழக தயங்குகிறாள் என எண்ணி அவள் கேட்க...., " அம்... ஆமா... இல்ல .. இல்லக்கா... நா இன்னும் அவங்கள தேடி பாக்கல .... ", என உலர தொடங்கினாள் அவள்... அதை பார்த்து சிரித்தவள், "ஹாஹா.... பயபுடாத மா.... உங்களுக்காக தானே இந்த ஃபங்க்ஷனெ... நல்லா என்ஜாய் பண்ணுமா....", என அவளை எழுப்பி அவளுடன் அழைத்து செல்ல முற்பட..., "இல்ல இல்ல ..... வேணாம் க்கா.... நா இங்கேயே இருந்துக்குறேன்...", என தயங்கினாள் மித்ரா, "ஹே... பயபுடாத மா ..... நா உன் சீனியர் தா... யூ ஜீ தேர்டு இயர்.... ஹஃப்சானா..." என அவள் புன்னகைக்க... "பயபுடலாம் இல்ல க்கா.... இந்த ஸாரி உருவீருமோன்னு தா பயமா இருக்கு..." என மித்ரா அப்பாவியாக கூறியதில் அவள் வாய்விட்டு சிரித்துவிட்டாள்.

அதே நேரம்...., "ஹேய்... சனா.. ஹவ் ஆர் யூ.... என்றவாறே வந்தான் ஹர்ஷன்.... இப்போது அவன் சந்தன நிற சட்டைக்கு ஏற்றார் போல் சந்தன பாடர் இட்ட வெள்ளை நிற வேஷ்டி அணிந்திருந்தான்.... இதை மாற்றி கொள்ள தான் இப்போது நழுவி சென்றிருக்கிறான் என மித்ராவிர்க்கு புரிந்தது.

"ஹாய் சீனியர்... பாத்து ரொம்ப நாள்... இல்ல.. ஒரு வருஷம் ஆச்சு... எப்டி இருக்கீங்க..." என சகஜமாக பேசினாள் அவள்..., "ஹ்ம்ம்... ஃபைன் மா.... என்ன டிஸ்கஷன் ஓடுது இங்க...", என மித்ராவை பார்த்தபடி ஹாஃப்சானாவிடம் கேட்க..., இந்த பொண்ணு நம்ம ஜூனியர் தா.. அதா சும்மா பேசிட்டு இருந்தே....", என அவள் பதிலளித்தாதாள்...

ஹர்ஷன் சென்ற ஆண்டும் இதே கல்லூரியில் படித்ததால் அவளை அறிந்து வைத்திருந்தான்... அவனை விட ஒரு வருடம் இளைவள்.

"ஜூனியர் மட்டும் இல்ல மா... ஷீ இஸ் யுவர் ஃபூட்சர் அண்ணி ஆல்சோ.... மிஸ் மித்ரா தேவி... எப்டி எங்க ஜோடி பொருத்தம்?...", என மித்ராவின் கரம் கோர்த்து நிற்க... ஒரு நொடி அப்படியே ஸ்தம்பித்து நின்றவள்.... பின் மித்ரா அமைதியாகவே இருப்பதையும் அவள் முகம் சாதாரணமாக இருப்பதையும் கண்டு ஓரளவு புரிந்து கொண்டாள்...

"ஹைய்ய்ய்யோ.... சீனியர்ர்ர்ர்... வாழ்த்துக்கள்.... செம்ம பேரிங்.... ஜோடி பொருத்தம் அவ்ளோ அழகா இருக்கு... ஆனா என்ன... எனக்கு அண்ணி ஜூனியரா ஆகிட்டாங்க...", என முகம் முழுவதும் புன்னகையுடன் குதிக்காத குறையாக கத்தினாள்.... அதை கண்ட மித்ராவும் புன்னகைத்தவாறே நின்றாள்.

"சீனியர்... ஒரு போட்டோ எடுதுக்குறேன்... சேந்து நில்லுங்க....", என அவள் மொபைலை தயாராக எடுக்க... ஹர்ஷன் மித்ரா இருவரும் அருகருகே நின்றார்கள்..... , "அட.. என்ன சும்மா நிக்குறீங்க... எதாச்சும் போஸ் குடுங்க... " , என அவள் கூற.... இது ஓகே வா... என ஸ்டைலான ஒரு கூலர்ஸை மாட்டி கொண்டு மித்ராவின் தோளில் முழங்கையை வைக்க... அத்தருணத்தை ஹஃப்ஸானா படம் பிடிப்பதற்குள் அவனின் கூலர்ஸை பிடுங்கி அணிந்து கொண்டு கை கட்டி போஸ் கொடுத்தாள் மித்ரா...

சிறிது நேரத்தில் விழாவும் தொடங்கியது... அனைவரும் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என பயந்து கொண்டிருக்க... அவர்கள் நினைத்த எதுவும் நடக்காமல் நட்புடன் வேற லேவலில் அட்டகாசமாக.... சீனியர்சின் மரண கலாய்ப்பில் அழகாக நடந்தேறியது அவ்விழா...

😜😈GALAATTAS ON THE WAY 😈🤪


Rate this content
Log in

Similar tamil story from Drama