வருங்காலம் வந்தனை செய்யும்
வருங்காலம் வந்தனை செய்யும்
பசுமை நிறைந்த மரங்கள்!
நீர் நிறைந்த குளங்கள்!
வானுயர்ந்த மலைகள்!
ஆர்ப்பரிக்கும் கடல்கள்!
கரைதொட்டு ஓடும் நதிகள்!
விலங்கினங்கள்...
புல்லினங்கள்...
புழுக்கள்....
பூச்சிகள்....
ஒன்றா?இரண்டா?
இயற்கையின் படைப்புகள்?
வாழ்க்கைக்கான அத்தனையும் இங்கே! தான்
இங்கே வாழ எதுவும் கொண்டு வந்ததில்லை!
எதையும் கொண்டு சென்றதுமில்லை!
நாங்கள்....
வாழ ஓரு கூடுதான்!
உணவும் தேவைக்கும் தான்!
நாங்கள்....
நிலத்தடி நீரை உறிஞ்சி வீணாக்கியதில்லை!
ஆசை கொண்டு எதையும் சேர்த்து
வைத்த தில்லை!
இயற்கை வளங்களை அழித்ததில்லை!
ஆடம்பரப் பேய் பிடித்து ஆட்டியதில்லை!
மனிதா....
உன் வாழ்க்கைக்கான ரூட்டை மாற்றினாய்....
வீட்டை மாற்றினாய்.....
ரோட்டை மாற்றினாய்.....
எத்தனை எத்தனை....
வசதி? ஆடம்பரம்!
எத்தனை எத்தனை அழிவுகள்....
எத்தனை எத்தனை கழிவுகள்....
எல்லா வளத்தையும் அழித்து.....
அழகிய பூமியை இடுகாடாய் மாற்றினாய்.....
அடுத்து எங்கே? ஆராய்கிறாய்!
வாழ இடமின்றி தவிக்கும் நாங்கள்?
பேராசை எனும் பேய் ஆட்டுவிக்க....
கண்மூடித் திரிகிறாய்!
சற்றே சிந்தனை கொள்!
எளிய உயிராம் எங்களுக்கு நிந்தனை செய்யாதே!
வாழ வழி கொடுத்தால் உம்மை வருங்காலம் வந்தனை செய்யும்!
