வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப்பூச்சி


வண்ணம் சுமந்தே எந்தன்
எண்ணம் கவர்ந்து சென்றாயோ ?
சிறகு விரித்தே தான்
உலகையும் சுற்றி வருவாயோ ?
மலர் தேடித் தேடி நீயும்
தேன் பருகியே களிப்பதோடல்லாது
மலர்களின் மகரந்தம் சுமந்து
மகரந்த சேர்க்கைக்கும் வழிகோலுகிறாயே !
பூ காயாகி - காய் கனியாகி
கனியிலிருந்து விதை என
உலக வாழ்க்கை சக்கரத்தின்
ஆதாரமும் ஆனாயே !
உள்ளங்கவர் வண்ணத்துப்பூச்சியே !