வண்ணம் தொலைத்த வண்ணத்துப்பூச்சி
வண்ணம் தொலைத்த வண்ணத்துப்பூச்சி
கள்ளம் ஏதுமில்லாது
காற்றுக்கு என்ன வேலியென
எண்ணம் போலவே
காற்றைக் கிழித்தே
சுற்றித் திரிந்து
சிந்தை மகிழ்ந்து
வண்ணங்களால் -
எண்ணம் கவர்ந்த வண்ணத்துப் பூச்சி
துன்பப் புயலில் சிக்கியே
வண்ணம் தொலைத்து
சோர்ந்து கிடக்க ....
காலத்தின் ஒட்டத்தில் ஒருநாள்
சிறகு படபடக்க
தொலைத்த வண்ணங்களை
மீட்டெடுத்தே - வானம் ஏகிச் செல்லும் !
அந்நாளில் வானம் - அதன் வசமாகும் !