வலிக்கிறது...ஏன்
வலிக்கிறது...ஏன்


என் இதயத்தினை
பிசைந்திடும் வலியில்
என் காதலின் ஒட்டம்.
கனவுகளின் ஏமாற்றத்தால்
கலையாத விழிப்புகளில்
நித்தமும் நிம்மதியற்ற
உறக்கத்தில் புரண்டு செல்லும்
நேர் மறையான எண்ணங்களின்
வலிமையான பிடியினில்
சோர்வால் துவளும் என் இடையினை
உன் வலிமையான கரம் கொண்டு
நீ அணைப்பதாய் ஒரு நினைவு.
அதனால் மறுபடியும்
என் இதயம் துடிக்கின்றது
வலியினால் துவள்கின்றது
எங்கே இருக்கின்றாய்
என்னுடைய இனிய நண்பனே!