விழித்துக் கொள்
விழித்துக் கொள்
இளைஞனே!
உரங்களைக் கொட்டி... மண்ணை மலடாக்குகின்றனர்!
நுண்ணுயிர்களை அழித்து பயிரை வளர்க்கின்றனர்!
காடுகளை அழித்து மண்ணை மயானமாக்குகின்றனர்!
விளைநிலங்களை அழித்து விலை நிலங்களாக்குகின்றனர்!
உணவை விஷமாக்கி விஷத்தை உணவாக்குகின்றனர்!
தண்ணீரைச் சேமிக்காது கண்ணீரை விடுகின்றனர்!
குப்பைகளைக் கொட்டி பிளாஸ்டிக் மலைகளாக்குகின்றனர்!
மலைகளை அழித்து வளங்களை தொலைக்கின்றனர்!
கண்டதையும் கொட்டி கடலையும் சுடலையாக்குகின்றனர்!
குப்பைகளை எரியூட்டி காற்றை கரியாக்குகின்றனர்!
கோபுரங்களைக் கட்டி பறலையினத்தை அழிக்கின்றனர்!
உல்லாச வாழ்க்கையில் ஒய்யாரமாய் சுற்றுகின்றனர்!
ஆடம்பர வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து விட்டனர்!
பாரம்பரியத்தை தொலைத்து பகட்டாய் வாழ்கின்றனர்!
பருவ மழை பொய்த்து போனது!
பாழும் பூமி மாய்ந்து போனது!
விதை விதைச்சா காஞ்சி கிடக்குது!
விளைஞ்சி நின்னா பேஞ்சி கெடுக்குது!
பருவ நிலை மாற்றம் பாடாய் படுத்துது !
நிலாவைக் காட்டி கதை சொல்லி சோறு ஊட்டியவர்கள்!
நிலாவைக் காட்டுவர் ... சந்திரனை சொல்லுவர் !
என்றோ ஒரு நாள் இவை சாத்தியமாகும்!
எல்லாம் ஒரே நாளில் சாத்தியமா?
அதுவரை வாழ என்ன செய்வாய்?
இவர்கள் சேர்த்து வைத்த செங்கல்லை சாப்பிடுவாயா!
காசு பணத்தை உண்பாயா?
ஆற்று நீரைத் தான் அள்ளிப் பருகுவாயா?
கடல் நீரைத் தான் குடித்து மகிழ்வாயா?
முச்சடைத்து மூர்ச்சை ஆவாயா?
இந்த பூமி நாளை உனக்கு சொந்தம்!
உன் உரிமைக்காக போராடு!
மாட்டின் கொம்பை விடுத்து வாலைப் பிடித்து இழுக்காதே!
கைப்பேசியிலும் .....கணினியிலும்
தொலைத்து போகாதே!
நீ வாழப் பிறந்தவன்.... இப்பூமியை ஆளப் பிறந்தவன்!
விழித்துக் கொள்... பிழைத்துக் கொள்வாய்!
