வாய் மலரும் தமிழ்
வாய் மலரும் தமிழ்
- சொல்தல்
- கூறுதல்
- பகர்தல்
- செப்புதல்
- பேசுதல்
- விளம்புதல்
- வாதிடுதல்
- வழக்காடுதல்
- சொல்லாடுதல்
- உரையாடுதல்
- அறை கூவல்
- உரைத்தல்
- சூளுரைத்தல்
- புலம்புதல்
- அறிவித்தல்
- முனகல்
- முணுமுணுத்தல்
- பறைதல்
- பறை சாற்றுதல்
- சாற்றுதல்
- போற்றுதல்
- ஏற்றுதல்
- வாழ்த்துதல்
- உளறுதல்
- ஒப்புவித்தல்
- ஓதுதல்
- இயம்புதல்
- இசைத்தல்
- திட்டுதல்
- வசைபாடல்
- புகழ்தல்
- மொழிதல்
- கேலி செய்தல்
- புறம் பேசுதல்
- வினவுதல்
- கண்டித்தல்
- இகழ்தல்
- கடிதல்
- வசைதல்
- நிந்தித்தல்
போன்ற இன்னும்
எத்தனையோ
அருமையான
பொருள் பொதிந்த
வாய் மலரும்
தமிழ்ச்சொற்கள்
தரணியிலிருப்பினும்..
- கலாய்த்தல்
- கடுப்பேத்தல்
- கடலை உடைததல்
- போட்டு வாங்குதல்
- பல்பு வாங்குதல்
- வம்படித்தல்
- வழிதல்
- கிசுகிசுத்தல்
போன்ற தகாத
சொற்களைப் புகுத்தி
தமிழ்மொழிக்கு
களங்கம் விளைவிக்கும் திரையுலகில் சிலரும்,
சில பத்திரிக்கைகளும்,
தொலைக்காட்சிகள் சிலவும்
அன்னைத் தமிழ்மொழியின் சிறப்பினைச் சிதைக்கும் கருவிகளென்பதனால்...
இவர்கள்
தமிழுக்கு எதிரானவர்கள்..
தவறாமல்
தண்டிக்கப் பட
வேண்டியவர்கள்..
காலம் கண்டிப்பாக
தண்டிக்கும்..
இரா பெரியசாமி..
