வாழ்க்கையின் சாரம்
வாழ்க்கையின் சாரம்

1 min

168
வாழ்க்கைச் சக்கரம்
சுழன்றோடும் வேளையில்
இன்பம் துன்பமென
மாறி மாறி உழன்றே
ஓடிடும் மனித வாழ்வு !
மனிதர்கள் பலவிதம் -
அவர்தம் பார்வைகள் பலவிதம் !
அவற்றுள் -
நன்மையெது தீமையெது
சரியெது பிழையெது என்றே
ஆராய்ந்து அறிந்து தெளியலாம் !
பிறருக்கு பாடம் சொல்ல தலைப்பட்டால்
தொலைவது என்னவோ -
மன நிம்மதியும் அமைதியுமே !
காலம் காயங்களை ஆற்றும் !
வளைந்தோடும் நீரோட்டம் போன்றே
காத்திருப்போம் - காலத்தின் ஒட்டத்தோடே !
காலம் கனியும் நாளில்
அனைத்தும் நலமாகும் !
வாழ்வும் வளமாகும் !