உனக்கென நானடி
உனக்கென நானடி


புயல் காற்றிலே
புது நாணலாய்..
பெரும் கூச்சலில்
இசைப் பாடலாய்..
என் இரவை எல்லாம்
உன் நினைவுகளே.. ஆள்கிறதே
மணிகள் நீளுதே..
நீல வானம் போல..
கனவு போகுதே..
கலையும் மேகம் போல..
விழித்தெழும் போதிலும்.. நெஞ்சம்
வலித்தழும் போதிலும்..
உன் மடிஇடம் தேடியே..
என்மனம் வரும் ஓடியே..
என் சோகம் மறந்தேன்..
உன் அணைப்பினிலே..
Advertisement
le="color: black;"> என் வேகம் உணர்ந்தேன்..
உன் அருகினிலே..
தூரத்தில் நீ தெரிகையிலே..
தூறல்கள் மனதினிலே..
இடைவெளிகள் குறைகிறதே..
இதழ்துளிகள் சிதறியதே..
அருகினில் நீ வர
உன் வலக்கரம் தான் தர
தொலைவினில் மேகங்கள்
நல்வாழ்த்துகள் வழங்கிட
மழைத்துளிகள்... மேனியிலே..
நான்.. உனக்கென வாழ்கிறேன்..
நீ.. எனக்குள்ளே வாழ்கிறாய்..
எனக்கென நீயடி.. என்றும்
உனக்கென நானடி..