துளிர் விட்டன
துளிர் விட்டன
துக்கங்கள் மேகமாய்
திரண்டு எழ
கஷ்டங்கள் இடியாய்
உடலில் வந்து விழ
துன்பங்கள் மின்னலாய்
மனதை வெட்ட
கண்ணீர் மழைநீராய்
இமைகளில் பொழிய
பெருக்கெடுத்த வெள்ளமாய்
கன்னமதில் வழிய
கவலைகள் குப்பைகளாய்
அடித்துச் செல்ல...
தெரித்த கண்ணீரில்
பகுத்தறிவுச் சுடர் பட்டு
எதிர்கால கனவுகள் வானவில்லாய் வண்ணம் வீச
மழைத்துளிப் பட்டு மண்வாசமாய்
சுவாசம் மணக்க
புது எண்ணங்கள் துளிர்விட்டன!
