STORYMIRROR

Uma Subramanian

Classics

4  

Uma Subramanian

Classics

திருடி

திருடி

1 min
29

இசையே.....

மண்ணில் நான் விழுந்ததும்....

நீ என்னில் கலந்தாய்! 

தாலாட்டாய் என் செவியுள் நுழைந்தாய்...

இன்றோ...


காலையில் எனக்கு சுப்ரபாதமாய் ஒலிக்கின்றாய்!

களைப்புற்ற போது பருகிடும் பானமாய் ருசிக்கின்றாய்!

களிப்புற்ற போது போட்டிடும் ஆட்டமாய் நிற்கின்றாய் !

காதலுற்ற போது கூறிடும் கவிதையாய் இனிக்கின்றாய்! 

கவலையுற்ற போது மனதிற்கு ஆறுதலை தருகின்றாய் !

தனித்திருக்கும் போது தாங்கிடும் துணையாய் வருகின்றாய்!

தளர்ச்சியுற்ற போது எழுச்சியூட்டிடும் கீதமும் நீ!

நலிவுற்ற போது கைகொடுக்கும் நம்பிக்கையும் நீ!

நோயுற்ற போது அளித்திடும் மருந்தும் நீ!

என் செல்களுக்கு ஆற்றல் தந்திடும் குளுக்கோஸும் நீ   காலை நேர பனியும்....

மாலை நேர இளந்தென்றலும்....

இரவு நேர உறக்கமும் நீ!


இசையே.... நீ .....

என் தசையை ஆட்டுவிக்கும் மகுடி! 

என் இதயத்தைக் கொள்ளையடிக்கும் திருடி!

என் நாடி நரம்புகளை மீட்டிடும் இசை!

நீயின்றி புலர்ந்திடாது எண்(ன்)திசை!


Rate this content
Log in

Similar tamil poem from Classics