புதிய தொடக்கமே...!!
புதிய தொடக்கமே...!!
ஒவ்வொரு நாளும் இரவு கழிந்து
பகல் விடிவது புதிய தொடக்கத்திற் கே....
நடந்து முடிந்ததை எண்ணி கலங்காது
நடக்க இருப்பதை நினைத்து பயம் கொள்ளாது
இன்றைய நாள் நமக்காய் கிடைத்திருக்கும் இனிய நாள்
என்பதை நினைவில் கொண்டு
எதற்கும் கலங்காது
தோல்வி அடைந்தாலும் நிறுத்தாது
தடைகள் எல்லாம் தகர்த்தெறிந்து விட்டு
புதிய நாளை புது உற்சாகத்துடன் வரவேற்று
புன்னகையோடு தொடங்குவோம்...
வெற்றி கிட்டும் வரை ஓயாது
அனுதினமும் பயிற்சியோடு விடாது முயல்வோம்
வெற்றி நமதே....!!!
- நித்யஶ்ரீ சரவணன்
