புகை
புகை


புகைப்பிடித்தல்
உடல் நலனுக்கு கேடு!
அதை நிப்பாட்டும் வழியை
முதலில் தேடு!
நல்ல பழக்கங்களை
நாள் தோறும் நாடு!
தீய பழக்கமோ ஒழுக்ககேடு!
புகை உயிரின் பகை!
பறிபோகும் குடும்ப புன்னகை!
புகையை உள்ளிழுக்கும் போது
உனக்கும்!
வெளியே விடும் போது
மற்றவர்க்கும்!
நிகோடின் ஏனைய
வேதிப்பொருள்!
உடலின் உள்புகும்!
சுவாச பைகளின் மேல்..
போர்வைபோல படிந்திடும்!
சுவாச புற்று!
இதய தொற்று!
வந்திடும்!
விரைவிலேயே நன்மரண சேதி..
தந்திடும்!
புகை பழக்கமதை இன்றே..
தீயிலிடு!
சாய்ந்து வீழ்வதும்...
அஸ்த்தியாய்...
உதிர்வதும் நீயாய் இல்லாது!
தீய பழக்கமாக இரட்டும்!