பட்டாசு விட்டாச்சு🎇🪔
பட்டாசு விட்டாச்சு🎇🪔
தீபாவளி
நரகாசுரனின் உபகாரம்
நரசிம்மன் தந்த பிரகாசம்..
காதை கிழிக்கும்
வெடியோசை...
முறுக்கு மெல்லும்
கடியோசை...
இரண்டும் இணைந்து
கலக்கி விடும்
இனிமை எதுவென்று
விளக்கி விடும்!
புதிய ஆடையின்
நறுமண வாடை
சென்ற பண்டிகையை
சிந்தைக்குள் . கொண்டுவிடும்!
சிறுவர் வெடிக்கும்
சின்னஞ்சிரு..
வெடிகள்....
சில நேரம் இலக்கு
மாறி நடக்கும்..
மனிதரை பதம் பார்க்கும்..
என்ன சொல்லி என்ன
பக்கத்து வீட்டில்
பத்து நாட்கள்..
எரியவில்லை
அடுப்பு
இதனால் என் வீட்டிலும்
இல்லை பட்டாசு
வெடிப்பு!
இ.டி. ஹேமமாலினி