போற்றவோ ? தூற்றவோ ?
போற்றவோ ? தூற்றவோ ?
அன்புள்ள நாளேடே,
இன்றைய சூழ்நிலையில், தடைபடாமல் கல்விக்கு உதவும் கணினியை போற்றவோ, இல்லை, நாளெல்லாம் ஏதேனும் ஒருவகையில் நம்மை தன்வசமாகவே வைத்திருக்கும் அதை தூற்றவோ ?
கல்வி முதல் களிப்பூட்டும
விளையாட்டு வரையில்
அனைத்தும் கணினி மயமாக
தடைபடாமல் கல்வியும்
இணையவழி பாடமாக
வீட்டுப் பாடமுமே
சிரமமே இல்லாமல் தான்
முடிந்து போக
வாழ்வதன் அங்கமெனவே
மாறிப்போன இணையமும்
கணினியுமே - நம்
பணிச்சுமை குறைப்பிற்கா ?
அன்றி -
எளிமைப் படுத்தப்பட்ட வாழ்க்கைக்கு
பழக்கப்படுத்தியே - நம்மை
கைப்பாவைகள் ஆக்கிடவோ ?