போலியான ஆன்மீகவாதிகளும் நாத்திகவாதிகளும்
போலியான ஆன்மீகவாதிகளும் நாத்திகவாதிகளும்
மனவுறுதியுடன் இன்பங்களைத் துறந்துவிட்டேன் என்பார்கள்!
மனவலிமையுடன் உலக இன்பங்களை மறுத்துவிட்டேன் என்பார்கள்!
மனதிற்குள் இருக்கும் இறைவனைத் தேடி உலகெங்கும் அலைந்தேன் என்பார்கள்!
மகானாக மாறி இறைவனை அடைய ஆசைகளைத் துறந்தேன் என்பார்கள்!
மகத்துவமான இயற்கை இறை நிலையினை உணர கடவுள் பற்றினை மறந்தேன் என்பார்கள்!
மறந்தேன் மறந்தேன் இந்த ஆசையினை என்போரும் மறக்க இயலவில்லை இந்த ஆசையினை என்பார்கள்!
மங்கள வாத்திய இசை முழங்க இறைவனை வணங்குவதே முதன்மை ஆசை என்பார்கள்!
மக்கள் மானிட பொறுப்பினை துறந்துவிட்டு உருவத்தினை மாற்றிக்கொண்டு இறைவனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பார்கள்!
மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு சத்திரங்களைக் கட்டிவிட்டு சாமியாராக மாறிவிட்டேன் என்பார்கள்!
மடமையில் மூழ்கிய மூடர்களை தம் பாதம் தொட்டு வணங்கிப் பணத்தினை கொட்டிவிட விளம்பரம் செய்வார்கள்!
மங்களமான வார்த்தைகள் தம்மிடமிருந்து வராதா என்று மெய் சிலிர்த்து ஏங்கும் மூடர்களை ஏக்கம் கொள்ள வைப்பார்கள்!
மஞ்சள் ஆடை அணிந்து கொண்டு தாங்கள் தான் இறைவனைக் காண்பதற்கான இடைத் தரகர்கள் என்பார்கள்!
மடத்தினைக் கட்டிடமாக எழுப்பிக் கொண்ட இந்தப் போலிச் சாமியாரின் கபட நாடகங்கள் இந்தப் பக்தர்களுக்குப் புரியவில்லை என்பார்கள் கடவுள் மறுப்பாளர்கள்!
மண் சோறு சாப்பிடும் இந்த மக்களுக்கு உண்மை எப்பொழுதுதான் தெரியுமோ என்று புலம்புவார்கள் நாத்திகர்கள்!
மண் குதிரையை நம்புவோருக்கு ஈடாக இந்தப் போலிச் சாமியாரின் மடமை என்றுதான் தெளியுமோ என்று கவலை கொள்வார்கள் கல்வியில் சிறந்த சான்றோர்கள்!
