பொக்கிஷம் ஒன்று கண்டேன்
பொக்கிஷம் ஒன்று கண்டேன்
விதையாய் இருந்தேன், அந்த நொடி நான் ஒன்றுமே உணரவில்லை,
என்னை மண்ணில் விதைத்த பொழுது நான் முதல் உணர்வைப்பெற்றேன்,
சிறிய கிளை தோன்றுகையில் நான் வளர்கின்றேன் என்பதை உணர்ந்தேன்,
கிளைகள் வளர்ந்தன வேர்கள் படர்ந்தன நானும் வளர்கின்றேன்,
பூக்கள் பூத்து காயாய் வளர்ந்து கனியாய் கனிந்து மற்றவர்க்கு,
உணவை வழங்கி மகிழ்ச்சி என்னும் உன்னத உணர்வை பெற்றேன்,
சற்றும் எண்ணவில்லை வேரோடு ஒரு நாளில் மடிவேன் என்று..
நான் ஒரு மரம் தான் ஆனால் நாணும் பயனற்றுப்போவேன் என ஒரு பொழுதும் எண்வில்லை..
மரங்களை பேணுங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள், இயற்கை ஒரு பொக்கிஷம்!
