பளுதூக்குதல்
பளுதூக்குதல்


வறுமை கொடுமையை
தாங்கும் தினம்!
திறமை பசியை
தாங்கும் குணம்!
சாதனைக்கான
சோதனைகள் தரும்..
வேதனைகள் கற்றுத்தரும்!
போதனைகள்...
விலை மதிப்பற்றவை!
துணிவே துணை!
தரையிலிருந்து... சிலதுளி
வியர்வை காணிக்கை
செலுத்திவிட்டு!
நீ...எழு..
உனை துரத்திய துயரங்கள்
தோல்விகண்டு!
மண்ணை கவ்விகிடக்க!
எல்லா பலமும் ஒன்று சேர...
உன் தலைக்கு மேல்!
ஒட்டுமொத்த பளுவும்!
வெற்றியாய்!
எதையும் தாங்கும்!
வலிமையே வா!