பேனாவும் எழுத்துகளும்
பேனாவும் எழுத்துகளும்


எப்போதேனும் ஆசுவாசமாய்
பேச்சுத் துணையாய்
வந்து போன
எழுத்துக்களும் பேனாவும்
சமீப காலமாக
வழித் துணையாகின !
எண்ணங்களை விஸ்தாரமாக்க
மனது சுமந்த க"விதை" கருவுக்கு
எழுத்து வடிவு கொடுத்தே
பாமாலையாய் பேனாவும் பிரசவிக்க
பிறந்த கவிக் கிள்ளைகளை
நானும் இரசித்து
இரசித்ததை பகிர்ந்தே மகிழ்கிறேன் !
பிறரையும் மகிழ்விப்பேன் என்ற
திடமான நம்பிக்கையோடே !