STORYMIRROR

Chidambranathan N

Romance

3  

Chidambranathan N

Romance

ஒருதலைக் காதலின் அழகு

ஒருதலைக் காதலின் அழகு

1 min
241

செம்மொழித் தமிழ் மக்கள் வீரம் பேசும் உன் நெற்றித் தழும்பு வேண்டும்!


செம்மரம் போன்று வளைத்து நிற்கும் உன் கத்திப் புருவங்கள் வேண்டும்!


செம்மீன்கள் விளையாடும் உன் கூரிய விழிகள் வேண்டும்!


செம்மையாக உன்னைத் தழுவும் தென்றல் காற்று வேண்டும்!


செம்பருத்தி மனம் வீசும் உன் கரிய கூந்தல் வேண்டும்!


செம்புக் காதணி வேண்டும்!
செம்மையாக உன் காதில் விளையாடியதற்காக!


செந்தாமரை போன்ற உன் கருப்பட்டி இதழ்கள் வேண்டும்!


செண்பக மரத்தின்  பூவைப் போன்று மென்மையான உன் கைகள் வேண்டும்!


செண்பக இலை போன்று செருக்காய் இருக்கும் உன் அழகிய கன்னங்கள் வேண்டும்! 


பங்காற்று வீசும் இரவையும் கதற வைக்கும் உன் கரிய கார்கூந்தல் வேண்டும்!


செந்நாரை போன்ற அழகான உன் மூக்கிலிருந்து வரும் இதமான மூச்சுக் காற்று வேண்டும்!


செண்பக மரத்தின் அடியில் என் சோகத்தையும் சுகமாக்கும் உன் செல்ல வார்த்தைகள் வேண்டும்!


செங்கோடுபோல நீ படர்ந்து வரக் காட்டுமரமாக நானாக வேண்டும்!


செம்பஞ்சு தலையணையாய் தலைசாய்க்க உன் கைக்குட்டை வேண்டும்!


செவ்வானத்திலிருந்து வரும் ஊற்றுபோல உன் ஆங்கில அறிவு வேண்டும்!


செவிலித்தாயாய் நீ என்னிடம் பழக உன் நேசம் வேண்டும்!


செங்குவளை மலர் போன்று மென்மையாக என் தலைகோதும் உன் செல்லமான முரட்டுக் கைகளில் உள்ள கருமச்சம்  வேண்டும்!


Rate this content
Log in

Similar tamil poem from Romance