நினையாத நிமிடமில்லை
நினையாத நிமிடமில்லை


உனை நினையாத பொழுதுகள்
நியாபக மழைதனிலே
நனையாத பழுதுகள்!
ஆழ வேரூன்றிய விழுதுகள்!
சில பூச்செடிகளும்
புல்வெளிகளும் பாரம் உதிற்கும்
பனித்துளியின் ஈரமுதிற்கும்
விரல்கள் தொடும் காலையில்!
உன் நினைவது போல..
முகம் பொத்தி முகரும் வரை
வாசம் பேசா மௌனம்!
வண்ணமாகும் பொழுது!
வெட்கம் ஒரே மொழி
உன் தேசத்தில்!
கை விரல்கள் பாஷையறியும்
நேசத்தில்!
வேஷமிடா பேரன்பின்
விழிக்கணைகள்
வாழ்வின் விளிம்புவரை
வழியறியும்!
நினையா பொழுதுகள்....
அடைமழையில்
நனையா பழுதுகள்!!!!!