STORYMIRROR

Jaisri S

Others

4  

Jaisri S

Others

முரண்

முரண்

1 min
359

இதழ்கள்

உதிர்வதை தாங்க முடியாமல்

உடைவதில்லை காம்புகள்

தன் பசுமை வரை

வாழ்ந்தே தீரும்!

இலைகள் உதிர்வதை தாங்க

இயலாமல் ..

உடைவதில்லை கிளைகள்!

பசுமை இல்லா

சருகும் ஒரு பயணத்திற்கான

பாடம்!

சில நேரங்களில் 

உறவுகள் இல்லா நிலையில்

வெறுமை உரமிட்டு செல்லும்

தனிமையில்

தன் நம்பிக்கை ...

எனும் மயிலிறகு!

கடைசி ஆயுதம்!

வாழ்வெனும் போர்க்களத்தில்

வெற்றி எது? தோல்வி எது?

என்பது மட்டுமே

விளங்கவில்லை!

நல்லவர்கள் வெற்றி...தோல்வி !

வல்லவர்களின் தோல்வி.. வெற்றி!

முரண் தொடை வாழ்வு!


Rate this content
Log in