பருவ விழா
பருவ விழா


என் இரவெங்கிலும்
விண்மீனும் மின்மினியும்...
உன் ஓய்வறியா
நினைவுகளின் ஒய்யார
வருகைபதிவுகள்!
கண்னிமைக்கா கனமெல்லாம்
கனவுகளாய் நிரம்பிநிற்க!
இமைபொழுதேனும் உனைக்கான
பிணைக்கைதியாய்
நொடிகள் சொக்கிதிக்க!
நீ....
வானவில்லா!
பிறைநிலவா!
காலைப்பனியா!
திருவிழாவின் தேர்வரவா!
அடைமழையின் ஒருதுளி உறவா!
கானலின் மரக்கிளை நிழலா!
புதிர் போடும் புதிர் நீ மறுப்பதற்கில்லை!
என் விரிந்த விசும்பு நீ...
மறைப்பதற்கில்லை!