STORYMIRROR

Jaisri S

Inspirational

3  

Jaisri S

Inspirational

இனிய புத்தாண்டு

இனிய புத்தாண்டு

1 min
203

புதிய சிறகுகள்

பொருத்திக்கொண்டு!

உதிர்ந்த இறகுகளை

பொருத்துக்கொண்டு!

பல அக்குரோணி கனவுகளோடு

உன் இலக்கை நோக்கி!

ஓய்வறியா ஒரு பயணத்திற்கு

வாழ்த்தி வழியனுப்ப 

வா புத்தாண்டே!

பூங்கொத்து ஒன்று கொடு!

சிறு புன்னகை செய்!

ரணமாற்றும் மனமாற்றம் எனும் 

மாயம் செய்ய

வா புத்தாண்டே!

கை நிறைய நம்பிக்கை

நல்விதைகளேந்தி

வா புத்தாண்டே!

உறவுகள் நலமோடும்

எல்லா வளமோடும்!

இணையற்ற பலமோடு

கைகோர்க்கும் நட்போடு

வெற்றி நடைபோட

வா புத்தாண்டே!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational